938 ஆற்றல், இயற்கை வளிம
338 ஆற்றல், இயற்கை வளிம கப்படும் இத்தகைய பள்ளங்களில் அமையும் குழாய் களின் மேலிருந்து 1மீ வரை கடலடியின் தரை அமை யுமாறு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. கடற்கரை யை நெருங்கும் இடங்களிலும் கப்பல்கள் செல்வதற் கான வரையறை செய்யப்பட்ட கட -ற்பாதைகளிலும் மேடையைச் சூழ்ந்த இடங்களிலும் குழாய்களைக் கடலடித் தரையின் கீழ், பத்தடி ஆழத்தில் பதிப்பார் கள். கடலடித் தரையில் பள்ளம் தோண்டும் வேலை யினைச் செய்வதற்குத் தனித்தன்மை வாய்ந்த வடிவ மைப்புடைய நீர்த்தாரை உறிஞ்சுதல் முறையைக் கையாளும் கடலடி அகழ் படகு பயன்படுத்தப்படு கின்றது (காண்க படம் 9). கடலடியகழ்வுப் படகு அல்லது புதைபடகில் உயர் திறன் கொண்ட எக்கி அமைந்திருக்கும். இந்த எக்கிகள் உயர் அழுத்த நீர்த் தாரையினைச் சறுக்குக் கலத்தில் செலுத்திக் கடலடித் தரையில் துளையிடுகின்றன. படகு நங்கூர அமைப்பினால் குழாய் நீளத்தில் இச்சறுக்குக் கலத் தை இழுக்கும் போது அதிலுள்ள நீர்த்தாரைக் குழாய் மூக்குக்குழல் (jet nozzles) குழாய்க்கு அடியி லிருக்கும் கடலடித் தரையை ஆழமாக்கும். இதில் கிடைக்கும் நீர்த்தாரை நீர்மப் பொருட் கலவையினை (jet slurry) அகழ்படகிலுள்ள உயர்பருமன் அளவு எக்கியின் (high volume dredge pump) வழியாகக் குழாய் வழியின் பக்கங்களில் வெளியேற்றி இக் குழாய் வழியைப் புதைக்கப்பட்ட நிலையில் படிய வைக்கின்றது. குழாய் நீளத்தில் இச்சறுக்குக் கலத்தை இழுக்கும் போது சறுக்குக் கலத்தை இயக்கும் உரு ளைகளில் (sled rolled guides) பொருத்தப்பட்டுள்ள சறுக்குக் கலத்தை இழுக்கும் வழி நீர்த்தாரை அகழ்படகின் நங்கூரமிடும் வழிகள் குழாய் -நீர்த் தாரைச் சறுக்குக்கலம் படம் 9. குழாய் வழி அமைப்பதற்காகக் கடலடியில் பள்ளம் தோண்டும் இயக்கத்தைச் செய்யும் நீர்த்தாரை உறிஞ்சுதல் முறையைக் கையாளும் அகழ்படகு அழுத்தத்தை உணரும் உறுப்புக் கூறுகள் (pressure sensing celis) இவ்வழியில் செலுத்தப்படும் அழுத் தத்தின் அளவைக் காண்பிக்கும். இவ்வாறாகப் படிய வைத்தவின் அளவை அவை காட்டுகின்றன, மேலும் இவ்வழி நீளத்தில் சறுக்குக் கலம் நகரும் வீதத்தை அதனை இயக்குபவர் கட்டுப்படுத்தவும் இவை பயன் படுகின்றன. குழாய் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதையும், இவ்வேலையின் மற்ற இயல்புகளும் சரியாக உள்ளனவா என்பதையும், ஆய்வுசெய்ய ஆழ்கடல் மூழ்குபவர்களைப் பயன்படுத்துவார்கள். குறைந்த பிரிட்டன் வெப்ப அலகுடைய (பி.வெ.அ) இயற்கை வளிமங்களைத் தாழ் வெப்பநிலைமுறையில் தரமுயர்த்துதல். உலகம் முழுமையிலும் இயற்கை வளிம வளம் மிகுந்த அளவில் உள்ளது. இவ் வியற்கை வளிமத் தேக்க அமைப்புகளில் உள்ள ஹைட்ரோக்கார்பன்களுடன் எரியாத கூறுகள் சேர்ந்து மாசுபட்டிருக்கும். வளிமக் கலவையில் ஹீலி யம், நைட்ரஜன் அல்லது கார்பன்டை ஆக்சைடு ஆகி யவை கலந்திருந்தால் அதன் வெப்ப மதிப்பு குறை கின்றது. இது காரணமாக, செலுத்தப் பகிர்வு அமைப்புக்களில் (transmission and distribution sys- tems ) இவ்வளிமத்தைச் செலுத்துவது பொருத்தமற் றதாக உள்ளது. இத்தகைய மாசுபடுத்தப்பட்ட கல வைகளின் வெப்ப மதிப்புகள் தேவையான குறைந்த தரங்களுக்கும், கட்டுப்பாட்டு விதி முறைகளுக்கும் அல்லது ஒப்பந்த வெப்ப மதிப்புத் தேவைகளுக்கும் (contract heating value requirement) கீழ் அமையும் போது அவை குறைந்த பி.வெ.அ. உடைய வளிமங் கள் எனக் கூறப்படுகின்றன. இந்தக் குறைந்த பி.வெ.அ. வளிமங்களில் சிலவற் றின் வெப்ப மதிப்பை உயர்த்தி ஏற்கக் கூடிய உயர் பி.வெ.அ.பொருளாக உண்டாக்குவதற்கு தாழ்வெப்ப நிலைமுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்தத் தாழ் வெப்பநிலை முறை ஓர் இயற்பியல் முறையாகும். இம்முறையில் குறைந்த சுற்றுப்புற வெப்பநிலை யைப் (sub ambient temperature) பயன்படுத்திக் கல வையிலுள்ள ஹைட்ரோக் கார்பன்களையும் ஹைட் ரோக் கார்பன் அல்லாதவற்றையும் தனித்தனியாகப் பிரிக்கின்றனர். தாழ்வெப்ப நிலைமுறையில் தோன்றும் வெப்பநிலைக் குறைவால் இரு நிலைக் (வளிம - நீர்ம) கலவை உண்டாக்கப்படுகிறது. கலவையிலுள்ள கூறு களின் வேறுபட்ட, எளிதில் ஆவியாகுந்தன்மை கார ணமாக இவ்விரு நிலைகளுக்கிடையில் தேர்ந்தெடுக் கப்பட்ட பொருள் பரிமாற்றம் (selective mass trans. fer) தோன்றுகின்றது. ஒரு நிலையில் ஹைட்ரோக் கார்பன்கள் செறிவூட்டம் பெற்று, அவற்றின்வெப்ப மதிப்பு, பிரித்தெடுப்பதற்கு முன்னர் அமைந்த வளி மத்தின் வெப்பமதிப்பைக் காட்டிலும் அதிகமாகிறது. இரண்டாவது நிலையில் ஹைட்ரோ கார்பன்க ளற்ற வளிமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு அவற்றின் வெப்ப மதிப்பு, பிரித்தெடுப்பதற்கு முன்னர் இருந்த