342 ஆற்றல், இயற்கை வளிம
342 ஆற்றல், இயற்கை வளிம ஆற்றல் பற்றாக் குறையுடைய ஜப்பானும் சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக நீ. இ. வளிமத்தைக் கப்பல் வழியாகக் கொண்டு செல் எடுத்துக் வது பற்றிக் கவனம் செலுத்தியுள்ளன. காட்டாகப் போர்னியாவிலுள்ள புரூனியில் லுமெட் டில் (Lumut, Brunei, Borneo ) அமைந்த பெரிய நீ.இ.வ. நிலையம் 1974ஆம் ஆண்டு மத்தியில் நீ.இ. வளிமத்தை ஜப்பானிற்கு வழங்குவதற்கென்றே தொடங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டின் நடுவில் இயற்கை வளிமம் மிகுந்த நாடுகள் தொழில் துறை யில் மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு நீ இ. வளிமத்தை வழங்குவதற்கு வாணிகத் தொடர்புகள் கொண்டன. எடுத்துக்காட்டாக முற்றிலும் புதிய வளிம வயல்களைச் சோவியத்து நாட்டில் உருவாக்கு வதற்கு அமெரிக்காவும் சோவியத்து நாடும் பேச்சு வார்த்தைகளை அவ்வாண்டில் மேற்கொண்டன. எண்ணெயும் வளிம வளமும் மிக்க நாடுகள் ஒரு காலத்தில் இயற்கைப் பாறை எண்ணெய் ஆக் கத்தில் சீறியெழுந்து வெளியான இயற்கை வளிமத் தைத் திரட்டாமல் வானவெளிக்கு விட்டுவிட்ட போதிலும் தற்காலத்தில் இந்நாடுகள் இவ்வளிமத் தைத் திரட்ட முற்பட்டுள்ளன. இத்தைகைய திரட்டல் முறைகள் நிலத்தடியில் இயறகை வளிமத்தை மீள வும் செலுத்தித் திரட்டி வைப்பது அல்லது நீ.இ.வ. உண்டாக்குவதற்கான அமைப்புகளைக் கட்டி அதன் விளை பொருளான நீ. இ. வளிமத்தைக் கடல் வழி யில் கப்பல்களில்கொண்டு செல்வதாகும். இத்தகைய திட்டத்தினைச் செயல்படுத்தும் போது பல நாடுகள் தங்களுக்குச் சொந்தமான மதிப்பு மிக்க வளங்களை மறுப்புச்செய்து பணத்திற்காக மட்டும் வளிமத்தை யும் எண்ணெயையும் வெளிநாடுகளுக்கு அளவுக்கு மீறி ஏற்றுமதி செய்வதில் பெரிதும் தயக்கம் கொண் டன. 1970 ஆம் ஆண்டு நடுவில் ஆற்றல் பற்றாக் குறையை மட்டுப்படுத்தும் முறைகளாக நிலக்கரி மாற்றம் செய்விக்கும்முறையும் வளிமமாக்கும் முறை யும் அணு ஆற்றலும், சூரிய ஆற்றலும் அமைந் தன இவற்றுடன கடல் கடந்த நாடுகளுக்குக் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட நீ.இ. வளிமம் போட்டியிட்டது-பெருத்த அளவிலான நீ இ. வளிமத்தைக் குழாய் வழியாகவோ கப்பல்களிலோ அவற்றை உண்டாக்கும் நாடுகளிலிருந்து பயன்படுத் தும் நாடுகளுக்குக் கொண்டு செல்வது கடும் ஆற் றல் தேவையின் நீண்டநாள் பிரச்சினையைப் பகுதி அளவிலும் சிறிது காலத்திற்குமட்டுமே தீர்க்கவல்லது. கப்பல் நீ. இ. வளிமத்தை உண்டாக்குவதற்கு மூன்று வகையான நீர்மமாக்கும் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. செந்தர ஓடைவகை அடுக்கு முறையில் (standard cascade process) மூன்று உறைவிக்கும் பொருள்களாக மீத்தேன், எத்திலீன், புரோப்பேன் ! ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவையாவும் படம் 11இல் காட்டியுள்ளவாறு மூடிய சுழற்சிகளில் சுற்றிச் செலுத்தப்படுகின்றன. இந்த மூன்று உறை விக்கும் பொருள்களை அழுத்துவதற்குத் தனித் ஊட் தனியே அமுக்கிகள் (compressors) உள்ளன. டப்படும் வளிமமான இயற்கை வளிமத்தில் மீத் தேனும் ஈத்தேனும் கிடைக்கின்றன. இம்முறையில் எத்திலீன் தனியாக அளிக்கப்பட வேண்டும். வளி மண்டல அழுத்தத்திற்குக் குறைவான உறிஞ்சு நீர்மமாக்கிகளும் பரிமாற்றிகளும் 1 1 இயற்கை வளிமம் கலப்பு உறை பொருள் அமுக்கிகள் நான்காம்நிலை பிரிக்கும் அமைப்பு மூன்றாம் நிலை பிரிக்கும் அமைப்பு இரண்டாம்நிலை பிரிக்கும் அமைப்பு முதல்நிலை பிரிக்கும் அமைப்பு பகுதி அளவில் உறை பொருள் செறிகலன் படம் 12. ஒற்றை அழுத்தமுடைய கலப்பு உறைபொருள் அடுக்கு அமைப்பு