ஆற்றல், இயற்கை வளிம 337
களைத் தேக்கி வைக்க முடியுமாதலால் தேவைக் கேற்பச் குழாய்களைக் கொடுப்பது முக்கிய கூறாக (logistics) உள்ளது. கடினமான கடல் சூழ் நிலைகளில் சாதனங்களைப் பரவலாக்கப் பெரிய கப்பல் தொகுதி, குழாய் வழி அமைக்கும் படகிற்குத் துணையாக இருப்பது தேவை. நெடுந்தொலைவு வடகடல் நீரில் வேலை செய்யும்போது கப்பல் தொகுதிகளாக நங்கூரம் பாய்ச்சி இழுக்கும் நீராவிப் படகுகள் இரண்டும். துணையாக இருப்பதற்கு இழுக்கக் கூடிய நீராவிப் படகு ஒன்றும், குழாய் களைக் கொடுப்பதற்கான படகு ஒன்றும், குழா யைக் காண்டு செல்லும் படகுகள் பத்தும் வேண்டும். கடலில் குழாய்வழியைக் கட்டுவதற்கான முடிவை மேற்கொண்ட பின்னர் வேலையின் முதற் கட்டமாகக்குழாய்களை வாங்கவேண்டும். குழாய்கள் அமையும் இடங்களின் அழுத்தத்தைச் சார்ந்து குழா யின் தடிப்பும் அதன் தரமும் அமைவதால் இவற்றை உடனே தீர்மானிக்க வேண்டும். குழாய்ப்பூச்சுப் பூசும் முற்றங்களுக்குக் குழாய்கள் அனுப்பப்பட வேண்டும். இவ்விடத்தில் பாதுகாப்புப் பூச்சும், எடையைக் கூடுதலாக்குவதற்கான பூச்சும் குழாய் களுக்கு அளிக்கப்படும். நிலவழியில் குழாய்களுக்கு எத்தகையதொரு காப்புப்பூச்சு அளிக்கப்பட்டதோ அதே வகையான காப்புப் பூச்சு, கடல் வழிக்குழாய் பயன்படுத்தப்படுகின்றது. வழக்கமாக களுக்கும் எனாமல் ஆகியவை முதற் பூச்சாக நிலக்கரிக்கீல், பூசப் பெறுகின்றன. சுற்றிப் போர்த்தும் பொருள் கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. குழாய்க்குப் பளுவை வழங்குவதற்காகப் பூச்சில் முறையாக (weight coating) மிகவும் வழக்கமான உள்ளது தாக்குதல் முறை (impact method) குழாயைச் சுழலவைத்து யாகும். இம்முறையில் உலர்கலவை கற்காரையைக் (dry-mix concerete அதிக வேகத்துடன் செலுத்த குழாயை நோக்கி வேண்டும். கம்பியால் சூழப்பட்ட குழாயில் இக்கற் காரைக் கலவை நன்கு இறுகப் பிடித்துக் கொள்கி றது. இந்தக் கற்காரையின் அடர்த்தி ஒரு பருமன் அடிக்கு 135 முதல் 210 பவுண்டுகள் வரை இருக்க லாம். வேண்டிய அளவு கற்காரைத் தடிப்பு,கிடைத் தவுடன் இக்குழாய்கள் நீரில் பதப்படுத்தும் முற்றத் திற்கு (curing yard) மிகவும் கவனமாகக் கொண்டு செல்லப்பட்டு இப்பூச்சுக்கு வலிமையூட்டப்படுகின் றது. இம்முற்றத்திலிருந்து குறைந்தது ஐந்து நாள் நகர்த்துவதில்லை. குழாய் தளத்தில் உள்ள பற்றுவைக்கும் நிலையங்க ளின் எண்ணிக்கை. குழாய் வழி அமைக்கும் வீதத் தினைச் சார்ந்து அமைகின்றது. தன்னியக்கப் பற்று வைக்கும் சாதனத்தில்(automatic welding equipment ) 2 செ.மீ. குழாய்கள் 5 இடங்களில் பற்றுவைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. பற்று வைக்கும் கள் வரையில் அ.க. 3-22 குழாய்களை ஆற்றல், இயற்கை வளிம 337 மின்முனைகளின் காப்பிடப்பட்ட மின்கம்பிகளுடன் கட்டுப்பாட்டினையும் கொண்டு பற்றுவைக்கும் நிலையங்கள் அமைகின்றன. மற்றும் வேறு எங்கா வது பயன்படுத்தும்(எடுத்துக்காட்டாகக் கீழ்த் தளங் களில் வைத்துப் பயன்படுத்தும்) பற்றுவைக்கும் இயந்திரங்கள் செய்யும் வேலையைத் கருவிகளைக் கொண்டும் ஒவ்வொருபற்று வைக்கும் நிலையமும் அமைந்துள்ளது. வளிம உலோக வில் பற்றுவைப்பு அமைப்பினைப் (gas metal arc welding system) பயன்படுத்தும்போது கார்பன் டை- --ஆக்சைடு போன்ற காப்பிட வேண்டிய வளிமத்தினை அளிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அதன் வழங்கலைக் கட்டுப்படுத்துவதற்கும் (monitoring) வழிவகைகள் செய்யப்படடிருக்க வேண்டும். கடலடி யில் குழாயை வைத்த பின்னர் பழுது ஏதும் ஏற்பட் டால் அதனைச் சரிபார்ப்பதற்கு அதிக அளவில் செலவு உண்டாவதால், குழாய் வழி அமைக்கும் பட கில் குழாய்களை இணைக்கும் பற்றுவைப்புக்கள் கேடு றாதவாறு அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். குழாய்களின் நீளம் முழுவதிலும் பற்றுவைக்கப்பட்ட இடத்தின் சுற்றளவுமுழுவதிலும் கதிர் வீச்சு ஒளிப்படவியல் முறையைப் பயன்படுத்தி சரிபார்ப்பது வழக்கமாகும். கதிர்வீச்சு ஒளிப்பட வியல் முறைக்கான சாதனத்தில் X கதிர் அல்லது காமாக்(Y) கதிர்கள் குழாயின் வெளிப்புறமாகவோ உட்புறமாகவோ பயன்படுத்தப்படுகின்றன. கடலின் ஆழமான பகுதிகளில் வேலை செய்யும் போது ஆழ்கடலில் மூழ்குபவர்களின் பணிமுக்கியத் துவம் பெறுகின்றது. 50மீட்டருக்கும் மேற்பட்ட கடல் ஆழத்தில் அதிக வேலை செய்ய நேரும்போது நிறைவு செறிந்த மூழ்குதல் (saturation diving) கையாளப் பட வேண்டும். இவ்வகையான மூழ்குதலில் மூழ்கு பவர் உண்மையாக நிறைவு செறிதலை அடைக்கின் றார்கள். அதாவது அவரது உடல் அமைப்பு, கடலில் வேலை செய்யும் இடத்திலுள்ள நீரின் அழுத்த அள விற்கே மூழ்கும் அறையில் ஆட்படுத்தப்படுகின்றது. கள். இந்த அழுத்தங்களில் தனித்தன்மை வாய்ந்த கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடலடியில் மூழ்குபவர்கள் படகின் தளத்தில் அமைந்துள்ள அழுத்த மூட்டிய அறையில் இருப்பார்கள். இவர்கள் கடலடிக்கு மூழ்கு கூண்டில் செலுத்தப்படுவார்கள். ஒரு மூழ்கும் குழுவில் 50 பேர்கள் வரையில் தனித் தன்மை வாய்ந்த அழுத்த அறைகளில் இருப் பார்கள். கடலடிக்குழாய் வழிகளைக் கடலடியிலுள்ள தரையின் கீழ்ப் பள்ளங்களில் இறக்குவார்கள்- இத்த கைய அமைப்பினால் மிகவும் கடினமான கடல் சூழ் நிலைகளிலும் இழுத்துச் செல்லப்படும் நங்கூரங்களி ருந்தும் மீன் பிடிக்கும் போதும் இக்குழாய் வழிகள் பாதுகாக்கப்படுகின்றன. கடலடித் தரையில் அமைக்