உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 ஆற்றல்‌, கடல்‌ ஓத

354 ஆற்றல், கடல் ஓத (total power dissipated) 157 மில்லியன கிலோவாட் டுகள் என மதிப்பிடப்படுகின்றது. கடலோத ஆற்றல் தனித்தன்மை வாய்ந்த ஒன்றா கும். இதனுடன் ஓர் ஆற்றின் ஆற்றலை ஒப்புமைப் படுத்த முடியாது. அவ்வாறு ஒப்புமைப் படுத்த முயலும்போது பெருந்தவறுகள் தோன்றுகின்றன. கடலலை ஆற்றலினை வழங்கும் கடல் ஓத நிகழ்ச்சி tidal phenomenon) அலை ஒத்திசைவை (resonance effect) அடிப்படையாகக் கொண்டது. இவ்விளைவு மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். மேலும் அத்தகைய ஆற்றலைப் பயன்படுத்தும்போது அது கடல் ஓத வட்டாரங்களில் (tidal regime) மாறுபாடு கள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்து அத னால் இக்கடலோத வட்டாரங்கள் பெருந்தொலை வுக்குப் பரப்பப்பட்டு, தொடக்கத்திலிருந்த நிலை யினைப் பெரிதும் மாற்றம் செய்கின்றன. ஜெப்ரீயின் கணக்கீடுகளிலிருந்து உலகம் முழு தும் கடலலைகளால் சிதறடிக்கப்பட்ட சராசரித் திறன் 1,100 மில்லியன் கிலோவாட்டுகளாகும் என்று திறன் அறிகிறோம். இதில் பெரும்பான்மையான ஆழமற்ற, குறுகிய கடல்களான ஆங்கிலக் கால்வாய், ஐரிஷ்கடல், வடகடல் (north sea) மற்றும் பெருங் கடற் கால்வாய்களிலிருந்து வழங்கப்படுவதாகும். இத் திறன் மொத்தத் திறன் அளவில் 70% ஆகும். ஜெப்ரீ இக்கணக்கீடுகளைச் செய்த காலத்தில் (1952) நிலவு நகருவதற்கும், கோட்பாட்டின் வழி யாகக் கணக்கீடுகளில் கண்டறிந்த விடைகளுக்கும் உள்ள ஒப்பீட்டின் விளைவாக வான ஆராய்ச்சியா ளர்கள் (astronomers) வான்வெளி இயக்கம் சார்ந்தி ராத எஞ்சியுள்ள உலகியல் சார்ந்த முடுக்கம் (resi- dual secular acceleration) இருக்க வேண்டும் என்று கருதினர். நிலக்கோளத்தின் சுழலும் வேகம் (rotati- onal speed) குறைகின்றதென்றும் அதனால் 1400 மில்லியன் கிலோவாட்டுகள் திறன் வெளியாகின்றன வென்றும் விளக்கப்பட்டன. இவ்வகையில் கணக்கி டப்பட்ட அளவுகள் ஜெப்ரியின் கணக்கீடுகளில் கண் டறியப்பட்ட அளவுகளுடன் பொருந்தியுள்ளன. இதன் விளைவாக நிலக்கோளத்தினுடைய சுழற்சி யின் காரணமாய்க் கடலலைக்கான திறன் கடல் நீருக்கும் கடலின் படுகைக்கும் இடையில் ஏற்படும் உராய்வினால் பெறப்படுகிறதென்றும் இதனால்தான் பூமியின் சுழற்சி குறைகின்றதென்றும் கூறப்பட்ட விளக்கங்கள் மிகவும் பொருத்தமாகத் தோன்றின. 1960 ஆம் ஆண்டுகளின் தொடக்கக் காலங் களில், இவ்விளக்கம் சரியென ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அணுக்கரு ஆற்றலால் இயங்கும் நீர்மூழ்கியான (nuclear submarine) நாட்டிலியசில் (Nautilus) கண்டறியப்பட்ட குறிப் புகளிலிருந்து ஜெப்ரினுடைய எண்களை பங்கிற்குக் குறைக்க வேண்டும் என்று அறிகிறோம். மேலும் சிவ புகழ்மிக்க வான ஆராய்ச்சியாளர்கள், நிலக்கோளத் தினுடைய சுழலும் வேகம் நிலையாக இருக்கும் என்றும் கருதினர். பலவித அறிவியற் கருத்துக்கள் இருந்த போதிலும், முழுமையாக நிறுவப்படாத அடிப்படைத் கேள்வி கடலலையின் ஆற்றலின் மூல மாக அமைவது சூரியனுடைய வெப்ப ஆற்றலா அல் லது நிலக்கோளின் இயங்கு ஆற்றலா என்பதாகும். கடல்மின் திறன்நிலையங்கள். வரலாற்றின் இடை நிலைக் காலங்களிலிருந்தே, கடலலைகள் ஆற் றல் வாயிலாகப் பயன்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக, பன்னிரண்டாம். நூற்றாண்டு முதற் கொண்டே பிரான்சு நாட்டில் பிரிட்டானி என்னும் இடத்தின் கடலோரப் பகுதிகளில் நீராலைகளை (water mills) இயக்கிக் கடலலையின் திறன் பயன் படுத்தப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின்போது ஆற்றல் வகை குறைந்த விலையில் கிடைத்தமையால் இப்பயன்பாடு படிப்படியாகக் குறையலாயிற்று. இருப்பினும், சில சிறிய கடலலைகள் 1959 ஆம் ஆண்டில் இயக்கத்தில் இருந்தன. இந்த நேரத்தில் தான் பிரான்சு நாட்டின் மின்கழகம் உலத்தின் மிகப் பெரும் கடல் மின் நிலையத்தை இரான்சு ஆற்றின் கடலோரப் பொங்குமுகத்தில் (புனித மாலோடினார்டு, பிரிட்டானி) நிறுவுவதற்கு முடி வெடுத்தது. கடலலை ஆற்றலைப் பயன்படுத்துவதை நன்கு புரிந்து கொண்டு, மிகப்பெரும் முன்னேற்றங் களைப் பிரான்சு நாட்டினர் செய்துள்ளனர். இரான்சு பொங்குமுகத்தில் தேவையானசாதனங் களைப் பொருத்திப் பேரளவில் மின் ஆக்கம்(2,40,000 கிலோ வாட்டுகள்) செய்யத் தேவையான ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டன. ஆனால் இதற்கான விரிவான வடிவமைப்பும் கட்டுமானமும் 1960 ஆம் ஆண்டின் தொடக்கம் வரையில் தொடங்கப்படவில்லை.1967 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் தொடக்கத்தில்தான் 24 சுழல்மின் ஆக்கி (turbo alternator) அணிகள் இறுதியாக இணைக்கப்பட்டன. இந்த நிலையத்தின் வெற்றிகரமான இயக்கம் மூன்று முதன்மையான கூறுகள் உருவாகக் காத் திருக்க வேண்டியதாயிற்று. அவையாவன, முழுமை யாக இல்லாவிட்டாலும், பேரளவில் கடலலை நிகழ் வைப்புரிந்து கொள்ளுதல், (2) குமிழ் வகை (bulb unit) சுழலி மின் ஆக்கி அணி உருவாதல், இருபக்கப் பாய்விலும் குறைந்த உயரங்களில் இயக்கத் தக்கதா யும், இந்த அணியே எக்கியாக வேலை செய்வதற்கு ஏற்றதாயும் வடிவமைக்கப்படல், இரான்சு பொங்கு முகத்தைத் துண்டித்தலும் இவ்வாறு துண்டிப்பதால் ஆற்றில் அணை கட்டப்பட்டு, உச்சப் பாய்வான 18,000 பரு மீட்டர்/நொடி அளவுள்ள நீரை வெள்ளக் காலத்திலும், வடியும்போதும் தேக்கி வைத் என்பனவாகும். முதலில் கூறப்பட்ட கூறில், தல் .