உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 ஆற்றல்‌, சூரிய

380 ஆற்றல், சூரீய கின்றன. உறைதலைத் தவிர்ப்பதற்காக உறிஞ்சும் குழாய்க்கும் (absorber tube) அதனைச் சூழ்ந்த, கண்ணாடி உறைக்கும் உள்ள இடைவெளியில் வெற் றிடத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. அழுத்த நீர் அமைப்பு காலையில் வெப்பம் அடைவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கின்ற தென்று கணக்கீடுகளிலிருந்து தெரிய வருகின்றது. வெப்ப மாற்றக் கண்ணியின் நீர்மமாக, அமுக்க நீரினைப் (pressurized water) பயன்படுத்தும்போது, சூரிய ஆற்றலைத் திரட்டும் வயலிலிருந்து பெற்ற லேப்பத்தினால் நீர் ஆவியாதல் நிறுத்தப்பட்டு விடுகின்றது. சூரிய வயலிலிருந்து (solar field) பெற்ற வெப்பமடைந்த அழுத்தமுடைய நீரினை இரண்டா வது நீர்மமான குறைவழுத்தங் கொண்ட நீருக்கு வழங்கி வெப்பமூட்டிக் கொதிக்கவைத்து மின்திறன நிலையத்திற்கு வழங்கப்படுகின்றது. மையக் கொதி கலன் வெப்பப் பரிமாற்றியின் வழியாக அழுத்தப் பட்ட நீர் கண்ணியிலிருந்து 60 பார்கள் அழுத்தத்தில் நீராவி நிலையத்திற்கான நீராவியினைப் பெற இயலு மெனக் கணக்கீடுகளிலிருந்து தெரிகிறது. (குறிப்பு (அ) 1 பார் என்பது சதுர சென்டிமீட்டருக்குச் 1 மில்லி யன் டைன்களுக்குச் சமமான அழுத்தத்தின் அல காகும், அல்லது 0.98697 செந்தர வளிமண்டல அழுத்தமாகும். / பார்என்பது தனிமுதல் சென்டி மீட்டர் கிராம் நொடி அலகில் 1 டைன் |சதுர சென்டி மீட்டர் அழுத்தத்திற்குச் சமமானதாகும்.) கூடு குழாய் வெப்பப் பரிமாற்றியில் (shell and tube heat exchanger) உள்ள குழாய்கள் வழியாக வெப்பத் துடன் அழுத்தத்தைக் கொண்ட நீர் பாயும்போது, நீராவி உண்டாகிறது. திறன் சுழற்சிக் கண்ணியில் (power cycle loop) முன்னரே வெப்பப்படுத்தப்பட்ட நீர் (preheated water) கூட்டில் (shell) முழுவது நிரம்பி வெப்பப்படுத்தும் குழாய்களிலும் மாக நிரம்புகின்றது. உயர் வெப்பநிலைச் சூரிய ஆற்றல் (high temper- ature solar energy). எங்கு உயர் செறிவூட்ட மூல மாக (concentrated source) மாசுறாத கதிர்வீச்சு ஆற்றல் கிடைகின்றதோ, அங்கு உயர் வெப்பநிலை ஆய்விற்காகவும் அச்சூரிய ஆற்றலைக் கொண்டு புதிய படைப்புக்களை உருவாக்கும் செயல்களிலும் சூரிய உலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத் தகைய செயல்களைக்கீழ்க்காணுமாறு வகைப்படுத்த லாம். அவை. மிகத்தூய்மையான அல்லது தனித் தன்மை வாய்ந்த பொருள்களின் உருவாக்கத்தைச் சார்ந்த உயர் வெப்ப வேதியியல் முறை (high tem- perature chemistry), ஒரு பொருளை உருக வைத் துத் தூய்மையாக்கி மேம்படுத்துவதற்கான உயர் வெப்ப நிலைச் செயல் முறைப்படுத்துதல் (high temperature processing), மாசுறாத சூழ்நிலையைக் கொண்ட நிலைகளில், ஒருபொருளின் பண்புகளைத் தீர்மானிப்பதை உள்ளடக்கிய உயர் வெப்பநிலை அளவீடுகள் (high temperature measurements), உயர் வெப்ப நிலையில், உயர் வெப்பத்தொடர் கதிர் வீச்சு ஆற்றல் சூழ்நிலையில் (high heat flux radiant energy environment) பொருள்களின் வெப்ப அதிர்ச்சி எதிர்ப்பு (thermal shock resistance) போன்ற பண்புகளைத் தீர்மானித்தல், உயர் வெப்ப நிலைச்சூரிய வெப்ப மாற்றம் செய்யும் அமைப்பு களின் ஆய்வுகளாகும். ஒளி புகும் கொள்கலத்தில் மேற்கண்ட இயக்கங் களைச் செய்து இச் செயல்பாடுகளை மேம்படுத்த லாம். ஒளி புகும் கொள்கலத்திற்குப் பதிலாக ஒரு கொள்கலத்தில் ஒளிபுகும் குவார்ட்ஸ் படிகம் வழி யாகக் கதிர்வீச்சு ஆற்றலைச் செலுத்தி அழுத்தத் தையும் கலவையையும் கட்டுப்படுத்தி மேற்கண்ட இயக்கங்களைச் செய்து விளைவுகளைக் கண்டறி யலாம். முன்னரே விரித்துரைக்கப்பட்ட வகைகளில் செய்யப்பட்ட உயர் வெப்பநிலை ஆய்வுகளில் (high temperature studies) சில எடுத்துக் காட்டுகளாவன, வெப்பப்படுத்திச் சிதைத்தல் முறையில் உருவாக்கப் பட்ட கிராபைட்டு (pyrolytic graphite) உண்டாவதற் கான வளி நிலை வினைகள் (gas phase reactions) உயர் தூய்மை உருக்கப்பட்ட அலுமினியம் ஆக் சைடு உருக்கப்பட்ட சிலிக்கா ஆக்கம், நிலைப் படுத் தப்பட்ட சிர்கோனியாவை (stabilized zirconia) உண்டாக்குதல், கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வினைப்படும் உலோகங்களைத் தூய்மைப் படுத்து தல், உயர் வெப்பநிலைகளில், மின் காப்பீட்டுப் பொருள்களின் (dielectric materials) நுண்ணலைச் செலுத்தப்பண்புகளைத் (micro wave transmission characteristics) தீர்மானித்தல், உயர் வெப்பத் தொடரைக் கொண்ட வெப்பக் கதிர்வீச்சு நிலைக் ளில் (high heat flux thermal radiation conditions) பொருள்களின் வெப்ப அதிர்ச்சி எதிர்ப்பு (thermal shock resistance) பற்றிய ஆய்வு, இவ்வாய்வினை அணுகுண்டு வெடிப்பினால் உண்டாக்கப்பட்ட வெப்பக் கதிர் வீச்சுத் துடிப்பின் மாதிரிகளுக்கு உட்படுத்தப்படுதல், மின்திறன் ஆக்கத்திற்காக நீராவி ஆக்கும் கொதிகலன்கள், மிகை வெப்பப் படுத்திகள் (boilers and super heaters) போன்ற வெப்பப் பரிமாற்றிகளை (heat exchangers) ஆய்வு செய்தல் என்பன. உயர் வெப்ப நிலை ஆய்விற்காக (high tempera- ture research) அத்தகைய உலைகள் வடிவமைப் பது காரணமாக இருந்தாலும் அவற்றிலிருந்து தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு மின்திறன் ஆக்கும் (power generation) சூரிய ஆற்றல் அமைப் புகளின் (solar energy facilities) வடிவமைப்பில் அத னைப் பயன்படுத்தலாம், பிரான்சிலுள்ள சூரிய ஆற்றல் உலைகள் (solar