உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, இயற்கை வளிம 333

நெடுந்தொலைவுக் குழாய்வழிகளில் வளிம அழுத் தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 5000 பவுண்டுகளாக இருக்கும். வழக்கமான குழாய் வழியில் 1000 psia அழுத்தம் இருக்கும். உராய்வு இழப்புக்களை ஈடு செய்வதற்காக வளிமத்தை அழுத்தும் நிலையங்களி லிருந்து வளிம அழுத்தம் உயர்த்தப்படுகின்றது. இந் நிலையங்கள் குழாய்வழிப் பாதையில் ஒவ்வொரு 80 முதல் 160 கி.மீ. இடைவெளியில் அமைந்திருக்கும். இயற்கை வளிமக் குழாய் வழியில் ஒரு மணிக்கு 24 கி.மீ. நேர்கோட்டு வேகத்தில் செல்லும். இவ்வாறு வளிம மூலக்கூறுகள் 1000 கி.மீ. தொலைவைக் கடந்து செல்ல இரண்டு நாள்களாகும். வெள்ளத்தினாலும் நில அதிர்ச்சியினாலும் அல்லது வேறு எந்த ஒரு விபரீதத்தினாலும் குழாய் வழியில் எதிர்பாராத உடைப்பு ஏற்படும்போது இவ் வளிமப் பாய்வினை முழுவதுமாகத் துண்டிப்பதற் கோ அல்லது வளிம உள் அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதற்கோ குழாய்வழி நெடுகிலும் கட்டுப் பாட்டிதழ்களைக் கொண்டும், கட்டுப்படுத்தும் கருவி களைக் கொண்டும் திறந்தோ மூடியோ தேவையான கட்டுப்பாட்டினைச் செய்யலாம். பணியாட்கள் அவ் விடங்களைச் சென்றடைவதற்கு முன்னரே நுண் ணலை வானொலியைக் (microwave radio) கொண்டு கட்டுப்பாட்டிதழ்களையும் கட்டுப்படுத்தும் கருவிகளையும் இயக்கலாம். எளிமத்தைப் பயன்படுத் தும் இடங்களுக்கு அருகில் உள்ள வளிம அழுத்தக் குறைப்பு நிலையங்கள் நகர் கதவுகள் என்றழைக்கப் படுகின்றன. இந்த நிலையங்களில் முதன்மைக் குழாய்வழியில் செல்லும் வளிம அளவு அளக்கப் படுவதுடன் அதன் அழுத்தமும் குறைக்கப்படு கின்றது. 1966-1970 ஆம் ஆண்டுகளில் கூட்டு ஆற்றல் குழு 5.5 பில்லியன் டாலர் (1$=ரூ 12.00) மதிப்பீட்டுச் செலவில் 27541 மைல்களுக்கான குழாய் வழியைக் கட்டுவதற்கு ஆணை வழங்கி 1366 சான்றிதழ்களை யும் வழங்கியது. இந்த ஆண்டுகளில் ஒரு கி.மீ.கான சராசரி செலவு 120,000 டாலர் ஆகும். மக்கள் அதிக மாகக் குடியிருக்கும் பகுதிகள் வழியாகக் குழாய் வழியைக் கொண்டு செல்லும்போது ஏற்கெனவே உள்ள நிலத்தடிக் கட்டமைப்புக்களைத் தவிர்க்க வேண்டும். இவ்விடங்களில் ஆகும் செலவு 1 கி.மீக்கு 0.6 மில்லியனும் அதற்கு மேலும் ஆகும். சில நிலத்தடித்தேக்கம். பெருமத் தேவைகளின்போது இயற்கைவளிமப்பேரளவுக் கூடுதல் வழங்கல் நிலத் தேக்கங்களிலிருந்து கிடைக்கின்றது. தடித் தேக்கங்களைக் குழாய் வழி நிறுவனங்கள் இயக்கு கின்றன. ஆனால் நகர்ப்பகுதிகளுக்கு இவ்வளிமத்தை வழங்கும் நிறுவனங்களே இந்நிலத்தடித் தேக்கத்தில் உள்ள வளிமங்களுக்கும் கின்றனர். உரிமையாளர்களா ஆற்றல், இயற்கை வளிம 333 குழாய் வழியிலிருந்து வழங்கப்படும் எல்லா வளிம எரிபொருள்களையும் பயன்படுத்தாதபோது அதிகமாக வழங்கப்பெறும் வளிமங்களை கோடை காலத்தில் நிலத்தடித் தேக்கத்தில் நிரப்புவார்கள். இத்தேக்கமுறை ஆண்டின் எல்லா பருவங்களிலும் வளிமத்தை உண்டாக்கும் கிணறுகளும் குழாய் வழிகளும் நிலைத்த வீதத்தில் இயங்குவதற்கு வகை செய்கின்றது. மேலும் ஒரு வளிம் வயலிலிருந்து எடுக்கப்படும் வளிமம் நிலையான வேகத்தில் (stcady rate) எடுக்கப்படும்போது அவ்வளிம வயல், பேரளவு வளிமத்தை நீண்டகாலத்திற்கு வழங்கும் என உறுதி செய்யப்படுகிறது. பல மாநிலங்களிலுள்ள நிலத்தடித் தேக்கங்களின் கொள்ளளவுகள் அட்டவணை 2இல் காண்பிக்கப் பட்டுள்ளன. அமெரிக்க நாட்டில் தற்போது பயன் படும் மொத்த நிலத்தடித் தேக்கக் கொள்ளளவுகளில் பாதியளவு மிச்சிகன், பென்சில்வேனியா, இலினாய்ஸ், ஓஹையோ ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ளது. 1971 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நாட் டில் நிலத்தடியில் வளிமத்தைத் தேக்கும் தேக்கங்கள் 325 இருந்தன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 5.2 டிரில்லியன் பருமன் அடியாகும். ஓர் ஆண்டில் கடுங்குளிர் காற்று வீசியபோது 36 மில்லியன் வீடுகட்கும் அறைகட்கும் வெப்பமூட்டு வதற்காகக் கூடுதல் வளிமத் தேவையினை நிறைவு செய்வதற்கு இக்கொள்ளளவில் நான்கில் ஒரு பங்கு பயன்படுத்தப்பட்டது. ஏற்கனவே வளிமத்தையோ அல்லது எண்ணெ யையோ உண்டாக்கிப் பின்னர் கைவிடப்பட்ட வய லில் வளிமத்தைத் தேக்கி வைக்கும் முறை நிலத்தடித் தேக்கமாகும். இத்தகைய வயலில் எஞ்சியிருக்கும் எண்ணெய் அல்லது வளிமம் மிகக் சிறிதளவாக இருப் பதாலும் அதன் அழுத்தமும் மிகக்குறைவாக இருப் பதாலும் அவ்வயல்களிலிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்வது இயலாது. இத்தகையதேக்கப்பாறையிலுள்ள கிணறுகள் வழியாக இவ்வளிமத்தை எக்கி (pump) மூலம் உட்செலுத்தி இத் தேக்கப்பாறையில் வளிமத் தைத்தேக்கி வைக்கலாம். இத்தேக்கத்திலுள்ள கிணறு களிலிருந்துதான் முன்னொரு காலத்தில் வளிமம் எடுக்கப்பட்டது. இப்போது பயன்படுத்தப்படும் 325 தேக்கங்களில் 279 தேக்கங்கள் முன்னொரு காலத்தில் எண்ணெயோ வளிமமோ உற்பத்தி செய்தவை. பென்சில்வேனியாவிற்குப் உள் பொது உரிமையாக மக்கட் குடியிருப்புகட்கு இடையிலும் பெரிய தொழிற் சாலைகட்கு அருகிலும் 65 தேக்கங்கள் ளன. அத்தகைய தேக்கங்கள் மேற்கு வர்ஜீனியாவில் 33ம் மிச்சிகனில் 29ம் ஓஹையோவில் 21ம் கான் சாசில் 16ம், இண்டியானா, நியூயார்க் கெண்டகி ஒவ்வொன்றிலும் 15ம் உள்ளன. மீதமுள்ள தேக்கங்கள் மற்ற 13 மாநிலங்களில் உள்ளன.