ஆற்றல், உயிர்க்கூள 347
படம் 2. எரிபொருள் காடுகள், சுவீடன் முறையில் (thermochemical) ஹைடிரஜன் கலந்த வளிமமாக்குதல், வளிமமாக்குதல் (gasification) தீயாற் பகுத்தல், (pyrolysis) எரித்தல் (combustion) ஆகிய முறைகளில் உயிர்க்கூள எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. களை ஹைடிரஜன் கலந்த வளிமமாக்குதல் (hydro gasi - Mication). இம்முறைப்படி உலர்ந்த தாவரக் கழிவு உயர்ந்த அழுத்தத்திலும், வெப்பத்திலும் ஹைடிரஜனுடன் (hydrogen) கலந்து நேரடியாக ஆவியாக்கும்போது மீத்தேன் (methane) ஈத்தேன் (ethane) போன்ற வளிம நிலை உயிர்க்கூள பொருட்கள் கிடைக்கின்றன. எரி வளிமமாக்குதல் (gasification). ஹைடிரஜனின் விலை அதிகமாக இருப்பதாலும், கிடைப்பதற்கு அரி தாக இருப்பதாலும், இம்முறையில் ஹைடிரஜன் கலக்காமல் கரியையும் (charcoal) தாவரக் கழிவுக ளையும் ஆவியாக்குதல்முறையில் அவை எரிபொருளாக மாற்றப்படுகின்றன. தீயாற் பகுத்தல் (pyrolysis). இம்முறையில் வெப் பத்தின் மூலம் காற்றில்லாத கொள்கலன்களில் வளிம நிலை தாவரக்கழிவுகள் எண்ணெயாகவும் எரிபொருளாகவும் மாற்றப்படுகின்றன. எரித்தல் (combustion). இம்முறையில் நேரடி யாக விறகு, கரும்புச் சக்கை போன்ற உயிர்க்கூளப் பொருட்களை எரித்து, அதன் மூலம் உயர் அழுத்த மும் கொண்ட நீராவி தயாரிக்கப்படுகின்றது. இந் நீராவி பல்வேறு எந்திரங்களை இயக்கப் பயன்படுத் தப்படுகிறது. எரி உலர்ந்த தாவரப் பொருட்களிலிருந்து பொருளைத் தீயாற் பகுத்தல் முறையும், எரித்தல் ஆற்றல், உயிர்க்கூள 347 முறையும் சிறந்தவாகும். காற்றில்லாச் செரித்தல் முறை ஈரமான உயிர்க்கூளப் பொருட்களிலிருந்து எரிபொருளைப்பெறச் சிறந்த வழி. உலகில் உயிர்க்கூள ஆற்றலினைப் பயன்படுத்தும் நாடுகளான வெப்பமண்டல நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவை அன்றாட வீட்டு ஏரி பொருள் தேவைகளுக்காக நீலகிரிமரம் (eucalyptus) கூபாப்புல் (leucaena) போன்ற அதிக வெப்ப ஆற் றல் தரும் மரங்களை வளர்க்கிறார்கள். இந்த உயிர்க்கூளஆற்றலாகாடுகளிலிருந்து (biomass energy plantations) குறைந்த செலவில் எரிபொருள் கிடைக் கிறது. நீர் நிலையிலான உயிர்க்கூள எரிபொருட் களை அமெரிக்க ஒன்றிய நாடுகளும் பயன்படுத்து கின்றன. இந்நாடுகளில் மரத்தை (wood) தீயாற் பகுத்தல் மூலம் பிரித்து, மெத்தனால் (methanol ) என்ற நீர்மநிலையிலான எரிபொருள் தயாரிக்கப்படு கிறது. இந்த எரிபொருளைத் தொழிற்சாலைகள் இயக்கவும், போக்குவரத்து ஊர்தி ஓட்டவும் பயன் படுத்துகிறார்கள். பிரேசில், ஆஸ்த்திரேலியா, நியூசி வாந்து, போன்ற நாடுகளில் நொதித்தல் மூலம் மரத் திலிருந்து எத்தனால் (ethanol) என்ற நீர் எரி பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்தியா, சீனா, கொரியா, ஜெர்மனி, அமெரிக்க ஒன்றிய நாடுகள் போன்ற நாடுகளில் தாவரப் பொருட்களிலிருந்து மீத்தேன் (methane) தயாரித்து சமையல் வேலை களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.வளிமநிலை உயிர்க் எரிப்பொருட்களைப் பயன்படுத்துவதில் இந்நாடுகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள் கூள ளன். து. வங்காள தேசத்தில் 97 விழுக்காடு வீட்டு ஏரி தேவை, தாவரக் கழிவுகளிலிருந்தும், விலங்குகளின் பெருள் கழிவுகளிலிருந்தும் பெறப்படுகிறது. தென் அமெரிக்காவின் பிரேசில் கயானா ஆகிய நாடுகளி லும், ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானா, எகிப் கென்யா, தென் ஆப்பிரிக்கா. டான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் ஆசியாவில் இந்தியா வங்காளதேசம், ஜப்பான், இஸ்ரேல், கொரியா, நேப்பாளம், பாகிஸ்த்தான்,தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தைலான் போன்ற நாடுகளிலும், ஐரோப்பாவில் சோவியத் நாடு, இங்கிலாந்து, ஸ்வீடன்,ஃபிரான்சு போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, பிஜித் தீவுகள் போன்ற நாடு களிலும் உயிர்க்கூள ஆற்றல் பலவழிகளிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 1974 இல் பாறை எண்ணெய் போன்ற எண் ணெய்ப் பொருள்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டிற் குப் பின்னர் உயிர்க்கூள ஆராய்ச்சிகள் பலநாடுகளில் முழு வேகத்துடன் செயல்படுத்தப்பட்டன. இவ்வா ராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது அமெரிக்க ஒன்றிய நாடுகளின் ஆற்றல் துறையின்(United States Depart- ment of Energy) உயிர்க்களங்களிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டம் (Fuels from Biomass Programme),