ஆள்காட்டிக் குருவி 287
ஆள்காட்டிக் குருவி 287 படம் 2. சிவப்புமூக்கு ஆள்காட்டிக் குருவி கண்காணித்தபடி இருப்பதைக் காணலாம். வை பொதுவாக மனிதர்களையோ இரைபிடிக்கும் விலங்குகளையோ காணநேரிடும் போது விலகிச் சென்றுவிட்டாலும் இப்பறவைகள் முட்டைகளுடன் அல்லது குஞ்சுகளுடன் இருக்கும்போது, அவற்றுக்கு இடையூறு ஏற்பட்டால் சுற்றிச் சுற்றிப் பறந்து கடுங்குரலிட்டு ஒலியெழுப்புகின்றன. Did he do it அல்லது Pity to do it என்பது போல ஒலிக்கும் இவற்றின் தனித்தன்மையுடைய ஒலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இப்பறவையின் முதுகுப்புறம் பழுப்பு நிற மானது; மார்பு, கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் உள்ள இறகுகள் கரிய நிறமுடையவை; வயிற்றுப் புறம்; வெண்மையானது. கரிய தலையில் கண்களுக் கருகில் சிவந்த நிறத் திட்டுப் போன்ற அமைப்புச் காணப்படுவதால் இது சிவப்பு மூக்கு ஆள்காட்டி எனப்பெயர் பெற்றது. கண்களுக்குப் பின்புறத்தி லிருந்து தொடங்கி வெண்ணிறப் பட்டையொன்று கழுத்து வழியாகச் சென்று வெண்ணிற வயிற்றுப் வை பகுதியுடன் சேர்கிறது. இப்பறவை இரவில், நில வொளியில் இரைதேடித் திரிகிறது. பொதுவாகப் பகல் நேரங்களில் அடிக்கடி இரையைத் தேடி உண் பது உண்டென்றாலும், பெரும்பாலும் இவை ஓடை களில் காணப்படும் சிறு பாறைகளிலும் வயல் வரப்பு களிலும் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். காலையிலும் மாலையிலும் சுறுசுறுப்பாக ரை தேடுகின்றன. இந்தியாவில் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. மெதுவாகச் சிறகடித்துப் பறந்து செல்லுகின்றன. ஆனால் தம் குஞ்சுகள் அல்லது முட்டைகளைத் தாக்க வரும் விலங்குகளைக் கண்டால் வெகுவிரைவில் பெருங்கூக்குரலிட்டுக் கொண்டு பறந்து சென்று விரட்டுகின்றன. இவை கறையான், கம்பளிப் பூச்சி, வண்டு, பூச்சி, மெல் லுடலி ஆகியவற்றை உண்ணுகின்றன. தாவரப் பொருள்களையும் உண்ணும். இனப்பெருக்கக் காலத்தில் தரையைக் கிளறி சிறிய பள்ளத்தில் பெண்பறவை நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் சாம்பல் நிறத்தில் கருநிறப்புள்ளி