உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, சூரிய 381

furnaces in France). பாரிசிலுள்ள தேசிய அறிவியல் ஆய்வுக் கழகத்தில் பேராசிரியர் கூடிராம்பி (Trombe) அவர்கள் தலைமையில் 1948 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் மான்ட்லூயியில் பைனீஸ் மலைத் தொடர் களில் உலகத்திலேயே முதலாவது பெரிய சூரிய உலையினை வடிவமைத்து, கட்டி, உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வுலை 1952 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு 50 கிலோ வாட்டு வெப்பத் திறனை வழங்கியது. மான்ட் லூயி சூரிய உலையே, மற்ற உயர் வெப்பச் சூரிய உலைகளுக்கு முன் னோடி வடிவமைப்பினை வழங்கியது. அடிப்படை யில், இந்த வடிவமைப்பில் தனித்ததொரு பெரிய சூரிய ஒளி நிலை (பல எண்ணிக்கையைக் கொண்ட தட்டையான கண்ணாடிக் கூறுகளின் வரிசை) தொடர்ந்து சூரியவழியில் இயங்கிச் சூரியக்கதிர்களைச் செறிவூட்டி எதிர்பலிக்கும் அமைப்பிற்குச் (reflector) செலுத்துகின்றது. இச்செறிவூட்டும் எதிர்பலிக்கும் அமைப்பானது (பரவளைவு அல்லது கோள வடி வினாலான ) பல சிறிய சண்ணாடி க் கூறுகளைக் கொண்டதாயும், இக்கண்ணாடிக் வொன்றும் விடும் கதிர்வீச்சினை, குவிமையப் புள்ளியில் ஒன்று சேர்க்கும் உருவத்தைக் கொண்டதாயும் உள்ளது. மான்ட் லூயி யினுடைய ஈலியோஸ்டேட் 14 மீ அகலம் தாயும், 11 மீ உயரம் உடையதாயும், 50×50 சென்டி மீட்டர் அளவுடைய 540 தட்டைக் கண் ணாடிகளைக் கொண்டதாயும் இருந்தது. சூரிய ஒளியைச் செறிவூட்டி எதிர்பலிக்கும் அமைப்பு (concentrating reflector) 16×16 சென்டி மீட்டர் அளவினைக் கொண்ட 3500 கண்ணாடிகளால் பரவளைய வடிவத்தைக் கொண்டு 12 மீ அகலமும், 27 16 உயரமும், 7 மீ குவிமைய நீளமும் (foca| jength) கொண்டிருந்தது. பரவளைய வடிவமைந்த சூரிய ஆற்றலைச் செறிவூட்டும் அமைப்பின் 3500 தட்டைக் கண்ணாடிக் கூறுகள் ஒவ்வொன்றும் ஈலியோஸ் டேட்டிலிருந்து பெற்ற கதிர்வீச்சினைப் பரவளையத்தின் குவிமையத்தில் (focal point) குவிப்பதற்கேற்றவாறு எந்திர வகையில் உருவமைத்து ஒழுங்கு படுத்தப்படுகின்றது. கூறுகள் ஒவ் பொதுவான உலை உடைய மான்ட்லூயி சூரிய உலையின் வெற்றிகரமான செயல் நிறைவேற்றத்தினால் அடுத்த 20 ஆண்டு களில் கட்டப்பெற்ற இதற்கு அடுத்த மூன்று பெரிய தனித்த சூரிய ஒளிநிலைச் செறிவூட்டம் செய்யும் அமைப்பினைக் கொண்ட சூரிய உலைகளின் வடி வமைப்பிற்கு முன்னோடியாக அது திகழ்ந்தது. இந்த மூன்று உலைகளும், மான்ட் -லூயி உலையைப் போன்றே உருவ அளவிலும், இயக்கத்திலும், (thermal power level) வெப்பத் திறன் அளவிலும் இருந்தன. இம்மூன்று உலைகளும் அமெரிக்க ஒன்றிய நாட்டின் படைப்பிரிவு, நாடிக் மெசாசுசெட் டொஹோகு பல்கலைக் கழகம், சென்டை, ஐப்பான், ஆற்றல், சூரிய 381 பிரான்சு நாட்டுப் படையின் பரிசோதனைக் கூடத்தினர், மத்தியப் போர்ப்படை ஓடில்லோ பான்ட் ரோமியோ, பிரான்சு ஆகிய அமைப்புகளால் கட்டப்பட்டன. 1973 ஆம் ஆண்டு, அமெரிக்க ஒன்றிய நாட்டின் படைப்பிரிவினரால் உருவாக்கப் பட்ட சூரிய உலை, நியூமெச்சிகோவிலுள்ள வெள்ளை மணல்கள் என்றழைக்கப்படும் இடத்தில் மைந்த ஏவுகணை இருப்பிடத்திலுள்ள (whitc sands missile range) அணுக்கருப்படைக்கல விளைவுகள் பரிசோதனைக் கூடத்திற்கு (nuclear weapon effects laboratory) மாற்றம் செய்யப்பட்டு,. 1974 ஆண்டு இயக்க நிலையை அடைந்தது. ஆம் உயர் வெப்ப நிலைச் சூரிய ஆற்றல் (high temperature solar energy) பயன்பாடுகளை உரு வாக்குவதற்காக, மான்ட் லூயி சூரிய உலை பெரும் பங்கினை வகித்தது. மேலும் மற்ற முப்பெரும் சூரிய உலைகளின் வடிவமைப்பிற்கான தகவலினையும் அது வழங்கியது. உயர் வெப்பநிலைச் சூரிய ஆற்றல் துறைக்கு அதன் மிகப் பெரும் பங்காக அமைவது யாதெனில் இச் சூரிய உலையில் பெறப்பட்ட அனு பவமும் பின்னணியும் CNRS -சூர்ய ஆற்றல் பரி சோதனைக் கூட டத்தினருக்கு வழங்கி அவர்களால் வடிவமைத்து கட்டப்பட்ட உலகின் மிகப்பெரும் CN RS 1000 கிலோ வாட் திறனுள்ள சூரிய உலை யாகும். இந்த 1000 கிலோ வாட் திறன் கொண்ட சூரியக்கதிர்கள் படம் 13. பிரான்சில், பான்ட்-ரோமியூனில் ஒடிலோனில் அமைக்கப்பட்டுள்ள 1000 கிலோ வாட் சூரிய உலையின் திட்ட விளக்க அமைப்பு 5.9 அடி 180 அடி சூரியக் கதிர்கள் 63 கண்ணாடிகள் (கதிர்நிலைகள்) சூரிய வழியைப் பின்தொடர்த்து, சூரியக் கதிர் களை, பரவளைய வடிவிலான எதிர்பலிக்கும் அமைப்பின் மீது செலுத்துகின்றன. பரவளைய வடிவான எதிர்பலிக்கும் அமைப்பு குறியிலக்குப்பரப்பின் மறு சூரியக் கதிர்களைச் செறிவூட்டுகின்றது.