348 ஆற்றல், உயிர்க்கூள
348 ஆற்றல்,உயிர்க்கூள படம் 3 எரிபொருள் காடுகள், மதுரைப் பல்கலைக்கழகம் (கோயல் தாவரப்பாத்தி யூக்கலிப்ட்டஸ், லூசிவா தாவரங்கள்) இத்திட்டத்தின் கீழ் உயிர்க்கூள எரிபொருட்களைத் தயாரிக்க உதவும் தாவரங்களைப் பற்றியும். அவற்றை எரிபொருளாக மாற்றுவது தொடர்பா கவும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. பாறை எண்ணெய்க்கு நீர்மநிலை உயிர்க்கூள எரிபொருள் ஒன்றினை உருவாக்கும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். அவர்களது அரிய ஆராய்ச்சியின் பயனால் கேஸோஹோல் (gasohol) என்ற இவ் வெரிபொருள் 10 விழுக்காடு எத்தனாலையும் ethanol) 90 விழுக்காடு கேசோலினையும் line) இணைத்துத் தயாரிக்கப்பட்டது. இன்று அமெரிக்க நாடுகளில் 2.000 எரிபொருள் நிலையங் களில் கேசோஹோல் விற்பனை செய்யப்படுகிறது. (gaso- மேலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுண்ணிய கடல் பாசிகளிலிருந்தும் பெரிய மாக்ரோசைடிஸ் என்ற கடல்பாசியில் இருந்தும் நீலப்பாசி, பலூன் பாசி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற எக் கோர்னியா (Eichhornia crassipes) போன்றவற்றி லிருந்தும் எரிபொருள் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று உலகின் மூன்றிலொரு பகுதி மக்களின் எரிபொருளுக்காகக்காட்டிலிருந்து கிடைக்கும் விறகே பயன்படுகிறது. இக்காரணத்தால் ஆசிய நாடு களின் கான்வளம் பெருவாரியாக அழிந்தது. கான்வளப் பாதுகாப்புப் பொருட்டு ஆசிய நாடுகள் உயிர்க்கூள ஆய்வுகளில் கவனம் செலுத்தின. காட்டி படம் 4. மரம், உலக ஆற்றல் வளம்