உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிள்‌ (செயற்கைக்‌ கோள்‌) 3

யோப்பியா, ஜிம்பாபுவே (Zimbabwe), மாலி, நைஜீரியா, செனிகல் (Senegal), மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, ஃப்ரான்சு, நார்வே, சுவிட்சர்லாந்து (Switzerland), நியூசிலாந்து, ஆகிய நாட்டுப் பேரா ளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஆண்டுக்கொருமுறையாவது சந்தித்து, ஆய்வு மையத் தின் செயல்பாடு, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிப்பார்கள். இவ்வாரியத்தின் உதவிக் காக ஒரு செயற் குழு (executive committee), நிதிக் குழு (finance committee) திட்ட அமைப்புக் குழு (planning committee) ஆகியவை இருக்கின்றன. நிர் வாகத்தை நேரிடையாகக் கண்காணிக்க ஒரு பொது நிர்வாக இயக்குநர் (director general) இருக்கிறார். இந்த ஆய்வு மையங்களில் சுமார் 80 ஆய்வு அலுவலர் களும், முந்நூறுக்கும் மேலான உதவிப் பணியாளர் களும் (supporting staff) பணிபுரிகின்றனர். 1982ஆம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குப்படி 100 லட்சம் அமெரிக்க டாலர் இந்த மையங்களின் செல வுக்காக ஒதுக்கப்பட்டது. செய்யும் சிறந்த பணியினைப் பாராட்டி ஆப் பிரிக்க நாடுகள் சார்பாக 1982ஆம் ஆண்டில் இந்த மையத்திற்குக் கோல்டுமெர்க்குரிப் பதக்கம் (gold mercury award) வழங்கப்பட்டது. நூலோதி இரா. கதிர்வேல் 1. International Livestock Centre for Africa (ILCA), The First Years, Addis Ababa, 1980 International Livestock Centre for Africa, The Annual report, Addis Ababa, 1982. 2. ஆப்பிள் (செயற்கைக் கோள்) ஆப்பிள் (APPLE) இந்தியாவின் முதல் செய்தித் தொடர்புச் செயற்கைக்கோள் ஆகும். இது Ariane Passenger Pay Load Experiment என்பதன் முதல் எழுத்துக்களின் சுருக்கம் ஆகும். அரியான் (ariane) விண்கோள் ஏவூர்தியால் (launch vehicle) விண் வெளியில் 1981 ஜூன் 19 ஆம் நாள், பயணச் செல வின்றி ஏவப்பட்ட இச் செயற்கைக்கோள், அதன் பல பயணக் கட்டங்களை வெற்றிகரமாகத் தாண்டி 1981 ஜூலை 16ஆம் நாள் நிலநடுக்கோட்டின் மேல், சுமத்ரா தீவுக்கு நேராக 102° கிழக்கில் 36,000 கிலோமீட்டர் உயர வட்டணையில் (orbit) நிலை கொண்டது. ஆப்பிள் பயன்பாட்டுத் திட்டங்கள் 1981-83 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, இனி வருங்காலத்தில் ஆப்பிளைவிடப் பன்மடங்கு, ஆற்றல் மிக்க பல பயன்பாட்டுச் செயற்கைக் கோள்களை உருவாக்கவும், அவற்றைச் செவ்வனே பயன்படுத் தவும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துக்கு ஏற்ற அ. க. 3-1 அ ஆப்பிள் (செயற்கைக் கோள்) 3 பயிற்சிகளையும், தெம்பையும் ஊட்டியுள்ளன. ஆப் பிளின் குறிக்கோள், அமைப்பு, கட்டுமானம், இயக்கம், பயன்பாடு ஆகிய விவரங்கள் கீழே தரப் பட்டுள்ளன. படம் 1.ஆப்பிள் (ஒளிப்படம்) ஆப்பிள் செயற்கைக்கோள் தற்காலத் தொழில் நுட்பங்கள் அனைத்தும் (அச்சுநிலைப்படுத்தல், சுழ லும் கதிரொளி மின்னாக்கித் தட்டுகள், வட்டணை மாற்று உந்திகள், போக்கு நோக்குக் கட்டுப் பாடு, செயல்படுத்தும் உணரிகள், கட்டுப்பாட்டுக் கணிபொறிகள், நுண்ணுந்திகள் (microthrusters), வெப்பக்காப்புக் கவசங்கள், எதிர்பலிப்புப் பலகை கள்) ஒருங்கே கொண்டது. இது மேல் ஒரு செயற் கைக்கோளையும், அடியில் ஒரு செயற்கைக்கோளை யும் இணைத்துத் தாங்கிச் செல்லுமாறு வடிவமைக் கப்பட்டது. கட்டுமானம் முற்றுப்பெற்று ஏவ ஆயத் தமாக உள்ள ஆப்பிளைப் படம் 1 இல் காணலாம். ஆப்பிள் உறுப்புக்களின் தோற்றமும் விவரமும் படம் 2 இல் காட்டப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான கால இடை வெளியில் வடிவமைக்கட்பட்டு, உருவாக்கப்பட்டு 1981இல் ஏவப்பட்ட ஆப்பிள், திட்ட உருவாக்க நாள்தொடங்கி, பயன்பாட்டுத்திட்ட முடிவுநாளான