376 ஆற்றல், சூரிய
376 ஆற்றல், சூரிய இரண்டிலிருந்து ஆரத்தை உடைய மூன்று வயலில் மடங்கு அளவு சூரியஒளி நிலைகளை 4 முதல் 10 சதுர மீட்டர் அளவு இடைவெளி களில் அமைப்பதனால், அவற்றின் நிழல் கள் ஒன்றின் மீது ஒன்று விழாமல் தடுக்கப் படுகின்றது. கண்ணாடிப் பரப்புகள் மிதப்பு முறை யில் வெள்ளியினால் பூசப்பெற்றோ பாதுகாப் புப் பூச்சினைக் கொண்ட உலோகத்தினா லான மென் படலத்தினாலோ செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கண்ணாடியும், உறுதியான உ தாங்கிச் சட்டத்தில் (rigid support frame) பொருத்தப்பட்டு ஈலியோ ஸ்டேட்டாக ஆக்கப்படுகின்றது. பூமியின் மீது நீட்டப்படும் சூரியத்தட்டின் கோண அளவு 0.5% ஆகும். மேலும் மிகத்தொலைவிலுள்ள கண் ணாடிக்கு இந்தப் பெறும் அமைப்பானது (receiver) இக்கோண அளவில் இரண்டு மடங்கினை அல்லது 1 இணை வழங்குகின்றது. தட்டையான பரப்பின் மையாலும், அடித்தளத்தின் திருப்பத்தினாலும் குறிப் பிட்ட திசையில் செல்லாமற்போகும்போதும் உண்டா கும், எதிர்பலிக்கப்பட்ட ஒளிவிலக்கங்கள் (optical deviations ) 0.1% வரம்பளவிற்குள் உட்பட்டிருக்க வேண்டும். மணற்காற்றினாலும் ஆலங்கட்டி மழை யினாலும், இப்பரப்புகள் அழிவடைவதைத் தடுக்க அந்நேரங்களில் இப்பரப்புக்களைத் தலைகீழாகக் கவிழ்த்தோ குத்துநிலையிலோ வைப்பதற்கேற்ற வாறு சூரிய ஒளி நிலை வடிவமைப்புகள் ஆராயப் பட்டு வருகின்றன. இப்பரப்புகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான நிலை மின்முறைகள் (electrostatic methods) ஆராயப்பட்டு வருகின்றன. இச்சட்டத்தின் கட்டமைப்பு 200 கிலோ மீட்டர் மணி வேகத்திலான காற்றினைத் தாங்குவதற்கு ஏற்ற வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரக் கருத் தைப் பயன்படுத்திச் சூரிய ஆற்றலைப் பெறும் பொரு ளாதாரம், குறைந்த விலையில் உயர்பண்புடைய சூரிய ஒளிநிலைகள் பெரும் அளவில் தயாரிக்கும் திறமையைப் பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு சதுரமைல் பரப்பளவில் பெறப்பட்ட ஆற் றலை ஆற்றல் பயன் கருவிகளில் பயன்படுத்துவது பெரும் வியப்பினை உண்டாக்குவதாய் அமையும். நூற்றுக் கணக்கில் நிறுவப்பட்ட அத்தகைய அமைப் புகளிலிருந்து ஆற்றலைப் பெறுவது ஆற்றல் வழங் கீட்டில் ஒரு குறிப்பிட்ட சாதனையை உருவாக்கு கின்றது. 300 மீட்டர் கோபுரத்திற்குப் பதிலாக, வடிவியல் அமைப்பில் ஒத்த 100 மீட்டர் கோபுரங் களைப் பயன்படுத்தும்போது ஒன்பது கோபுரங் களே போதும். ஒன்பது சிறிய கோபுரங்களுக்கான கட்டுமானச் செலவு ஒரு தனித்த பெரிய கோபுரத்திற் காகும் செலவிற்கு ஈடாக இருந்தாலும், இந்த ஒன்பது சிறிய கோபுரங்களிலிருந்தும் செல்லும் வெப்ப மாற்றத் தொடர்களை (heat transfer lines) மைய மின் ஆக்கியுடன் இணைப்பதற்கான செலவுகளும் வெப்ப இழப்புக்களும், அதிகமா கின்றன. 20 சதுர மீட்டர் அளவிற்கும் குறைவான சூரிய ஒளிநிலைகள் பொருளாதார வகையில் சிக்கன மாக இரா. ஏனெனில் இந்த அளவினைக் கொண்ட சூரிய ஒளி நிலையின் தாங்கி அதனை இயக்குவிக்கும் கருவி (actuator ) சூரிய ஒளித்திசையினை அறிந்து திருப்பும் அமைப்பு (steering system) ஆகியவற்றிற் காகும் செலவு பெரிய அளவினைக் கொண்ட சூரிய ஒளிநிலைக்கு உள்ளதைப் போன்றதாகையால் செலவுகள் குறைவதில்லை. நீரினை வெப்ப மாற்ற நீர்மமாகத் (heat transfer fluid) தேர்ந்தெடுப்பதன் காரணம் யாதெ னில் நீராவியைப் பயன்படுத்தும்போது புதிய தொழில் நுட்பம் ஏதும் தேவைப்படுவதில்லை. உட் கவரப்பெற்ற நீர்மத்திற்கு மாற்றம் செய்ய வேண் டிய சூரிய ஆற்றலின் வெப்பப் பெருக்கடர்த்தி (flux density) வழக்கமான நீராவி நிலையங்களில் பெறப்படுவதைக்காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டுமாகையால் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் திறம்பட இயக்குவது தேவையாகின் றது. தினமும், பருவகாலங்களிலும் சூரிய வெப்பப் பெருக்கு வேறுபாட்டினால் இச்சூரிய ஆற்றலைப் பெறும் கருவியின் வடிவமைப்பு எளிதாக இராது. மேலும் சூரிய ஆற்றலைப் பெறும் பரப்பிலிருந்து, நீராவி தொடருக்கான (steam line) வெப்ப மாற்றத் தைச் சோடியம் போன்ற நீர்ம உலோகத்தைப் (liquid metal) பயன்படுத்துவதால் நன்கு பெறலாம். நீர்மச் சோடியத் தொழில் நுட்பம் அணுஉலைப் பயன்பாடு களில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்மச் சோடியத்தினை இயக்கும் வெப்ப நிலைகள் 550 இலிருந்து 650°செ. உகந்ததாக அமைகின்றது. உயர் வெப்ப நிலையில் வெப்பத் தேக்க இடையீட்டுப் பொருளாகச் (thermal storage medium) சோடியம் அமைகின்றது. இத்தகைய உயர் வெப்ப அமைப்பில் தொடர்பற்ற இயல்பினைக் கொண்ட சூரிய ஆற்ற லின் வெப்பச் சுழற்சியினை விரிவானதொரு வடிவ மைப்பில் நாம் காண வேண்டும். காற்று இருக்கும் போது உயர் வெப்ப நிலையில் கருப்புப் பொருளால் ஆக்கப்பட்ட கொதிகலன் பரப்பு (black body boiler surface) பாழாகாமல் இருக்க வேண்டும். கொதிகலன் பரப்பு பாழடைவது ஒரு பிரச்சினையாக இருக்கும் போதும, வெப்பச் சுழல் இழப்புக்கள் (convective losses) பெரும் அளவில் இருக்கும்போதும், தலை கீழாகத் திருப்பப் பட்ட உட்குழிவினைக் கொண்ட வடிவமைப்பினைப் (inverted cavity design) பயன் படுத்தலாம். ஒரு மணி அளவு குறைந்தகால சூரிய ஆற்றல் தேக்கத்தையோ அதற்கும் குறைவான நேரத் திற்கான சூரிய ஆற்றல் தேக்கத்தையோ கொண்டு சூரிய ஆற்றல் முறையில் மட்டும் இயங்கும் நீராவி ஆக்கியில் சூரிய ஆற்றலை நன்கு பயன்படுத்தி இயக் கத்தில் நிலைத்தன்மையை அடையலாம். பயன்படுத்