உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, உயிர்க்கூள 349

ஆற்றல், உயிர்க்கூன 349 லிருந்து கிடைக்கும் விறகிற்குப் பதிலாக வேறொரு மாற்று எரிபொருள் சாதனத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. இதன் விளைவாகக் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் மாட்டுச் சாணம் (cow dung} பசுந்தழை போன்றவற்றி லிருந்து எரிபொருளைத் தயாரிக்கும் ஆயிரக்கணக் கான கோபார் வளிமக் கலன்கள் (Gobar gas plant) நிறுவப்பட்டுள்ளன. இக்கலன்கள் உயிர்க்கூளப் பொருட்களைக் காற்றில்லாச் செரித்தல் முறையில் எரிபொருளாக மாற்றுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் வங்காளதேசம், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாறை எண்ணெய் சார்ந்த எண்ணெய்ப் பொருட் களின் விலையைக் குறைப்பதற்காகத் தாய்லாந்து அரசு உயிர்க்கூளத்திலிருந்து சாராயத்தை உற்பத்தி செய்ய தற்போது காட்டுகின்றது. விருப்பம் தாய்லாந்து ஆண்டொன்றுக்குப்பத்து லட்சம் கிலோ விட்டர் எத்தனாலை உற்பத்தி செய்கிறது. நாளொன்றுக்கு 200 கிலோ லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்யும் திட்டமொன்றும் ஆய்வில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சுபாப்புல்லைப் (leucaena leucocephalla) பெருமளவில் வளர்க் கிறார்கள், இந்தச் சுபாப்புல் தோட்டங்களுக்கு மர ஆற்றல் கூப்புக்கள் (wood energy plantatoon) என்று பெயர், இக் கூப்புகளிலிருந்து கிடைக்கும் கரியைக் கொண்டு நாளொன்றுக்கு ஏறத்தாழ 50 மெகா வாட் மின் ஆக்கம் செய்கிறார்கள். இந்தியாவில் லக்னோவிலும், மதுரையிலும் உயிர்க்கூளம் சார்ந்த ஆய்வுகள் செய்யும் உயிர்க்கூள மையங்கள் (bio mas centres) உள்ளன, லக்னோ வில் தேசியத்தாவரவியல் நிலையத்திலுள்ள (National Botanical Research Institute, Lucknow) உயிர்க்கூள மையத்தில் வட இந்தியத் தட்டவெட்ப நிலைக்கு ஏற்ப எவ்லாறு உயிர்க்கூளத்தை அதிகரிக்கலாம் என்பது பற்றி ஆய்வுகள் நடைபெறுகின்றன. மதுரைக் காமராசர் பல்கலைக் கழக உயிர்க்கூள மையத்தில், கூபாப்புல் (Leucaena) சவுக்கு(Casuarina) நீலகிரிமரம் (Eucalyptus) போன்ற தாவரங்களின் உயிர்க்கூள ஆக்கத் திறன் (productivity) சார்ந்த ஏராளமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இலட்சக் கணக்கான ரூபாய் விலை மதிப்புள்ள அதி நவீனக் கருவிகள் மூலம் இங்கு நடைபெறும் உயிர்க்கூளம் சார்ந்த ஒளிச்சேர்க்கை ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவை. இம் மைய இயக்குநர் முனைவர் ஞானம் மூலம் தென்னாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இரப்பர் தரவல்ல கேயல் (Pathenium angentatum) என்ற தாவரத்திலும் உயிர்க்கூள ஆய்வுகள் நடை பெற்றுவருகின்றன. பெரும்பான்மையான எரி ஆப்பிரிக்காவின் பொருள் தேவையினை விறகும் விலங்குகளின் கழிவு களுமே நிறைவு செய்து கொண்டிருந்தன. தென் படம் 5. நாற்றுகள் கண்ணாடிப் பேழையில் வளர்தல் ஆப்பிரிக்கா, வட ஆப்பிரிக்கா போன்றவற்றின் பெரும் பகுதிகள் போதுமான விறகு கிடைக்காத காரணத்தால் கடுமையான எரிபொருள் பஞ்சத்திற் குள்ளாயின. இதனைச் சரிக்கட்ட தற்போது ஆண் டுக்கு 400 ஹெக்டர் நில அளவில் நீலகிரி மர உயிர்க் கூள ஆற்றல் கூப்புகள் அமைக்கப்படுகின் றன ஆப் பிரிக்க நாடுகளில் உயிர்க்கூள ஆய்வுகள் முன்னேற்ற மடையாதிருந்த போதிலும், நடை முறையில் சிறிய உயிர்க்கூள ஆய்வுத் திட்டங்கள் நடை முறைப்படுத் தப்பட்டு வருகின்றன. நியூசிலாந்து 27 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு கொண்ட நாடு. இந்நாடு முதன்மையான போக்கு வரத்து வழியிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால், பாறை எண்ணெய் உட்பட எல்லா பொருட்களும் ஆயிரக்கணக்கான கிமீ. தொலைவு கடந்துவரவேண்டி உள்ளது. தொடக்கக் காலத்தில் ஆற்றலின் தேவைக் காகக் காட்டிலிருந்து கிடைத்த விறகையே பயன் படுத்தி வந்தனர். பெரும்பான்மையான காடுகள் நசிந்து போன பின்னர், நீராவியால் ஓடும் போக்கு வரத்து ஊர்திகளும், தொழிற்கூடங்களும் நிறுவப்பட்டு அதற்கு எரிபொருளாகக் கரியைப் பயன்படுத்தினர் 1910 லிருந்து முப்பது ஆண்டுகள் வரை கரியே நியுசி லாந்தின் தலையாய எரிபொருளாக இருந்தது. நியுசி லாந்தின் அறிவியல், தொழிலக ஆராய்ச்சித்துறை (Department of Scientific and Industrial Research) மரத்திலிருந்து எத்தனால் என்ற எரி பொருள் தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மரத்திலிருந்து எத்தனாலே பெறுவதற்கானமுறை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலில் நீராற் பகுப்பு (hydrolysis) மரத்திலுள்ள கார்போ ஹைடி ரேட்டு (carbohydrate) கரையக்கூடிய சர்க்கரையாக மாற்றப் படுகிறது. மரத்திலுள்ள கார்போஹைடி ரேட்டில் ஏராளமான சர்க்கரை மூலக்கூறுகள் சங் கிலி வடிவில் அமைந்துள்ளன. இத்துடன் தண்ணீர் சேரும்போது சங்கிலி வடிவச் சர்க்கரை மூலக்கூறுகள் தனித்தனிச்சர்க்கரை மூலக்கூறுகளாகப் பிரிந்து விடு கின்றன. நீரிடைச் சேர்மப்பகுப்பினை விரைவுப் படுத்த 0.5 சதவிகித நீர்த்த கந்தக அமிலம் (dilute