உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆப்பிரிக்க நாடுகளின்‌ …

2 ஆப்பிரிக்க நாடுகளின் ... நடத்துதல், வேளாண் மக்களுக்குக் கால்நடை வளர்ப்பு, நோய்த்தடுப்பு முதலியவை பற்றிப் பயிற்சி யளித்தல், கால்நடை உற்பத்தியைக் குறித்த, தேவை யான அறிவியல் விவரங்களைச் சேகரித்து உதவுதல், மக்களிடையே எழுச்சி உணர்வை ஊட்டுதல் என் பனவாகும். ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு தட்பவெப்பச் சூழ்நிலைகளை ஒட்டி இக்கண்டத்தைப் பல மண்ட லங்களாகப் பிரித்து, அந்தச் சூழ்நிலைக்கேற்ற பயன் தரக்கூடிய கால்நடைத் தொடர்பான ஆய்வுகளைச் செய்யப் பல கள ஆய்வுநிலையங்கள் (ield stations) எத்தியோப்பியாவில் உள்ள ஆடிஸ் ஆப்பாவிலும், நைஜீரியா, கானா (Ghana), ஐவரி கோஸ்ட் (Ivory coast),, மாலி (Mali), நைஜர் (Niger), கென்யா (Kenya), போட்ஸ்வானா (Botswana) முதலிய நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர,ஆடிஸ் ஆப்பாவில் இருக்கும் தலைமையகத்தில் மைய ஆய்வுக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி, கால்நடை நலம், தீவன உற்பத்தி (feed resource), கால்நடைகளின் வேலை செய்யும்திறன், உறக்க நோய் (trypanosomiasis) எதிர்க்கும்திறன் போன்ற வற்றில் ஆய்வுகள் செய்து பெரிதும் பயன் அடைந் திருக்கின்றனர். பால் உற்பத்தி. அதிகம் பால் கொடுக்கும் ஜெர்சி (Jersey), ஃப்ரிசியன் (Frisean) முதலிய மாடுகளைப் பயன்படுத்தி ஆப்பிரிக்க மாடுகளின் பால் உற்பத் தியைப் பெருக்க. கலப்பினக் கன்றுகளை இம் மையம் உண்டாக்கி உள்ளது. இவ்வகைக் கலப்பினப் பசுக்கள் அதிக அளவில் பால் கொடுப்பதோடு, ஆப்பிரிக்காவில் நிலவும் கடுமையான தட்பவெப்ப நிலையைத் தாங்கிக் கொள்ளும் உடலமைப்பையும் கொண்டுள்ளன. காரணமாகப் பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்களுக்கு ஏற்ப மேய்ச்சல் வழிமுறைகளை வகுத்துள்ளது; மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ள பயிர்களைப் (styloz ainthus trifolium) பயிரிட உதவி செய்துள்ளது. இதனால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகமாக நிலைப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. கால்நடை இழுவை (animal traction). ஆப்பிரிக்கா வின் பல பாகங்களில் கால்நடைகளைப் பாரம் சுமக்கவும், இழுக்கவும், ஏர் உழவும் மற்ற வேலை செய்யவும் பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு செய் யப்படும் வேலைகளின் திறனை மேம்படுத்த நவீன முறை நுகத்தடி, வண்டியின் அமைப்பு, வேளாண் மைக் கருவிகளை மாற்றியமைத்தல் ஆகிய ஆய்வு களை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். உறக்க நோய். ஆப்பிரிக்காவின் பல பாகங்களில் உறக்க நோய் என்ற நோய் மிகப் பரவலாக இருப்ப தால் கால்நடை இனப்பெருக்கம் மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதோடல்லாமல், கால்நடைகளில் அதிக அளவு உயிர் இழப்பதற்கும் அது காரணமாக இருக் கிறது. இக்குறையை நீக்க இந்நோயை எதிர்த்துத் தாங்கக்கூடிய திறன் கொண்ட சில விலங்குகளைப் பிரித்தறிந்து வளர்க்கப் சீரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். பல பயிற்சியும் ஆவணமும் (training accd locumenta tion). கால் நடை ஆய்வு வளர்ச்சிக்கான பல பயிற்சி முகாம்களையும், கூட்டங்களையும், கருத்தரங்குகளை யும் பல நாட்டு ஒத்துழைப்புடன் அவ்வப்பொழுது நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள ஆய்வு அலுவலர்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது. முக்கியமாகக் குறைந்த காலப் பயிற்சி அளிப்பதி லேயே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இது தவிர, நிர்வாகம், திட்டமிடுதல், கண்காணிப்பு முதலியன சிறப்புற அமையவும் பயிற்சி அளிக்கப் படுகிறது. பயிற்சிக்காக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர் செலவு செய்யப் படுகிறது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே மிகவும் சிறந்ததாக ஓர் ஆவண (விவரத்தகவல்) மையம் (documentation centre) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நல்ல நூலகம் ஒன்றும், நுண்படச்சுருள் (microfilm service), நிலையமும் இதனால் கணிபொறி (computer) உதவியால் விவரங்களைச் சேகரித்துத் ஒட்டுண்ணிக தேவையான பொழுதுஎடுத்துப் பயன்படுத்தும் வசதி யும் உள்ளன. இந்த மையத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 7 லட்சம் டாலர் செலவு செய்யப்படுகின்றது. கால்நடை நலம். ஆப்பிரிக்க நாடுகளின் கடுமை யான தட்பவெப்ப நிலையாலும், சத்துணவுப் பற்றாக் குறையாலும் சரியான பராமரிப்பு இல்லாத தாலும் கால்நடைகள், முக்கியமாக இளம் விலங்குகள் அதிக அளவில் உயிரிழக்கின்றன. உயிரிழப்பைத் தவிர்க்கப் பல கட்டுக்கோப்பான வளர்ப்புமுறை களை இம்மையம் ஆய்ந்து பரிந்துரை செய்கிறது. புரதச் சத்து அதிகம் உள்ள பயிர்வகை உணவுகளை அதிக அளவில் கிடைக்கச் செய்கிறது. சுவாச நோய்களினாலும், ளாலும் உண்டாகும் சேதம் குறைந்து வெள்ளாடுகள். செம்மறி ஆடுகள் முதலிய கால்நடைகள் வளர்ச்சி யடைய வழிவகுத்துள்ளது. வெளி தீவன உற்பத்தி. கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர் உற்பத்தியையும், அதன் தரத்தையும் அதிகப்படுத்த அனைத்துலக ஆப்பிரிக்க நாட்டுக் கால்நடை ஆய்வு மையம் பல சீரிய முயற்சிகளை எடுத்துக் கொண்டுள்ளது. தட்பவெப்ப நிலை நிதியும் நிர்வாகமும். பன்னிரண்டு உறுப்பினர் களைக் கொண்ட அனைத்து நாட்டு அறக்கட்டளை வாரியம் (International Board of Trustees) ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஆய்வு மையத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இக்குழுவில் அமெரிக்கா, எத்தி