உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளிகள்‌ 291

பொறுத்து ஒருவகை மற்றொருவகையாக மாறலாம். இதன் அளவு இனிப்புக் கிழங்கில் கிலோவுக்கு 35 முதல்130 மி.கி. வரையிலும் கசப்புக் கிழங்கில் குறை வாகவும், தோலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால் வேகவைத்தவுடன் அல்லது காயவைத்தவுடன் நச்சுப் பொருள் முழுதும் நீங்கும். கிழங்கு உணவுப் பொரு ளாக மட்டுமல்லாமல் சவ்வரிசி (sago), சேமியா, மாவு, அப்பளம் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு மூலப் பொருளாகவும் (raw material) பயன்படுகின் றது. இதைச் சார்ந்த 800 தொழிற்சாலைகள் சேலம், தருமபுரி மாவட்டங்களில் இருக்கின்றன. இது தவிர மரவள்ளிக் கிழங்கு செடிகளிலிருந்து எரிசாரா யம் (fuel alcohol) தயாரிக்கலாம். இலைகளைக்கால் நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளையும் பக்குவம் செய்யப்பட்ட இலைகளை யும் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். அரிசிக்குப் பதிலாகக் கிழங்குகள் பயன்படுவது மட்டுமல்லாமல், இவற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற மாவு, தின்பண் டங்கள், பிஸ்கோத்துகள் (biscuits) ஆகியவற்றைச் செய்வதற்கும் பயன்படுகின்றது. கிழங்கின் மாவு, பசை செய்வதற்குப் பயன் படுகின்றது. குங்குமம் செய்வதற்கு உட்பொரு.ராக இதன் மாவு பயன்படு கின்றது. குளுக்கோஸ் (glucose), டெக்ஸ்ட்டிரின் (dextrin) தயாரிப்பதற்கும் மாவுப் பொருள் பயன் படுகின்றது. இதன் திப்பி (tippi) மாடு, பன்றி ஆகி யவற்றிற்குத் தீவனமாகப் பயன்படுகின்றது. சு.தம்புராசு நூலோதி The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984, ஆளிகள் ஆளிகளைப் (oysters) பற்றியும், அவற்றை வளர்க் கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளல, உற் பத்திக்கும், வேலைவாய்ப்புக்கும், செழிப்புக்கும், இணைந்த பல தொழில்கள் உருவாவதற்கும் வாய்ப் பளிக்கும். ஆளிகள் கடற்கரையோரப் பாறைகளின் மீதும், உப்பாற்றுப் படுகைகளிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் பெருமளவில் விளைகின்றன. கடலின் ஓத இடைப் பகுதிகளிலும் அடுத்த ஓரளவு ஆழம் வரையிலும் இவை பரவி விளைகின்றன. இவை வேறு பட்ட உப்புத்திறனைத் தாங்கும் திறன் பெற்றுள்ள மையால் ஒதவற்றத்தின் போது நீர் மட்டத்துக்கு மேலே காணப்பட்டாலும் தம்முள் அடைத்துக் கொள்ளக் கூடிய நீரால், நீருக்கு வெளியிலும் வாழக் கூடும். கூடி வாழும் குணம் ட த்த இலை, எளி தாகப் பெருமளவில் இனப்பெருக்கம் கூடியவை. அதிகப் பிழைப்புத் திறனுடனும் நல்ல அ.க. 3-19அ செய்யக் ஆளிகள் 291 வேகத்துடனும் இவை வளரக் கூடியவை. உலகில் ஆண்டொன்றுக்கு உற்பத்தியாகும் ஆளிகளின் 5,91,386 அளவு டன்களாகும். இவை சராசரி கிழக்குக் கடற்கரையிலுள்ள உவர் நீர்ப் பகுதிகளி லும், மேற்குக் கடற்கரையின் தென் பகுதிகளிலுள்ள உவர்நீர்ப் பரப்புகளிலும், கடலோரங்களிலும் அதிக மாக விளைகின்றன. மெல்லுடலியான ஆளிகள் சிப்பி (bivalves) வகை யைச் சேர்ந்தவை. ஆயினும் அதே வகையைச் சேர்ந்த மட்டிகளினின்றும் (clams), கடற்காய்களினின்றும் (mussels) முற்றிலும் மாறுபட்டவை. ஆளியின் மெல் லுடலை மூடும் ஓடுகள் மிக உறுதியாகவும், குறிப் பிட்ட வடிவின்றியும் இருக்கும். ஓடுகள் இரண்டும் கடற்காய்களில் உள்ளவை போல் பக்கவாட்டிலின்றி அடிப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும். ஆளியின் அடிப்பக்க (அல்லது கீழ்) ஓட்டின் பெரும்பகுதி பாறைகளில் ஒட்டியிருக்கும். மேலோடு மட்டுமே திறந்து மூடும்படி இருக்கும். ஆளிகள், கூட்டம் கூட்ட மாக, ஒன்றோடு ஒன்று, அதனோடு இன்னொன்று என ஒட்டி வாழும் வாழ்வு முறையால் ஏற்படும் இடநெருக்கடியால், அவற்றின் ஓடுகளின் உரு வமைப்பு பெருமளவு மாறுபடலாம், ஆளியின் ஓடு கனமானதாக இருந்தாலும் அதனுள்ளிருக்கும் சதைப் பகுதி அதன் எடையில் 10 முதல் 15 விழுக்காடு அளவே இருக்கும். ஆளியின் மென்மையான சதை உப்புச்சத்துடன். சமைக்காமலே கூட உண்ணச் சுவையாய் இருக்கும். ஆளியைப் பிளந்து, அதன் சதையை நன்கு கழுவி அதன் மீதுசற்று எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்துக்கொண்டால், நுங்கு போல் உண்ணலாம். த ஆளியின் சதையில் 9.8 விழுக்காடு புரதமும், 2.1 விழுக்காடு கொழுப்பும், 5.6 விழுக்காடு மாவுச் சத்தும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி. 1, வைட்ட மின் பி. 12 போன்றவையும், நிக்கோட்டினிக் அமில மும் நிறைந்துள்ளன. கால்சியம், பாஸ்பரம், இரும்பு, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக் களும் காணப்படுகின்றன. இத்தனைச் சத்துக்கள் இருந்தும் ஆளி போன்ற மெல்லுடலிகளை விரும்பி உண்ண இன்னமும் நம் நாட்டு மக்கள் முன்வர வில்லை. கடற்கரைப் பகுதியில் வாழும் ஏழை எளி யோர் மட்டுமே இவற்றை ஓரளவு நாடுகின்றனர். நம் நாட்டில் அறிவியல் அறிந்த பலர் இவற்றில் நோய்க் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன எனக் கருதி உண்ணத் தயங்குகின்றனர். ஆனால் உலக கில் பல நாட்டினர், ஆளியை அன்றாட உணவின் ஒரு பகுதியாகக் கொண்டு உண்டு வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, நெதர்லாந்து முதலிய நாடுகளில் ஆளியின் தேவை அதிகமாக உள்ளது. சில நாட்டினர் இவற்றைப் பச்சையாகவும் உண்கின்றனர். நாம் நமது உடல் நலம் கருதி, அவர் அரங்