உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஆவினம்‌, கால்நடைகளின்‌

254 ஆவினம், கால்நடைகளின் நோய்த் தடுப்பு மருந்துகளும் பயன்களும் மருந்துகள் தயாரிக்கப்பட்டன. 1942 ஆம் ஆண்டு நடந்த உலகப் போரின் விளைவால் கோவை மாநக ருக்கு இந்நிலையம் மாற்றப்பட்டு அங்கு ஆறு ஆண்டு கள் பணி புரிந்தது. 1948 ஆம் ஆண்டு இந்நிலையம் இராணிப் பேட்டைக்கு மாற்றப்பட்டது. சுமார் 129 ஏக்கர் நிலப்பரப்புடைய இந்நிலையத்தின் கட்டடங்கள் தொடக்கத்தில் இறைச்சி உலர்த்தும் தொழிற் சாலைக்காக இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. ஊனீர் நிலையம் இவ்விடத்தில் பணி மேற்கொண்ட பிறகு இந்நிலையத்திற்குத் தேவையான கட்டட மாறுதல்கள் செய்யப்பட்டன. 1950ஆம் ஆண்டு இந்த நிறுவனம் கால்நடை உயிரின மருந்து, மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரால் வழங்கப்பட்டுப் பிறகு 1954 ஆம் ஆண்டு கால்நடைத் தொத்துநோய்த் தடுப்பு மருந்து நிலை யம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு கால் நடை நோய் நீக்கும் மருந்துகள் தயாரிப்புப் பிரிவு (Pharmaceuticals division) ஒன்று ஏற்படுத்தப் பட்டுநல்ல முறையில் இயங்கி வருகிறது. இந்நிலையத்தின் பணியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, உயிரின மருந்துகள் மற்றும் நோய் நீக்கும் மருந்துகள் தயாரித்தல், நோய் ஆய்வு புது உயிரின மருந்துகள் உருவாக்கவும், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவரும் உயிரின மருந்துகளின் தரத்தை உயர்த்தவும் ஆய்வு மேற்கொள்ளுதல் ஆகியன வாகும். துகள். இந்நிலையத்தில் தயாரிக்கப்படும் உயிரின மருந் மாடுகளுக்கான உயிரினத் தடுப்பு மருந்துகள். இவை, உறைநிலை உலர் வெக்கை நோய் ஆட்டுத் திசுத் தடுப்பு மருந்து (goat tissue rinderpest vaccine), உறைநிலை உலர் வெக்கை நோய்த்திசுவளர் தடுப்பு மருந்து, (tissue culture rinderpest vaccines) கோமாரி நோய்த் தடுப்பு மருந்து (foot-and mouth disease vaccine) நுண்ணுயிரித் தடுப்பு மருந்துகள் bacterial vaccines), அடைப்பான் தடுப்பு மருந்து anthrax spore vaccine) சப்பை நோய்த் தடுப்பு மருந்து (படிகாரச் சார்பு) (black quarter alum preci- pitated vaccine) தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து (படிகாரச் சார்பு) ( haemorrhagic septi aemia alum precipitated vaccine) OgлML AMLÚVÁ தடுப்பு மருந்து (எண்ணெய்ச் சார்பு) haemorrhagic septicaemia oil adjuvant vaccine), தாரை நோக்காடு, தடுப்பு மருந்து, கருச்சிதைவுத் தடுப்புமருந்து (வகை 19) (brucella abortus strain 19 vaccine) கழலை நோய்த் (bovine lymphangitis vaccine) தடுப்புமருந்து என்பனவாகும். ஆடுகளுக்கான உயிரின மருந்துகள். இவை, ஆட்டு அம்மைத் தடுப்பு மருந்து (sheep pox vaccine), துள்ளு நோய்த் தடுப்பு மருந்து (enterotoxaemia vaccine), ஆட்டுத் தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து (sheep pasteurellosis vaccine), Garum Corus தடுப்பு மருந்து, அடைப்பான் நோய்த் தடுப்பு மருந்து என்பனவாகும். கோழிகளுக்கான உயிரின மருந்துகள். இவை, உறை நிலை உலர் கோழிக்கழிச்சல் தடுப்பு மருந்து (கோமரோவ் வகை) (ranikhet disease vaccine komarov strain), உறைநிலை உலர் கோழிக்கழிச்சல் தடுப்பு மருந்து (raniket disease vaccine), உறைநிலை உலர் கோழி அம்மைத் திசுவளர் தடுப்பு மருந்து (cell culture fowl pox vaccine.), உறைநிலை உலர் புற அம்மைத் தடுப்பு மருந்து (pigeon poxvaccine), கோழிக் காலராத் தடுப்பு மருந்து (fowl cholera vaccine), மேரக்ஸ் நோய்த் தடுப்பு மருந்து (Marek's vaccine) என்பனவாகும். நாய்களுக்கான உயிரின மருந்துகள், இலை வெறி நோய்த் தடுப்பு மருந்து (rabies vaccine), நாயினக் குடும்ப நச்சுயிர் நோய்த் தடுப்பு மருந்து (canine distemper vaccine) என்பனவாகும். இந்நிலையத்தில் தயாரிக்கப்படும், நோய் கண்டறிய உதவும் உயிரின மருந்துகள். இவை கருச்சிதைவு நோய் கண்டறியும் காப்பு மூல மருந்து (brucella abortus tube antigen), பாலில்கருச்சிதைவு நோய் கண்டறியும் காப்பு மூல மருந்து (brucella abortus milk ring antigen), பி. பி.எல்.ஓ. நோய் கண்டறியும் காப்பு மூல மருந்து (P. P. L. O. antigen), சால்மோனெல்லா நோய் கண்டறியும் காப்பு மூல மருந்து (salmonella coloured antigen) இந்நிலையத்தில் தயாரிக்கப்படும் விளாவிகள் (diluents), சோடியம் பை-கார்போனேட் குளுக்கோஸ் விளாவி (sodium bi-carbonate glucose diluent), தாங்கும கரைசல் (tris buffer), சோடியம் சிட்ரேட் விளாவி (sodium citrate diluent), உப்புநீர் (normal saline), தாங்கல் உப்புநீர் (buffer saline என்பனவாகும். இந்நிலையத்தில் தயாரிக்கப்படும் நோய் நீக்கும் மருந்து கள் / களிம்புகள். இவை, அயோடின் களிம்பு, (iodine ointment), சாலிசைலிக் அமிலக் களிம்பு (salicylic acid ointment), கந்தகக் களிம்பு (Sulfur ointment), துத்தநாக ஆக்சைடு களிம்பு (zinc-oxide ointment) உயிரினத் தடுப்பு மருந்துகளால் கால்நடைக்கு ஏற் படும் பயன்கள். இந்நிலையத்தில் தயாராகும் உயிரினத் தடுப்பு மருந்துகள் பலவகைகளில் பயன்படுகின்றன. கால்நடைகளுக்கு ஏற்படும் தொத்துநோய்களைத் தடுப்பதுடன் நோயினால் ஏற்படும் இறப்பையும் தடுக்கின்றன. கறவை மாடுகளில் இருந்து பால் கிடைக்கிறது. உழைக்கின்ற மாடுகளால் வேளாண் மைக்கும் போக்குவரத்திற்கும் வசதி ஏற்படுகிறது. நோயைத் தடுப்பதனால் பொருளாதாரச் சேமிப்பு ஏற்படுகின்றது.