238 ஆவி செறிகலன்
238 ஆவி செறிகலன் செறிகலனின் உறுப்புகள். தொடுகைவகைக் செறி கலனின் உறுப்புகள் படம் 6 இல் காட்டப்பட் டுள்ளன. படத்தில் காட்டப்பட்டுள்ள குளிர்த்தும் நீர்ம அமைப்பில் பீச்சு குழல் தட்டுகளும் (baffles ) பட்டுத்தெறிக்கும் பரப்புகளும் ஆவியின் திசைக்கு எதிராகத் தொடர்ச்சியாக அருவிபோல, குளிர்த்தும் நீர்மத்தைச் சீராகப் பரப்பும்படி அமைந்துள்ளன. செறியாத வளிமத்தைக் குளிர்த்தும் பிரிவும் மேற் கூறிய குளிர்பொருள் பிரிவில் உள்ளடங்கியுள்ளது. ஆவிசெறியும் அதேநேரத்தில் செறியா வளிமமும் ஈரம் நீக்கப்பட்டு அமுக்கிச் செறியச் செய்யப்படு கிறது. குளிர்பொருளைப் பிரித்துச் சீராகப் பரப்பும் மற்ற கட்டமைப்புகள் உலோக ஞெகிழி, வெங்களி மண்வளைய அடுக்குகளாகும். பெரும்பாலான தொழிலகவகைச் செயல்முறைச் செறிகலன்கள் எதிரெதிர்ப் பாய்வமைப்புடையன. தாரைவகைச் செறிகலன்களின் செறியாவளிமங்கள் குளிர்த்தும் நீர் மத்திலேயே கலந்திருக்கும். பிறகு அவை அதிலிருந்து பிரிக்கப்படுகின்றன, வால்குழாய் (tail pipe) வளி மண்டலக் கம்பமாகச் (barometric coloumn) செயல் பட்டு, வெந்நீர்க் கிணற்றில் குளிர்த்தும் நீர்மத்தை வெளியேற்றி, வெற்றிட எக்கியின் (vaccum pump) தேவையைத் தவிர்க்கிறது, தாழ்மட்டச் செறிகலன் களில் வளிமண்டலக்குழாய் இருக்காது. பதிலாக எக்கிகள் குளிர்த்தும் நீரை வெளியிழுத்துப் பிரிக் கின்றன. வகைமை (typical) பரப்புவகைச் செறிகலன் களின் உறுப்புகள் படங்கள் 2,3,4,5,7 ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளன. செறிபரப்புக்கள் செம்படி உலோகக் கலவையால் 0.5. முதல் 1 அங்குலம் வெளி விட்டமுடையவாறு குழாய்களாக அமைகின்றன. 'சிற்சில பயன்பாடுகளில் அலுமினியமும் செய்பொரு ளாகப் பயன்படுகிறது. நிக்கல் உலோகக்கலவைகளும் குரோமியம் -நிக்கல் எஃகும் பயன்படுவது உண்டு. செறியா வளிமத்தைக் குளிர்த்தும் பரப்புகளும் தலை மைச் செறிபரப்புகள் செய்யப்படும் பொருளாலேயே செய்யப்படும். செறியா வளிம அரிப்புத்திறன் அதி கமாக உள்ள சிறப்பு நிலைப் பயன்பாடுகளில், அரிப் புத் தடுப்புப் பொருள்கள் பயன்படுகின்றன. வழக் கமாக ஆவி வெளிப்பரப்புகளின் மூலம் செறியச்செய் யப்படுகின்றன (படம் 2,3,4,5). ஆவி அரிப்புத் தருவ தாயின் அவை உட்புறப் பரப்பில் செறியச் செய்யப் படுகின்றன (படம் 7). இதில் குழாய்கள் வழக்கமாக எளிய வகைகளாகவே அமையும். குறைந்த கடத்த முள்ள நீர்மத்தால் குளிர்த்தும்போது குழாய்கள் விசிறி போன்ற தகட்டு மடிப்புகள் (fans) உள்ள படிச் செய்யப்படுகின்றன. இதற்குக் குழாய்ச் சுவ ரின் தடிப்பளவுக்கு நீட்சியுள்ள தகட்டு மடிப்புகள் பயன்படுகின்றன. இரண்டு மடிப்பிடையில் உள்ள செறிபொருள் செறிதல் நிகழும் பக்கப் பரப்பில் வெப்பக்காப்பியாகச் செயல்படா வண்ணம் இம் மடிப்புகள் இடைவெளிவிட்டு வடிவமைக்கப்படு கின்றன. வளிமத்தாலோ காற்றாலோ குளிர்த்தப் படும் செறிகலன்களில் குழாயின் பரப்பைப் போலப் பத்து மடங்கு பரப்பு உருவாகும் அளவுக்கு உயர முள்ளபடி மடிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. அரிப்பு மிக்க சூழலிலும் குழாயின் ஒரு பக்க அரிப்பு மறுபக்கத்திலும் உள்ளதை விட வேறுபடும்போதும் தொழிலகச் செயல்முறைச் செறிகலன்களில் ஈருலோ கக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 10 12 11 8 ECHE 3 6 7 படம் 7. குத்துநிலைச் செயல்முறைப் பரப்புவகைச் செறிகலன் கலன் 4 1. ஆவி நுழை வழி 2. குழல் தகடு 3. கொள் குழல் தாங்கியாகச் செயல்படும் குழல் தட்டு 5. குளிர்த்தும் நீர்மம் நுழை வழி 6. குழல் தகடு 7. செறியா வளிம வெளியேற்ற வழி 8. செறி பொருள் வெளியேற்று வழி 9, வெந்நீர்க்கிணறு 10. கூடு விரிவதற்கான மூட்டு 11. குதிரைகள் அல்லது தாங்கல்கள் 12, குளிர்த்தும் நீர்ம வெளியேற்று வழி