262 ஆழ்கடல் கலம் செலுத்தல் முறை
262 ஆழ்கடல் கலம் செலுத்தல் முறை குறிப்பலைகளின் அலைவெண் பெயர்ச்சியைத் தீர் மானிப்பதன் மூலம் தரையில் செல்லும் வேகத்தை யும் கலத்தின் முன், பின், இடைநிலை வேகத்தையும் கண்டறியலாம். துடிப்பு வகை, தொடர் அலைவகை டாப்ளர் சோனார்கள் பல தற்காலத்தே வடிவமைக் கப்பட்டுள்ளன. துடிப்பு வகையில் ஒரு அலைவெண் தடம்பற்றும் சுற்றுவழி தான்பெறும் துடிப்பை உணர்ந்து செயல்படுகின்றது. இதனுடைய துல்லியம் மிகவும் உயர்ந்தது ஆகும். இது கடல்தரைமட்டத் திலிருந்து 200 மீட்டர் உயரம் வரை துல்லியமாக உணரும் திறன் உடையது. தில் இடைவெளி வாயில் அமைப்புகள் (range gating) உள்ளன. இவை இரைச்சலைக் குறைக்கும். சில டாப்ளர் சோனார் கள் நீரின் எதிர்முழக்கத்தால் செயல்படும்படி வடி வமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வெற்றி பெற்றால் தரை மட்டத்திலிருந்து கலம் உள்ள தொலைவு செலுத்திலங்கியின் கட்டுப்பாட்டு இடைவெளிக்கு அப்பால் இருந்தாலும், கலத்தின் தொலைவையும், திசையையும் கண்டறிய வழிவகை ஏற்படும். இந்தச் சோனார்கள் X-Y ஆய விரைவு களிலிருந்து கலம் பயணம் செய்த தொலைவைக் கண்டறிகின்றன. இவற்றின் துல்லியம் 69 விழுக்காடு ஆகும். கடல் அடியிலிருந்து கலம் உயரம் கூடும் போது இத்துல்லியம் குறைந்து கொண்டே வரும். டாப்ளர் சோனார் மட்டுமின்றி எல்லாக் கலங் களும் ஒரு சிறிய எடையைத் தொங்கவிட்டு மேற் கோள் பார்வையிடலை நிகழ்த்துகின்றன. இதற்கு உறழ் முறை அமைப்பு (inertial system) என்பது பெயர். குத்து நிலைத் திசை, வடக்குத் திசை இரண் டுக்கும் தனிச்சிறப்பு அளவு தருமாறு இவை வடி வமைக்கப்பட்டுள்ளன. டாப்ளர் சோனார் செயல் படாத இடைவெளியில் மேற்கோள் பார்வை முறை இருப்பைக் கண்டறிய உதவவேண்டும். இவை இரண் டையும் தவிர டாப்ளர் சுழல் திசைக்காட்டி gyro- compass) ஒன்றும் பயன்படுகிறது. இது உயர் துல் லியமுடையது. கல இயக்கத்தில் உள்ள அலைவுகட்கு ஆட்படாதது. தற்கால நீர்மூழ்கிகள் மூன்று ஒற்றை அச்சு வளிமத்தாங்கல் சுழல் திசைக்காட்டிகளும் இரண்டு முடுக்க அளவிகளும் (accellerometers) 20 செ.மீ. விட்டமுடைய பெட்டிக்குள் அடங்குமாறுவடி வமைக்கப்படுகின்றன. காண்க, மேற்கோள் பார் வையிடல் முறை, உறழ்முறை வழிகாட்டமைப்பு, சோனார். அகக்கலம் செலுத்தல் உணரிகள். மேற்கூறிய உணரி கள் மட்டுமின்றிக் கலம் செலுத்துவதற்காகப் பயன் படும் உணரிகளும் கப்பல்களில் பயன்படுகின்றன. திசையுடைய நீரியல் பேசிகள், கலம் செலுத்துவதற் காகக் கப்பல்களில் பயன்படுகின்றன. படம் 5. கலம் செலுத்துவதற்காகப் பயன்படும் வேறுவகை உணரிகள் மூன்றைக் காட்டுகின்றது. முதல்வகை கிடைநிலைத் தடுபொருள் சோனார் ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரில் கிடை நிலையில் உள்ள பொருள்களைக் கண்டறியும், இது, மாறாத செலுத்த அலைவெண்ணால் குறிப்பேற்றிய சோனார் ஆகும். இந்த அமைப்பு, கலத்தின் திசையை யும் ஒவ்வொரு செலுத்திலங்கிக்கும் உள்ள தொலை உயர. வையும் தரவல்லது. இரண்டாவது வகை ஆழச் சோனார் ஆகும். கடல்தரையில் இருந்து உயரத்தையும் கடல் மேற்பரப்பிலிருந்து உள்ள கிடைநிலைத் தடுபொருள் சோனார் 60*1 குத்துநிலைத் தடுபொருள் உயர், ஆழ் சோனார் சோனார் 15° கூம்பு 2 கற்றை படம் 5. கலம் செலுத்தும் மூவகைச் சோனார்களின் இருப்புகள்