ஆழ்கடல் கலம்செலுத்தல் முறை 261
ச }}}} } ஆழ்கடல் கலம்செலுத்தல் முறை 261 கடல் உயரம், மீட்டரில் படம் 3. 500 400 300 200 100 மேற்கோள் பார்வையிடல் முறை பின்பற்றி ஆழ்கடல் ஒலிவகைச் செலுத்திலங்கி கலம்செலுத்தல்முறை. 0 I 2 3 4 5 டைவெளி, கடல் மைலில் படம் 4.ஆழ்நீரில் செலுத்திலங்கியின் நீழல் வட்டாரம். 6 கணிபொறிகள் துல்லியமாக x-y ஆயங்களில் கலத் துக்கும், செலுத்திலங்கிகளுக்கும் இடையில் உள்ள தொலைவை நமக்குக் காட்சித் திரையில் காட்டும். செலுத்திலங்கி கலம்செலுத்தும்முறை மிகவும் நம்பகமானதாக அமைகிறது. இதில் ஏற்படும் பிழை ஓரிரு மீட்டர்களாகவே உள்ளது. ஒரே செலுத்திலங்கியைப் பயன்படுத்தியும் இத் தகைய கலம்செலுத்தல் முறையைப் பின்பற்றலாம். படம் 1 இல் அகச்செலுத்திலங்கி உள்ள அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு நீர் மூழ்கிக்கப்பலில் அகச் செலுத்திலங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப் பிட்ட இடம் வந்ததும் அது கீழிறக்கிவிடப்படும். பல அளவுகளை எடுத்துச் செலுத்திலங்கியின் இருப் பைக் கலத்தின் பாதை தெரிந்துள்ளபோது கண்டறி யலாம். இந்தச் செயல்முறை நன்கு வெற்றி அடைய நல்லதொரு மேற்கோள் பார்வையிடல் முறை (dead reckoning) தேவை. இவ்வமைப்புகள் பின்னர் விவரிக்கப்படும். இந்த முறை சிறிய பரப்பை ஆயும் போது மட்டுமே பயன்படும். பேரளவு ஆய்வுகளுக் கும் தேட்டப் பயணங்களுக்கும் (missions) இம்முறை பயன்படாது. மேற்கோள் பார்வையிடல் முறை. ஒரு மேற்கோளி லிருந்து கலத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய, ஆழ் கடல் கலங்களில், கலங்களின் தொலைவையும். திசையையும் அறியும் உணரிகள் (sensors) தேவை. இதற்கு டாப்ளர் சோனார் என்ற கருவி பயன்படு கிறது. தரையின் அடியைச் சென்றடைந்து திரும்பும்