286 ஆள்காட்டிக் குருவி
286 ஆள்காட்டிக் குருவி முடையது; இடையில் ஆங்காங்கே நின்று எதிர்ப் படும் எறும்பு கறையான் வெட்டுக்கிளி, வண்டு ஆசியவற்றைப் பிடித்து உண்ணும், இது மிக எளிதா கவும் தாழ்வாகவும் பறந்து செல்லும், பறக்கும்போது கரிய இறக்கைகளில் ஒரு வெண்ணிறக்கோடு போன்ற அமைப்பு வெளிப்படுகிறது; கால்கள் நீண்டிருப்பதால் பறக்கும் போது இறக்கைகளுக்குப் பின்புறம் அவை நீட்டிக் கொண்டு காணப்படுகின்றன. இதன் இனப்பெருக்கக் காலம் மார்ச் மாதத்தி லிருந்து மே வரை நீடிக்கிறது. உலர்ந்த தரையில் மண்ணைக் கிளறி ஒன்று அல்லது இரண்டு செ.மீ. ஆழத்துக்குச் சிறுபள்ளம் தோண்டி அதில் பெண் பறவை 4 முட்டைகளை இடுகிறது. முட்டைகள் வெளிர் சாம்பல் நிறத்தில் சாம்பல் நிறப் புள்ளி களுடன் காணப்படுகின்றன. இந்த நிற அமைப்பு அவை இடப்படும் சூழ்நிலையின் நிறத்துடன் ஒத் திருக்கிறது. ஆண் பறவையும் பெண் பறவையும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கின்றன. கடும் வெப்பக் காலத்தில் நீர்நிலைகளுக்குச் சென்று இறகு களை நீரில் நனைத்துக்கொண்டு வந்து முட்டை களின் மேல் அமர்வதால் அவற்றின் வெப்பம் தணிக் கப்படுகிறது. குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பின்பும்கூட இவை இவ்வாறு செய்கின்றன. சிறு குஞ்சுகள்; இளம்பழுப்பு நிற இறகுகளில் அடர்ந்த பழுப்பு நிறக் கோடுகளுடன் உள்ளன. முட்டை களுக்கோ குஞ்சுகளுக்கோ இடையூறு ஏற்படும் போது அவற்றின் பெற்றோர் கலவரத்துடன் 'ட்விட் ‘ட்விட்' என்று பெருங்கூச்சலிட்டுக் கொண்டு போல அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறப்பதுடன் எதிரியைத் தாக்குவதைப் அவ்வப்போது விரைந்து தாழப் பறக்கின்றன. சிவப்புமூக்கு ஆள்காட்டிக் குருவி (Red wattled lapwing, Vanellus indicus). இதுவும் புறாவின் அளவுள்ளது. மஞ்சள்மூக்கு வகையைப் போலன்றி இவை நீருள்ள இடங்களிலும் குளங்கள் வயல்களுக் கருகிலும் புற்களடர்ந்த இடங்களிலும் சிறுகூட்டங் களாக வாழ்கின்றன. அவ்வப்பொழுது குன்றுகளி ஆங் லும் இவற்றைக் காணலாம். காங்கு பறந்து சென்று சிறுபூச்சிகளைத் துரத்திப் பிடித்துக் கொண்டு, எதிரிகளின் வருகையையும் பொதுவாக படம் 1. மஞ்சள்மூக்கு ஆள்காட்டிக் குருவி