288 ஆள்வள்ளி
288 ஆள்வள்ளி களுடையன. ஆண், பெண் ஆகிய இருபாற் பறவை களும் சுமார் 28 இலிருந்து 30 நாள்கள் வரை முட் டைகளை அடைகாக்கின்றன. மஞ்சள்மூக்கு வகை யைப் போலவே இப்பறவைகளும் இறகுகளை நனைத் துக்கொண்டு வந்து முட்டைகளின் மீது அமர்கின் றன. ஒரு பறவை அடைகாக்கும்போது மற்றொன்று அதைப் பாதுகாத்து இடையூறு நேர்ந்தால் எச்சரிக் கையொலி எழுப்பும், சிறு குஞ்சுகளும் முட்டைகளும் அவை வாழும் இயற்கைச் சூழ்நிலையுடன் அழகுறப் பொருந்தும் பாதுகாப்பான நிறம் பெற்றவை. இன் னல் நேரும்போது குஞ்சுகளுடன் இருக்கும் பெரும் பறவைகள் எச்சரிக்கைக் குரல் கொடுக்கின்றன. உடன் சிறு குஞ்சுகள் கற்களுக்கிடையில் சென்று ஒளிந்து கொள்கின்றன அல்லது தலையைத் தரையில் கிடத்தி அசையாமல் உயிரற்றவை போல் தோற்றமளிக்கின் றன. அத்தருணங்களில் அவற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை. இடையூறு நீங்கிவிட்டதன் அறிகுறி யாகத் தாய்ப்பறவை குரல் கொடுத்தவுடன் அவை வெளியில் வந்து ஏதும் நடைபெறாதது போல இரை தேடத் தொடங்குகின்றன. முட்டைகளிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் உடல் முழுவதும் சிறு தூவி இறகு களுடன் காணப்படுகின்றன. இவை உடல் அளவைத் தவிர ஏனைய பண்புகளில் பெரிய பறவைகளைப் போன்றே காணப்படுகின்றன. ஆள்காட்டிக் குருவிகள் சாராட்ரிஃபார்மிஸ் (charadriformes) வரிசையில் சாராட்ரிடே (chara- dridae) குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நூலோதி ஜெ.கௌ. 1. Henry, G.M., A Guide to the Birds of Ceylon, Oxford University Press, London, 1971. 2. Ali, Salim, Dillon Ripley, S., Handbook of the Birds of India and Pakistan, Oxford University New Delhi, 1980. ஆள்வள்ளி தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் (Brazil) என்று நகரம் ஆள் வள்ளிக் கிழங்கின் தாயகமாகும். இங்கி ருந்து இது ஆப்பிரிக்கா இந்தியா, தென் கிழக்கு ஆசியா, பசிபிக் கடல் தீவுகள் முதலிய இடங்களுக்கு பரப்பப்பட்டது. ஸ்பானியர்களால் இந்தியாவில் முதன் முதலில் தென்மேற்குக் கடற்கரைப் பிரதேசங் களில் இது பயிரிடப்பட்டது. திருவிதாங்கூர் கார்த் திகைத் திருநாள் மன்னரால் அரிசிக்குப் பதிலாக மாவுச் சத்து தரும் உணவுப் பொருளாக இது அறி முகப்படுத்தப்பட்டது. தற்காலத்தில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், அசாம் முதலிய மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பெயர் = சிறப்புப் பண்புகள். இது ஒரு பூவிதழ் வட்டத்தை யுடைய (monochlamydeae) இருவிதையிலைத் தாவ ரக்குடும்பங்களில் ஒன்றாக யூஃபோர்பியேசியைச் (Euphorbiaceae) சார்ந்த மானிஹாட் எங்குலண்ட்டா (Manihot esculenta Crantz M. ultilissima Pohl). என்ற தாவரப் கொண்டது. ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, சவ்வரிசிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, ஆள்வள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு என இதற்கு வழக்கில் பல பெயர் கள் உள்ளன. ஆங்கிலத்தில் கசாவா (cassava) அல் லது டாபியோக்கா (tapioca) என்று அழைக்கப்படு கிறது. இது 2 முதல் 5 மீ. உயரம் வரை வளரக் கூடிய புதர்ச் செடியாகும். இதன் வேர்கள் டைவில் பருத்துக் கிழங்குகளாக மாறுகின்றன. தண்டு சாம்பல் நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக்கூடும்; மேலும் பல வடுக்களைப் பெற்றிருக் கும். இலைகள் 5 முதல் 9 பிளவுகளைப் பெற்று விரல்களைப் போன்று, வெளிர் பசுமை நிறத்துடன் (unisexual); இருக்கும். மலர்கள் ஒருபாலானவை நாள் சைம் (cyme) மஞ்சரியில் செடியின் நுனியிலமைந் தவை; ஆண், பெண் மலர்கள் இரண்டும் ஒரே மஞ் சரியில் காணப்படும்; கனி வெடிகனியாகும். கனி மூன்று அறைகளைக் கொண்டது; ஒவ்வோர் அறை விதையொன்று யிலும் ஆமணக்கு விதையொத்த உண்டு. பொறுக்கு வகைகள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மரவள்ளி ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது. இது வரை கோ.1, கோ.2, என கூறப்படுகின்ற இரு புதிய வகைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. கோ. 1 வகை மரவள்ளி மாவுச் சத்தைக் கூடுதலாகவும் (35 விழுக்காடு), வாழ் நாள் குறைவாகவும் (9 மாதங்கள்), விளைச்சல் விளையும்.) அதிகமாகவும் (எக்டேருக்கு 35 டன் எல்லா மேலும் மாவட்டங்களிலும் பயிரி டக்கூடிய தன்மையும் பெற்றிருக்கின்றது. கோ.2 வகை 35 விழுக்காடு மாவுச்சத்தையும்,81 முதல் 9 மாதங்கள் வாழ்நாளையும், முன்னதைவிட அதிக அளவு விளைச்சலையும் (38 டன்/எக்டேர்) வல்லது. இந்த இரு வகைகளையும் நச்சுயிரி நோய் (virus disease) தாக்காது. இது தவிர கேரள மாநி லத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மையக் கிழங்கு ஆராய்ச்சி நிறுவனமும் புது வகைகளைத் தோற்று வித்திருக்கின்றது. அதில் எச். 97, எச். 162, எச் போன்றவை 226, எச், 1687, எச்.2304 அதிக விளைச்சல் தரவல்லவை. சேலம் மாவட்டம் ஆத் தூரில் உள்ள மரவள்ளிக் கிழங்கு ஆராய்ச்சி நிலை யம் முள்ளுவாடி-1 (2371) என்ற வகையை வெளி யிட்டுள்ளது. தர பயிரிடும் முறை. மரவள்ளிக் கிழங்குச் சாகுபடிக்கு 25° முதல் 29° செ.மி.வரை வெப்ப நிலையுள்ள பகுதி ஏற்றது. மழை 100 முதல் 150 செ.மீ. வரை