உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஆழ்கடல்‌ தொலைபேசி

266 ஆழ்கடல் தொலைபேசி tial stablized emitron) முதலிய பலவகைத் தொலைக் காட்சிப் படப்பிடிப்புக் குழல்கள் இதற்குப் பயன் படுகின்றன. படிம ஆர்த்திகான் மிகவும் உணர்திறன் (sensitivity) மிக்கது.உமிழ்வான் உமிழ்வான் படவிளக்கம் மிக்கது. விடிகான் உயர்திறன், படலிளக்கம் இரண் டையும் போதுமான அளவுக்குக் கொண்டது. இது மிகவும் ஏற்புடையதாக கையாளத்தக்க அமைப்புடை யது. உயிரியல் சிறப்பியல்புகள் உள்ள செய்திகளைப் படம்பிடிக்கும்போது தொலைமுறை இமைக் கட்டுப் பாட்டு அமைப்பும்குவியமும் வில்லை தேர்ந்தெடுப்பும் தக்க ஒளி அமைப்பும் தேவை. காண்க, தொலைக் காட்சி முறைப் படப்பிடிப்புக் கருவி. கடற்படையினராலும் துறைமுகப் பொறியாளர் களாலும் ஆழ்கடல் தொலைக் காட்சி பயன்படுத்தப் சோதனைக்கும் உயிரியல் படுகிறது. ஆழ்கடல் ஆய்வுகளுக்கும் உவர்நீர் மற்றும் நன்னீர் வாழ் உயி ரிகள் ஆகியவற்றைப் பற்றி அறியவும் இது பயன் படுகிறது. அளவியலாகவும், பண்பியலாகவும் ஆழ் கடல் தாவர மிதவையுயிரிகள், ஆய்வுயிரினங்கள் வாழும் உயிரிலாப் பொருள்சூழலும் பிடிக்க இது உதவுகிறது. காண்க, கடலியல். உலோ.செ. ஆழ்கடல் பகுதி ஆழ்கடல் பகுதி என்பது 200மீ. ஆழத்திற்கும் கூடுத லான ஆழமுள்ள கடலின் அடித்தளப் பகுதியாகும். கடலடித் தளம் கடற்கரைப் பகுதி (littoral zone), ஆழ்கடல் பகுதி (abyssal zone) எனும் இரு பிரிவு களைக் கொண்டது. கடல் மேற்பரப்பிலிருந்து 200 மீட்டர் ஆழம் வரை கடற்கரைப் பகுதி எனப்படும். ஆழ்கடல் பகுதி என்பது 200 மீட்டர் ஆழத்திலி ருந்து 11,000 மீட்டர் வரை அமைந்துள்ள பகுதியா கும். ஆழ்கடல் பகுதியினை மேலும் ஆழப் படுகைப் பகுதி (archibenthic zone), பேராழப் படுகைப் பகுதி (abyssalbenthic zone) என இரு பகுதிகளாகப் பிரிக் கலாம். ஆழப் படுகைப் பகுதி 200 மீட்டர் முதல் 1,100 மீட்டர் வரையும், பேராழப் படுகைப் பகுதி 1,100 மீட்டர் முதல் 11,000 மீட்டர் வரையும் நீடித் திருக்கும். 50மீ கடல் மேற்பரப்பு ஆழம் 0மீ ஆழ்கடல் தொலைபேசி ஆழ்கடல் ஒலியைச் செய்தித் தொடர்புச் சாதனமா கக் கொண்டு செய்தித் நிகழ்த்தப்படும் பேச்சுச் தொடர்பு அமைப்பே ஆழ்கடல் தொலைபேசி எனப் படும். இது மரபுத் தொலைபேசியை (telephone) யொத்ததே. தொலைபேசியில் ஒரு மின் கம்பி வழியாக மின்குறிப்பலைகள் செய்தியைக் கொண்டு செல்கின் றன. ஆழ்கடல் தொலைபேசியில் கடல் நீர் வழியாக ஒலியலைகள் செய்தியைக் கொண்டு செல்கின்றன. இந்த ஒலி ஓர் ஒலி வீழ்த்தியால் (projector) உண்டாக் கப்பட்டுச் செலுத்து முனையில் செலுத்தப்படுகிறது. பெறுமுனையில் (receiving end) ஒரு நீரியல் பேசி (hydrophone) இந்த ஒலியைப் பெறுகின்றது. ஒலி வீழ்த்திகளிலும் நீரியல்பேசிகளிலும் ஆழ்கடல் மாற்றிகள் பயன்படுகின்றன. கடற்கரைப் பகுதி பொதுவாக நிலைத்த அலைவெண் உள்ள ஓர் ஊர்தியலை, பேச்சலையால் வீச்சுமுறைக் குறிப்பேற் றம் மூலம் குறிப்பேற்றப்பட்டுப் பெறுமுனையில் குறிப்பிறக்கப்படுகிறது. ஆழ்கடல் தொலைபேசியின் பயன்பாட்டு எல்லை சில கிலோ மீட்டர்களே. ஒலி மிக வேகமாக ஒடுங்கி விடுவதால் இது ஏற்படுகிறது. வானொலி அலை பரவ இயலாத கடலடியில் கம்பி யில்லாமல் செய்தித் தொடர்பு கொள்வதே இம்முறை யின் சிறப்பாகும். இது நீர்மூழ்கிக் பெரிதும் பயன்படுகின்றது. காண்க, ஒலி,ஆழ்கடல். கப்பல்களில் உலோ. செ. ஆழப் படுகை, ஆழ்கடல் பகுதி இருள் பேராழப்படுகை படம் 7. கடலில் அடுக்கமைவு சிறப்பியல்புகள். ஆழ்கடல் பகுதி மீ 1,100 மீ 200LS 11,000 குளிர்ந்த நீரையும் நிலையான இருளையும், அதிக அழுத்தத் தையும் ஒரே சீரான வெப்ப நிலையையும் கொண்டு தனக்கே உரிய சிறப்பியல்புகளுடைய ஒரு மாபெரும் இணையற்ற சூழ்நிலை மண்டலமாகத் திகழ்கிறது. ஏனெனில், இவ்விருள் சூழ் ஆழ்கடல் பகுதியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்கக் கடல் நீரின் இயற் பியல், வேதியியல் உயிரியல் பண்புகள் தத்தம் இயல் பினின்றும் திரிந்து முற்றிலும் மாறுபட்டுப் பல விந்தையான விலங்கினங்களையும் தீர்வு காண முடி யாத பல சிக்கல்களையும் தன்னகத்தே கொண்டு, உலகப் பரப்பில் பெரும் பகுதியைக் கவர்ந்துள்ளது. இந்நீர்ப்பகுதியானது காற்றின் அசைவு, இரவு பகல்