உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்கடல்‌ பகுதி 267

மாற்றம், சூரியன் நிலா ஈர்ப்புகள், பருவமாற்றங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுச் சலசலப்பில்லாத அமைதியானதொரு சூழ்நிலையைப் பெற்றுள்ளது. கடல் தோன்றிய காலந்தொட்டு இப்பகுதியில் முடி வில்லாத நிலையான இருள் தான் குடி கொண்டுள் ளது. ஆழ்கடல் உயிரினங்களிடையே காணப்படும் ஏராளமான மாற்றங்கள், வகைகள், விந்தையான வடிவமைப்புகள் ஆகியவற்றிற்கு இச்சூழலே கார ணம் ஆகும். கடல்மேற்பரப்பிலிருந்து கீழே இறங்க இறங்கக் கதிரவனின் வெவ்வேறு நிற ஒளிக்கற்றை கள் படிப்படியே மாற்றமடைந்து, முடிவில் மங்கி விடுகின்றன. குறைந்த ஒளித்தன்மை உயிரினங் களின் நிறத்தை வெகுவாகப் பாதிக்கின்றது. கதிரவ னின் ஒளிக்கற்றையின் நீண்ட செங்கதிர்கள் தாம் கடல் மேற்பரப்பிலிருந்து 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் சென்று முதலில் உட்கவரப் படுகின்றன. அடுத்தபடியாக 200 மீட்டர் ஆழம் வரை ஆரஞ்சுக் கதிர்கள் உறிஞ்சப்படுகின்றன. 200 மீட்டர் ஆழத்தில் ஞாயிற்றின் வெம்மை, ஆரஞ்சு மஞ்சள் நிறம் ஆகியவை சிறிது சிறிதாக மறைந்து, பச்சை, நீலப் பச்சை நிறங்களாக மாற்றப்படுகின் றன. 200 மீட்டருக்கப்பால் பச்சைக் கதிரைக் காட்டி லும் நீல நிறக் கதிர்களே ஏறத்தாழ 1000 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிப் பாய்கின்றன. இதற்கும் கீழே ஒளியானது முற்றிலும் மங்கி ஒரே கும்மிருட் டாகி விடுகிறது. அவ்வப்போது பளிச்சிடும் உயிரினங் கள் உமிழும் உயிரொளியைத் (bioluminescence) தவிர வேறு ஒளி இந்த ஆழ்கடல் பகுதியில் கிடை யாது. இப்பேராழப் பகுதியில் பகல் இரவு என்று வேறுபாடு இல்லை. அழுத்தம் மிகவும் கூடுதலா கவே அதாவது ஏறத்தாழ 1000 வளிமண்டல அளவு இருக்கிறது.ஆழ்கடல் நீரில் உள்ள இந்த உயர் அழுத் தமானது இங்கு வாழும் உயிர்களை நசுக்கி விடுவ தில்லை. ஏனெனில் இவ்வுயிர்த் திசுக்களின் அழுத்த மும் ஆழ்கடல் நீரின் அழுத்தமும சமமாக இருக்கும். வெப்ப நிலை இடைவெளி (temperature range} 3°C யிலிருந்து 0°Cக்கு உட்பட்டு ஒரே சீராகக் குறைந்தே காணப்படுகிறது. இதனால் ஆழ்கடல் பகுதியினைக் குளிர்பாலைவனம் என ஆழ்கடல் வல்லுநர்கள் அழைக்கின்றனர். ஆழ்கடல் பகுதியில் உவர்மை (salinity) ஒரே சீராக 34.64 விழுக்காட்டுக்கும் 34.97 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட குறுகிய இடை வெளிக்குள்ளே (narrow range) அமைகிறது. இக் கடல் மட்டத்தில் ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கிறது. அதிகமான அளவு ஒரு லிட்டருக்கு 5.88 பரு செ.மீ. இருக்கும். ஆழ்கடலின் இச்சிறப்பியல்பு களெல்லாம் ஒன்று சேர்ந்து, மனிதனுடைய ஆளும் எல்லைக்கு அப்பாற்பட்ட இப்பேராழப் பகுதியில் அமைதியான,ஒளியற்ற, ஓசையற்ற, அசைவற்ற தொரு தனிப்பட்ட சூழ்நிலையினை உருவாக்கியுள் ளன. இந்தச் சூழலுக்கேற்ப ஆழ்கடல் உயிரிகளின் வடிவமைப்பும், வண்ணங்களும் அமைந்துள்ளன. ஆழ்கடல் பகுதி 267 ஆழ்கடல் உயிரினங்களின் தகவமைப்புகளும் வாழ்க்கை முறைகளும். சூரிய ஒளியின் சுவடே தென் படாத ஆழ்கடல் பகுதியில் விலங்கினங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற ஆழ்கடல் விலங்குகள் பேராழப்பகுதியில் (abyssal zone) வாழ்கின்றன. அவை விந்தையான தக வமைப்புகளையும் பெற்றுள்ளன. குறைந்த ஆழமுள்ள கடல் மேற்பரப்பில் வட்ட மிடும் கண்ணாடி நிறம் கொண்ட ஜவ்வு மீன்கள் (jelly fishes) கடலடி ஆழத்தில் பழுப்பு நிறம் பெற் றுத் திகழ்கின்றன. அநேக ஆழ்கடல் மீன்கள் கடல் மேல்மட்டத்தில் நிலவும் வெள்ளி மீன்கள் போலல் லாமல் பெரும்பாலும் இருள் சூழ்ந்த சூழ்நிலைக்கேற்ற வாறு கருப்பு, கருநீலம் கரும்பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. எப்பொழுதுமே இருண்ட சூழ்நிலையில் வேட் டையாடி இரை தேட வேண்டிய காரணத்தால் ஆழ் கடல் மீன்களின் கண்களில் கூம்புகளைக்(cones)குறை வாகவும் மங்கிய ஒளியில் காண உதவும் கோல்களை (rods) அதிக அளவிலும் பெற்றிருக்கின்றன. இவ் வாறே நிலப்பகுதியிலும் இரவில் திரியும் விலங் குகளின் கண்களும் அமைகின்றன. குகையில் வாழ்கின்ற விலங்கினங்களைப் போலவே ஆழ்கடல் விலங்குகள் பல சீர்கேடுற்ற கண்களை யுடையனவாய், குருடாய் இங்குமங்கும் தடுமாறித் திரிகின்றன. தனை ஈடு செய்வதற்கு நீண்ட உணர் கொம்புகள் (antenna), தொடுஉணர் உறுப்புகள் (tactile organs) மெல்லிய நீண்ட துடுப்புகள் ஆகிய வற்றைப் பெற்றுள்ளன. ஆழ்கடல் சூழலில் வாழ் வதற்குத் தொடுவுணர்வுகள் பெரிதும் துணை புரிகின் றன. ஆழ்கடல் பகுதியில் ஆற்றல் நிறைந்து காணப் படுவதால் இம்மென்மையான சேற்றில் நடக்கத்தக்க வாறு முன்னாப்சிஸ் (munnopsis) எனும் ஐசோ பாடில் (isopod) நீண்ட துடுப்புப் போன்ற இணை யுறுப்புகள் உடலின் அடிப்பாகத்தில் உள்ளன. ஸ்டோமியாட்டாயிடுகள் (stomiatoids) எனும் குடும் பத்தைச் சேர்ந்த சில மீன்களுள் சிலவற்றிற்குச் செதில்கள் கிடையா. இவற்றின் உடலில் (bathophi- lus sp.) தொளதொள எனத் தசை தொங்கிக் கொண்டிருக்கின்றது. எலும்புகளும், தசைகளும் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்துள்ளன. இம்மீன் களின் வாய் பெரிதாகக்காணப்படும். இருப்பினும் இம்மீன்களின் அபரிமிதமான உருவமைப்புகள் எந்த விதத்திலும் இடையூறாக இருப்பதில்லை. அவை, அசைவற்ற அமைதியான ஆழ்நீரில் பல்வகைப்பட்ட நுண்ணிய அமைப்புக்களை வளர்த்துக் கொள்ள முடிகின்றன. எடுத்துக்காட்டாக சிலவகை ஆழ்கடல் மீன்களும், தூண்டில் மீன்களும் (angler fishes)