292 ஆளிகள்
292 ஆளிகள் களைப் போல உண்ணாவிட்டாலும், சாப்பிடலாம். இதனால் தீங்கில்லை. சமைத்துச் இயற்கையாக விளையும் ஆளிகள் நமது சிறிய தேவைக்கேற்பக் கிடைக்கின்றனவே என்று, இவற் றைத் தொடர்ந்து அறுவடை செய்துகொண்டே போனால் ஆளிப் படுகைகளே (oyster beds) இல்லா மல் போக நேரிடும். இதனால் இளம் ஆளிகள் தோன்றவும் வழியற்றுப் போய்விடும். வளர்க்கப் படும் ஆளிகள் இயற்கைப் படுகைகளில் உள்ள வற்றை விடப் பன்மடங்கு அதிக வளர்ச்சியும் பெருமளவு சதைப்பற்றும் கொண்டிருக்கின்றன. எனவே எளிதில் நம் தேவை நிறைவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து, நமது கொள்ள அந்நியச் செலாவணியைப் பெருக்கிக் முடியும். இந்நிலையைப் பெறவும், நம் நாட்டின் விலங் கினப் புரதம் செழிக்கவும். வேலை வாய்ப்புப் பெருகவும், அறிவியல் வழியில் ஆளிவளர்ப்பில் நாம் பெற்ற வெற்றியை மக்களுக்குத் தெரிவிக் கவும், தேவையானோர்க்குப் பயிற்சியளிக்கவும் ஆளி வளர்ப்புக்கேற்ற கடற்கரையோரப் பகுதிகளில் பொருளாதாரத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் ஆளி வளர்ப்பை மேற்கொள்ளவும் ஏற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆளிச்சதை உற்பத்தி பெருகுவதோடு ஆளி ஓடுகளின் உற்பத்தியும் மலை யெனக் குவியும். இவை சுண்ணாம்பு, சிமென்ட் உற் பத்திக்குப் பெருமளவு உதவும். எனவே, ஆளி வளர்ப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும். ஆளி வளர்ப்பில் முன்னணியில் நிற்கும் உலக நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, பிரான்சு, எண் ஆளி இனம் 1.ஆஸ்ட்ரியா எடுலிஸ் 2. ஆ.லூரிடா 3.கிராசோஸ்ட்ரியா 4. 5. ஜைகாஸ் கி.வர்ஜினிகா சுமெர்சியாலிஸ் 6.கி. கிளோமெரா 7. இ.எராடிலியா 8. கி. ஆங்குலேட்டா 9.கி. ரைசோபோரே 10. கி.சிவலாரிஸ் படம் 1. உணவு ஆளி கொரியா, மெக்சிகோ ஆகியவை உலகின் மொத்த ஆளி உற்பத்தியில் (5,91,386 டன்கள்) முறையே 39,22,12,9, 7 விழுக்காடுகளைப் பெற்றுத் தருகின் றன. மீதமுள்ள உலக நாடுகள் அனைத்தும் உற்பத்தி செய்யும் மொத்த அளவு, 11 விழுக்காடே. பிறநாடு களில் வளர்க்கப்படும் ஆளிகளை அட்டவணையில் காண்க. உலகில் மொத்த ஆளி உற்பத்தி, கிட்டத்தட்ட 6 வட்சம் டன் ஆகும். இதில் 38 விழுக்காட் டிற்கும் மேல் (2, 29, 899 டன்கள்) உற்பத்தி செய்து ஜப்பான் உலகில் முதலிடம் பெற்றுள்ளது. செயற்கை முறையில் இளம் ஆளிகளை வளர்க்கும் அறிவியல் நுணுக்கங்களை, ஜப்பானியர் நடைமுறையில் கொண் டிருப்பதால் அவர்கள் வளர்ப்பினங்கள் மிக வேக மாகப் பெருகுகின்றன. அவை நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. மேலும் அவர்கள் நீள் கயிற் (Ostrea edulis) (0. lurida) (Crassostrea gigas) (C. virginica) (C. commercialis) (C. glomera) (C. eradelta) (C. angulata) (C. rhizophorae) (C. rivalaris) வளர்க்கும் நாடுகள் ஐரோப்பா அமெரிக்கா சீனா, ஆஸ்திரேலியா ஜப்பான், கொரியா அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஹவாய் நியூசிலாந்து பிலிப்பைன்ஸ் ஐரோப்பியக் கடற்கரை வெனிசுலா ஜப்பான்