ஆற்றல், சூரிய 377
ஆற்றல், சூரிய 377 தும் சாதனங்கள் மிகவும் நம்பத் தக்கலையாய் இருக்க வேண்டி இருப்பதாலும், மேக மூட்டம் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளமையாலும், சூரிய ஆற்றலால் இயங்கும் ஒரு புதிய நிலையத்தின் ஆக்க அளவினைச் சரியாகக் கூற இயலுவதில்லை. நீர் மப் பெட்ரோலிய வளிமத்தையோ (liquid petroleum gas) எண்ணெயையோ துணை நீர்ம எரிபொருள் களாகப் பயன்படுத்துவது இயலத்தக்கதாக அமை யும்போது சூரிய ஆற்றலால் ஒரு புதிய நிலையத தின் பெரிதுபடுத்திக் கூற ஆக்கஅளவினைப் லாம். சூரிய ஆற்றலால் பெறும் வெப்பத்துடன் எண்ணெய் அல்லது நீர்மப் பெட்ரோலிய வளிமத்தி லிருந்து பெறப்படும் வெப்பத்தைச் சேர்ப்பதற்கு, எளிய குறைந்த செலவினைக் ஒரு கொண்ட அடுப்பே போதும். நீர்ம எரிபொருள்களின் வழங்கீடு குறைவாக இருந்தாலும், அவைகளை எளிதில் தேக்கி வைக்கலாம். மேலும் சூரிய ஆற்றல் நிலையத்தை ஓர் இடைநிலை நிலையமாக (intermediate plant) நம்பிக்கையுடன் இயக்கலாம். உண்மையான இயக்க நிலைகளைச் சார்ந்து, மிகச்சிறிய அளவிலான நீர்ம எரிபொருளைக் கூட எரிக்க வேண்டியிருக்கும். இத் தகைய கலப்பு நிலையத்தை (hybrid plant) வளிமச் சுழலியைத் (gas turbine) துணையாகக் கொண்ட சூரியத் திறன் நிலையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதற்கு மாறான அணுகுமுறையாகத் தோன்றுவது யாதெனில் நிலத்தடித் தேக்கப் பள்ளங் களில் உணர்கின்ற வெப்பமாகவோ (sensible heat) உள்ளுறை வெப்பமாகவோ (latent heat) அமையும் நிலையில் இச்சூரிய ஆற்றலைத் தேக்கி வைக்கும் முறையாகும். சூரிய ஆற்றலை உறிஞ்சும் பூச்சும், வெப்பக்குழாய் அமைப்பும். இதற்காகக் கூறப்பட்ட முறையில் உயர் வெப்ப நிலைகளில் இயங்கி சூரிய ஆற்றலை உறிஞ்சும் பூச்சும் இவ்வாறு பெறப்பட்ட சூரிய ஆற்றலை உட்கவர்ந்து எடுத்துச் செல்லத்தக்க வெப்பக் குழாயும் தேவை ஆகும். (காண்க,படம் 11). அமைப்பின் முக் கியமான உறுப்புகள் கீழே தரப்படுகின்றன. அவை சூரிய ஆற்றலை வெப்பக் குழாயின் (heat pipe) மேல் குவித்துச் சூரிய ஆற்றலைச் செறிவூட்டும் அமைப்பு (solar concentrator), தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளிப்பூச்சினைக் (optical coating), கொண்ட வெப் பக் குழாய், வெப்பத் தேக்கத் தொகுதிக்கு (therma| storage unit) வெப்பக் குழாயை இணைக்கும் வெப்ப மாற்றக் கண்ணி {heat transfer loop), வெப்ப மாற்றக் கண்ணியிலிருந்து (transfer loop) வெப்ப ஆற்றலைப் பெற்று வேலையில் செயல்படும் நீர்மத்தின் (working fluid) ஆற்றல் சுழற்சிக்கு (power cycle) அவ்வாற் றலை வழங்கும் வெப்பத் தேக்கத் தொகுதி என்பன வாகும். இத்தகைய அமைப்பினை உருவாக்குவதற்குச் சில ஒவி குவிக்கும் அமைப்பு வெப்ப மாற்ற அமைப்பு தேக்கம் வெப்பம் மின்சாரம் எரிபொருள் சுழலியும் யின் ஆக்கியும் படம் 11. வழக்கமாகப் பயன்படுத்தும் ஆற்றலின் துணை தனிப்பட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. அவை யாவன, சூரிய ஒளியை எதிர்பலிக்கும் பரப்பின் (solar reflector surface) வாழ்நாள் பற்றிய ஆய்வு சூரிய ஆற்றலை உறிஞ்சும் பூச்சின் (solar absorber coating) வாழ்நாள், நில ஈர்ப்பு ஆற்றலால் இயங்கும் நீண்ட வெப்பக் குழாய்கள் (gravity aided long heat pipes), வெப்ப மாற்றக் கண்ணியில் நிகழும் வெப்ப மாற்றமும் அழுத்தம் குறைதலும் (heat transfer and pressure drop in a transfer loop), மையத் தேக்க அமைப்பில் நிகழும் (central storage facility) வெப்ப மாற்றம் மையமாக்கப்படாத தேக்க அமைப்பில் நிகழும் (decentralized storage facility) வெப்ப மாற்றம்,ஒட்டுமொத்தமான அமைப்பின் வடிவமைப்பு (overall system design) இதற்கானதொரு படிமத்தின் செயல்பாட்டு விளக்கம் (module demonstration) என் பனவாகும். இத்தகைய அமைப்பினைப் பரிந்துரைப் பவர்களின் அடிப்படைத் தத்துவமாக இருப்பது யாதெனில் காற்று வெளிகளிலும் (aero space) அணுக்கருத் தொழிற்சாலைகளிலும் (nuclear indus- tries) மிகச் சமீப ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, சூரிய ஆற்றல் உறிஞ்சும் பூச்சுக்களும் (selective solar absorber coatings) நிலைத்த தன்மையைக் கொண்ட கண்ணாடிப் பூச்சுக் களும் (durable mirror coatings) குறை வெப்பச் செறி வடைந்த நீராவியினால் இயங்கும் சுழலிகளும் (saturated steam turbines) உயர் வெப்ப வளிம வெப்பமாற்றம் (high temperature gas heat transfer) செய்யும் நுட்பம் போன்றதும்