உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, கடல்‌ ஓத 355

உயர்பகுப்புமுறைக் கணக்கீடுகளும், கருத்துவடிவான ஆய்வுகளும் அடங்கும். பின்னர்க் கூறப்பட்ட இரு கூறுகளிலும், இயக்கம், மின்சாரம், கட்டடம், நீர்ம மவியக்கம் சார்ந்த சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளும் மற்றும் பயன்படுத்தும் பொருள்களுக்கான தொழில் நுட்பமும் அமைகின்றன. நிறுவப்படும் அமைப்புக் கள் பொங்குமுகத்தின் இடப்புறக் கரையின் டீவா பிரெபிஸ் (de la Brebis) என்ற புள்ளியிலிருந்து வலப்புறக் கரையின் மேலமைந்த டீலா பிரியான் டைஸ் (de la Briantais) என்ற புள்ளி வரையில் 750மீட்டர் தொலைவு இடைவெளியில் அமைகின்றன. இரான்சு ஆற்றின் பொங்குமுகத்தில் அமைக்கப் பட்ட கடல்லை நிலையம், கடலலைகளின் வழியாக மின் ஆக்கம் செய்யும் அமைப்புகளைக் (tidal genera- ting facilities) கொண்டது. இவ்வமைப்பு கடலி லிருந்து ஓர் அணையினால் பிரிக்கப்பட்டுள்ளது. வெளியேறிச் செல்லும் கடலலைகளுடன் நீர்நிலை யிலிருந்து கடலுக்கு இயற்கையாக வடியும் வீதம் அல்லது உள்வரும் கடல்லைகளுடன் நீர்நிலையை நிரப்புவதற்கான வீதம் ஆகியவற்றினைச் சரி செய்வதற்கு ஏற்றவாறு அணையில் மதகுக் கதவுகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலை, கடல் இரண்டின் உயர வேறுபாட்டைக் கட்டுப்படுத்திப் பொருத்த மான உயர வேறுபாடு பெற்றதும், அணையின் வழி யாக நீர்நிலை நிரப்பப்படுகிறது அல்லது காலி செய்யப்படுகின்றது. நீர்ப்பாய்வினைப் பயன்படுத்தி நீரியற் சுழலிகளின் சக்கரங்கள் சுழல வைக்கப்படு கின்றன. இந்நீர்ச் சுழலிகள் இயங்கி, மின் ஆக்கிகளை (alternators) இயக்குகின்றன. இத்தகைய அணிகள் மின்திறனை உண்டாக்குகின்றன. செயல்முறை சார்ந்த மூன்று கூறுகளைத் தவிர (அணை, மதகுகள், சுழலிமின் ஆக்கிகள்) கீழ்க் காணும் கூடுதல் தேலைகளையும் நிறைவு செய்ய வேண்டும். அவையாவன, (அ) இவ்வணையானது கடலுக்கும் பொங்குமுகத்திற்குமான இடைப்பட்ட பகுதியில் கடல் மற்றும் கரையை நோக்கிய போக்கு வரத்திற்குத் தடையை உண்டாக்குவதாக இருக்கக் கூடாது. எனவே போக்குவரத்திற்காகத் திறந்து மூடும் அமைப்பினைச் (lock) சேர்ப்பது தேவை யாகின்றது. (ஆ) நிறுவப்படும் அமைப்புகளின் பொதுத்தோற்றம், இடத்தின் இயற்கையான இயல்பு களைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும். மேலும், (இ) இக்கட்டுமானம் இரான்சு ஆற்றின் குறுக்கே ஒரு பாதையைக் கொண்டதாயும் அமைய வேண்டும். நிலஇயலாக இரான்சு பொங்குமுகமானது கடலலை கள் பொங்கிப் பின்னர் தணிந்து உருவாக்கப்பட்ட தாகும். மேலும் இதனுடைய கரைகள் கூர்விளிம் புடன் கூடியவையாய் உள்ளன. வடியும் கடலலையின் சுழி உயர அளவிற்கும், தனித்தன்மை வாய்ந்த பெரிய அலையெழுச்சிகளின் 13.5 மீட்டர் உயர அளவிற்கும் இடையில் கடலலை, அ. க. 3-23அ ஆற்றல், கடல் ஓத 355 நீர்நிலையில் கொள்ளத்தக்க பருமன் அளவு 184 மில்லியன் பரு மீட்டராகும் (6.5 மில்லியன் பருமன் அடி). நீர்நிலையில் சுழி உயரத்திற்குப் பொருத்த மான பரப்பளவு 4.3 சதுரக் கிலோ மீட்டராகும். மேலும் 13.5 மீட்டர் அளவு நீர்நிலையின் பரப் பளவு 22 சதுரக் கிலோ மீட்டராகும். 1940ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் பிரான்சிலும், ஐரோப்பாவிலுள்ள மற்ற பகுதிகளி லும் உள்ள ஆற்று அமைப்புக்களில் மின்சாரம் பெறும் கருவிகள் நிறுவப்பட்டதன் காரணமாக வடிவமைப்பாளர்கள், குறைந்த உயரமுடைய ஆற்று இடங்களில் ஆற்றலைப் பெறும் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்தனர். ஆனால் இவ்வறிவைக் கொண்டு கடலலை நிலைய வடிவமைப்பினை அவர் களால் செய்ய இயலவில்லை. நீர்நிலையில் நீர் உயர மும், நீர் வெளியேற்றமும் மிகுந்த அளவில் வேறு படும்போது, நீர்ப்பாய்வின் இரு திசைகளிலும், சுழலி யின் இயங்கு இடைவெளி, கடலலை நிலையத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாக அமைகின்றது. கடல் மின்நிலைய இயக்க ஆய்வுகளிலிருந்து உயர் ஓத தளர்ந்த நீரின்போது நீரேற்றம் செய்து நீர்நிலையை மிகுதியாக நிரப்புதலும் தாழ்ந்த அலையின் போது நீர்நிலையை அதிகமாகக் காலியாக்குவதும் நன்மை பயக்கத் தக்கன என்று அறிகிறோம். இத்தகைய செயலிற்குக் குறைந்த உயரங்களில் நீரினை வழங்கும் எக்கிகள் தேவையாயின. இராபர்ட் கிப்ராட் என் பவரால் செய்யப்பட்ட வடிவியல் ஆய்வுகளில், கடல் மின் திறன் நிலைய இயங்கு சுழற்சிகளுக்கு மிக்க ஆற் றல் வாய்ந்த வாய்ப்புக்கள் உள்ளதைக் கண்டறிந் தார். இச்சுழற்சிகளிலிருந்து உச்ச அளவு நன்மையைப் பெறுவதற்குச் சுழலிகளாகவும், எக்கிகளாரவும் அல்லது துளைவாய்களாகவும் (orifices) இரு பக்கப் பாய்விற்கு ஏற்றவாறு இயங்கக் கூடிய தொகுதிகளை உருவாக்குவது மிகவும் தேவையாக அமைந்தது. ணைந்த படத்தில் குமிழ் வகை அணியின் (bulb- unit) குறுக்குவெட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. கடலலை ஆற்றல் தொழில்நுட்பப் பகுதியில், இரான்சுப் பொங்குமுகத்தில் நிறுவப்பட்ட கருவி அமைப்பே, மிகப் பெரிய வெற்றியாக இந்நாள் வரையிலும் உள்ளது. கனடா நாட்டில் ஃபண்டி (fundy) வளைகுடாவில் தொடங்கிய காலத் திட்ட மான சிறிய கோடியாக் (little kodiak) திட்டம் குறைந்த கொள்ளளவினைக் கொண்டதாய் இருந்த தாலும் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்ததால் அதன் மீது அதிக அளவில் நாட்டம் செல்லவில்லை. ஆனால் புனித இலாரன்சு என்னும் இடமும் அதற்கு வடக்கே அமைந்த நீர் விழும் இடங்களும் நீர்மின் ஆற்றலைப் பெறுவதற்கு வளமிக்க இடங் களாக அமைந்தன. 1930ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில், அமெரிக்க ஒன்றிய நாட்டில், பாசமா கொடித் திட்டம் (passamaquody project) தீடீரெனத்