உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவி செறிகலன்‌ 239

குழாயைக் குலைக்கும் குழாய் அதிர்வுகள் தக்க இடைவெளியுடன் அமைக்கப்பட்ட குழாய்த் தட்டு களால் குறைக்கப்படுகின்றன. இந்த அதிர்வுகள் புற எந்திர ஆற்றல் தரும் அதிர்வால் உருவாவதில்லை; மாறாகக் குழாய் மீது பாயும் ஆவியின் விரைவால் குழாய் இயற்கை அலைவெண்ணில் அலைவுறுவதால் ஏற்படுகின்றன. உயர் விரைவுள்ள தாழ் அடர்த்தி ஆவி ஒலி விரைவை நெருங்கும்போது குழாய் மீது விளையும் தூக்கு விசையும் பின் இழுப்பு விசையும் (lift and drag) அதிர்வை ஏற்படுத்துகின்றன. குறை அடர்த்தி ஆவியில் வான் கார்மேன் சுழிப்பு மிகுந்த ஊறு ஏதும் விளைவதில்லை. ஆனால் உயர் அடர்த்தி ஆவியின் வான்கார்மேன் சுழிப்பு, குறைந்த விரைவிலேயே குழாய்கட்கு ஊறு விளைவிக்கிறது. காண்க, சுழிப்பு (vortex). குழாய்கள் பொருந்தியுள்ள குழாய்த் தட்டுகள் முன்ட் எனும் உலோகம், கப்பல் பித்தளை, செம்பு- சிலிக்கான் உலோகக் கலவை அல்லது இவற்றை யொத்த அரிப்புத் தடுப்பு உலோகங்கள் ஆகியவற் றால் செய்யப்படுகின்றன. கரி எஃகுக் குழல் தகடுகள் கரி அல்லது குரோமிய நிக்கல் எஃகுக் குழாய்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கருத் திறன் நிலை யங்களில் பயன்படும் செறிகலன்களில் குழாய்த் தட்டு இருமடங்கு தடிப்புடன் வடிவமைக்கப்படு கின்றது. தட்டின் நடுவில் குளிர்த்தும் நீர் நீராவிக் குள் கசிவதைக் கண்டறிய இடைவெளி விடப்பட்டி ருக்கும் உள்தகடு கரி எஃகால் செய்யப்பட்டிருக்கும். வெளித்தகடு செம்பு உலோகத்தால் ஆனது. பரப்புவகைச் செறிகலனில் நீரைத் தவிர வேறு நீர்மம் பயன்படும் போது குழாய்த் தகடுகளுடன் இணைந்த அறைகளில் நீர்மம் நுழைவழியும் வெளி யேறும் வழியும் சுற்றோட்ட இணைப்புகளும் நீர்மம் குழாய்த் அமைக்கப்பட்டிருக்கும். இந்த தட்டின் பரப்பிலும் குழாயுள்ளும் குழிவுகள் ஏது மின்றிப் பாயும்படி அவற்றின் வடிவமைப்பு அமை யும். வெப்ப வடிவமைப்பு நிலைமைகளைப் பொறுத் தும் தேவையான அல்லது கிடைக்கும் குளிரித்தும் பாய்மக் கொள்ளளவைப் பொறுத்தும் கட்டுமான இட அளவைப் பொறுத்தும் செறிகலன்கள் ஒற்றை அல்லது இரட்டை பாய்வுடையலைகளாகச் செய்யப் படுகின்றன. பெரிய நீராவி நிலையப் பரப்புவகைச் செறிகலன்கள் நீர் பற்றாக்குறை இருந்தாலொழிய ஒற்றைப் பாய்வு உடையனவாகவே வடிவமைக் கப்படுகின்றன. குளிர்த்தும் கோபுரம் அல்லது ஆவியாக்கத் தொட்டிகள், குளிர்த்தும் நீர் கட்டுப்பாட்டமைப்பு வெப்பநிலைக் உள்ள மாபெரும் நீராவிநிலையச் செறிகலங்களில் இரட்டைப் பாய்வு நடைமுறையில் உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்வுகள் படா.ஆனால் தொழிலகச் செயல்முறைச் செறிகலன் களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாய்வு தெறிப்பு ஆகியவை, பயன் ஆவி செறிகலன் 239 களே பயன்படுகின்றன; ஆனால், ஒற்றைப் பாய்வு முறை பயன்படுத்தப்படுவதே இல்லை. செறியாத வளிமங்களை நீக்கும் எக்கிகள் இ பெயர்ச்சிவகை வெளியேற்றவகை என வகைப்படும். இதில் இடப்பெயர்ச்சி வகை எந்திர ஊடாட்ட வெற்றிட எக்கியாக வடிவமைக்கப்படு கிறது. இது அழுந்துருள் வகை காற்று அமுக்கியை அல்லது சுழலும் வகை எந்திரத்தை அல்லது பல் சக்கர எக்கியை அல்லது நுழைவு இதழ் சுழல் அமுக்கியை ஒத்த வடிவமைக்கப்படுகிறது. இடப் பெயர்ச்சி வகை வெற்றிட எக்கி பல்வேறு அளவுகள் உடைய செறிகலன்களில் பயன்படுகிறது. ஆனால் உயர் வெற்றிடத்தில் உள்ள உயர்செறிவுடைய வளி மங்களுக்கு இது பயன்படாது. ஏனென்றால் அத் தகைய நிலைமைகளில் இதன் உருவளவு கையாள பெரிதாகிவிடும். முடியாத அளவுக்குப் உடைய சுழலி குறைந்த செறியாத வளிமச் சுமை போன்றவற்றின் பரப்புவகைச் செறிகலன்களில் இது பயன்படுகிறது. காண்க, வெற்றிட எக்கி. எனவே, நடைமுறையில் நீராவித் தாரை வெளியேற்றி கள் வெற்றிட எக்கிகளாகப் பரவலாகப் பயன்படு கின்றன. இயங்கும் பகுதிகள் இல்லாமல் இருப்பதால் இவற்றைப் பேணுதலும், இயக்குதலும், நிறுவுதலும் எளிது. உயர்வெற்றிடத்தில் இவ்வகை எக்கிகள் செறியாத வளிமங்களின் சமை அதிகமாக உள்ள இடங்களில் இவை நன்கு பயன்படுகின்றன. நீராவிச் சுழலிகளில் உள்ள பரப்புவகைச் செறிகலன்களில் பயன்படுத்தும்போது இவ்வகை எக்கிகளுடன் இடைச்செறிகலன்களும், பின்செறிகலன்களும் உடன் பயன்படுத்தப்படுகின்றன. வெளியேற்று நீராவிச் செறிவு அடைந்த ஊட்டு நீர், அமைப்புக்குள் மீண்டும் செலுத்தப்படும். எனவே, ஊட்டு நீர், வெளியேற்றத்தில் உள்ள வெப்பத்தை ஈர்த்துக்கொள் கிறது. இதனால் மின் திறன் ஆக்கத்தின் திறமை கூடுதலாகிறது. காண்க, மைய விலகு எக்கி; குளிர்த்தும் கோபுரம்; இடப்பெயர்ச்சி எக்கி. நூலோதி உலோ.செ. 1. Brown A. I., and Marco, S. M., Introduction to Heat Transıfe, McGraw-Hill Book Company. New York. 1958. 2. Handbook of Air Conditioning Design, Carrier Air Conditioning Co, New York, 1965. 3. Fraas A. P., Oyisck, M. N., Heat Exchanger Design, McGraw-Hill Book Company, New York, 1968.