332 ஆற்றல், இயற்கை வளிம
号 332 ஆற்றல், இயற்கை வளிம பிற்குரியது. எடுத்துக்காட்டாக 75 செ.மீ. விட்ட மும், 1.25 செ.மீ. அங்குல சுவர்த்தடிப்புமுடைய குழாயின் எடை. 1 கி.மீ. நீளத்திற்கு 250 டன்களுக் கும் மேலாக இருக்கும். களை பல நெடுந்தொலைவுக் குழாய் வழிகளைக் கட்டும் போது, குழாய்வழி நிறுவனம் வழக்கமாகப் கட்டுமான ஒப்பந்தக் காரர்களைப் பயன்படுத்தும். வழியின் மொத்த நீளத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் வேலை செய்வதற் காகத தனித்தனியான சாதனங்களுடன் பணியாளர் ஒவ்வொரு அனுப்புவார்கள். வழக்கமாக பணியாளர் தொகுதியும் 150 கி.மீ. வரை வேலை செய்ய அனுப்பப்படும். குறிப்பாக உறைய வைக்கும் வெப்பநிலையோ மழையோ சேறோ வேலை யும் இடங்களில் குறுக்கிடும்போது இக்கட்டுமான வேலையைப் பிரித்துக் கொடுப்பதால் கட்டுமானப் பணி முழுவதையும் வேகமாகச் செய்ய வகை செய்ய லாம். செய் பல எந்திரங்கள் பள்ளத்தைத் தோண்டியும் குழாய்ப் பகுதிகளைப் பற்ற வைத்தும் அரிப்பைத் தடுத்துப் பாதுகாப்புக்கு பூச்சுக்களைப் பூசியும் அக் குழாய்களை இறக்கியும் இறுதியாக அப்பள்ளத்தை வேலைகளைச் செய்கின் மண்ணால் மூடியும் பல றன. தோண்டும் பள்ளமானது வழக்கமாக 1 மீ மேலாகவோ அமையும். இந்த ஆழமோ அதற்கு ஆழத்தில் குழாய்களை அமைப்பதால் நிலத்தை உழும்போதும், நிலத்தை அகழ்தெந்தெடுக்கும் தனத் தினால் நிலம் அகழ்ந்தெடுக்கப்படும்போதும் இக் குழா குழாய்களுக்கு ஊறு ஏதும் ஏற்படுவதில்லை. யின் அளவைச் சார்ந்து இப்பள்ளத்தின் அகலம் 6 செ.மீ.இலிருந்து 120 செ.மீ. வரையிலோ அல்லது அதற்கு மேலாகவோ அமையும். பற்றுவைப்பவர்களின் குழுக்கள் குழாய்ப் தொடர்ந்த பகுதிகளைப் பற்றவைத்து அவற்றைத் குழாயாக ஆக்குவர். மிகப்புதுமுறைப் பற்றுவைப் புத்தொழில் நுட்பங்களில் தானியங்கிப் பற்றுவைப்பு எந்திரங்கள் பயன் படுத்தப் படுகின்றன. பற்று வைப்புகளை ஆய்வு செய்வதற்காகஎக்ஸ் கதிர்ச் சாதனங்கள் பயன் படுத்தப்படுகின்றன. குழாயின் பல பகுதிகளை ஒன்றாகப் பற்றுவைத்த பின்னர் பள்ளத்தில் பக்கச் இத்தொடர்க் குழாயினைப் (side boom trac- சட்ட இழுவை எந்திரங்கள் tors) வழியாக மெதுவாக இறக்குவர். இந்த இயந் திரங்கள் பாரந்தூக்கும் பொறிகளைக் (cranes or derricks) கொண்டு ஒரு பக்கத்தில் சாய்வினை ஏற் படுத்திக் குழாயை மேலெடுத்து இழுவை எந்திரத்தி லிருந்து பல மீட்டர் தொலைவு வரையில் பள்ளத்தில் இறக்க வகை செய்கின்றன. எஃகு அலைகளிலிருந்து வாங்கப்பட்ட குழாய்களுக்கு ஏற்கனவே உறையும் (coating and wrapping) இருக்கும். குழாய் பூச்சும் களுக்குப் பூசப்படும் தடித்த பூச்சானது நிலக்கீலி னாலோ (coal tar) புகைக் கீல் பொருளாலோ (asphaltic material) ஆக்கப் பெற்றுத் தடித்த காகி தத்தாலோ கண்ணாடி நாரினாலோ (fibre glass) மூடப் பெற்றிருக்கும். பாதுகாப்பிற்காகப் பூசப்படும் பூச்சும் உறையும் குழாய் துருப் பிடிக்காதிருப்பதற் காகத் தேவையாகின்றன, பூச்சுக்கள் இல்லாத குழா யைப் பயன்படுத்தும்போது தனித்தன்மை வாய்ந்த எந்திரங்களைக் கொண்டு இக்குழாய்களுக்குப் பூச்சி னையும், உறையையும் அளிததுப் பின்னர் பள்ளத் தில் இறக்கப்படுகின்றன. பூச்சுவிடுபட்ட மறைந்துள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதற்காகத் தனித்தன்மை வாய்ந்ததொரு சாதனத்தைப் பயன்படுத்துவார்கள். இதற்கு விடுப் புக் கண்டறியும் கருவி என்று பெயர் (holiday detector). பூசப்பட்டு உறை போடப்பெற்ற குழா யின் மீது இரும்புப் பட்டை ஒன்றைச் சுற்றி அதன் வழியாக மின்சாரம் செலுத்தப்படுகிறது. பூச்சு விடு பட்ட, மறைந்துள்ள இடங்கள் இருந்தால் இக்கருவி அதனை இயக்குபவருக்குத் தெரிவிக்கின்றது. இ நிலை பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் பணியாளர்கள் விடுபட்ட இடங்களில் பூச்சும் உறை யும் போடுவார்கள். குழாய் வழிகள் முழுவதும் நேர்கோட்டில் அமையாததால் குழாயை வளையச் செய்யும் எந் திரங்களைப் பயன்படுத்திக் குழாயினைக் குத்து நிலையிலும், கிடைநிலையிலும் அல்லது இவ் விரு நிலைகளிலும் வளைப்பார்கள். குழாய்வழி ஆற்றின் வழியாகக் கொண்டு செல்ல நேரிடும்போது ஒப்பந்தக்காரர் ஆற்றுப்படுக்கையில் ஆழமான பள்ளத்தை அடி அகழ்வு எந்திரத்தைக் கொண்டோ மற்ற முறையிலோ தோண்டுவார்கள். இப்பள்ளத்தில் குழாயை அமைத்த பின்னர் அதனைச் சுற்றிப் பளு வான பொருளை வைத்து அதன் மேல் கற்காரை உறையினை அமைப்பார்கள். இவ்வாறு அமைப் பதனால் இக்குழாய்கள் வெள்ளத்தின்போது அடித் துச் செல்லப்படுவதில்லை. ஆற்றின் குறுக்கே பாலம் அமையும்போது பாலத்தின் எஃகுக் கட்டுமானச் சட்டங்களின் அடிப்பகுதியில் இக்குழாய் வழி தொங் கவிடப்படுகின்றது சில இடங்களில் ஆற்றின் குறுக் கே குழாயினைக் கொண்டு செல்லத் தனித்த தொரு பாலத்தைக் கட்டுவது தேலையாகின்றது. நெடுஞ் சாலை அல்லது இருப்புப் பாதையின் குறுக்காகக் குழாய்வழி அமையும்போது கட்டமைப்பின் அடியில் சுரங்க வழி அமைத்து அதன் வழியாகக் கொண்டு செல்லவேண்டும். பெருந்துரப்பணங்களைக் கொண்டு (giant auger) பாதையின் அடியில் பெரிய விட்ட அளவுடைய குழாய் செல்வதற்கேற்றவாறு சுரங்க வழியை உண்டாக்கி அதன் வழியாக முதன்மைக் குழாய்வழியைக் கொண்டு செல்வர்.