382 ஆற்றல், சூரிய
382 ஆற்றல், சூரிய மான்ட் CN RS சூரிய உலையானது அன்ட்டோராவினுக்குக் தொலைவிலும், கிழக்கே 40 கி.மீ லூயிற்கும் மேற்கே 18 கி.மீ தொலைவிலும் பான்ட் ரோமியோவின் ஓடிலோவில் 2000 மீ உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இட அமைப்பில் ஆண் டில் 180 நாட்களுக்குச் சூரியனின் பொலிவான ஒளி கிடைக்கின்றது. மேலும் அச்சூரிய ஒளியின் செறிவின் மிக உயர்ந்த அளவு சதுர மீட்டருக்கு 1000 வாட்டுகள் ஆகும். 10 ஆண்டுகட்கும் மேலான கட்டுமானத்திற்குப் பின்னர், இச்சூரிய உலை 1970 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் நாள் கட்டி முடிக்கப்பட்டது. படம் 13 இல் திட்ட வடிவிலான 1000 கிலோவாட் CNRS சூரிய உலை காட்டப்பட்டுள்ளது. இவ் வுலையில் 63 சூரிய ஒளி நிலைகளைப் பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கற்றைகள் மிகப் பெரிய பரவளைய வடிவினாலான சூரியஆற்றல் செறிவூட்டியின் (para- bolic concentrator) பரப்பிற்குச் செலுத்தப்படு கின்றன. இதில் பயன்படுத்திய 63 சூரிய ஒளி நிலைகள் ஒவ்வொன்றும். 7.5 மீட்டர்கள் அகலமும், 6 மீட்டர் கள் உயரமும் கொண்டு, 50×50 சென்ட்டிமீட்டர் பரப்பளவினைக் கொண்ட தட்டையான 180 கண் ணாடிக்கூறுகளைக் கொண்டதாய் அமைந்தது. இந்த 63 சூரிய ஒளி நிலைகளின் கண்ணாடிப் பரப்பின் மொத்தப் பரப்பளவு 2835 சதுர மீட்டர் ஆகும். இந்த அளவானது கால்பந்து விளை யாடும் மைதானத்தின் பரப்பில் பாதி அளவைக் குறிக்கும். பரவளையத்தின் வடக்கே நேரடி யாகச் சூரிய ஒளி நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை எட்டுத் தளங்களில் அமைக்கப்பட டுள்ளன. சூரிய ஆற்றலைச் செறிவூட்டும் பர வளைய அமைப்பினை (concentrating parabola) உரு வாக்கும் கண்ணாடிகளை நோக்கி, சூரியஒளி நிலை களிலிருந்து கிடைமட்டமாகவும் தெற்குப்புற மாகவும் நிலைத்த ஆற்றலைக் கொண்ட சூரிய ஒளிக்கற்றை செலுத்தப்படுகின்றது. பரவளையத்தின் ஒரு குறிப்பிட்ட பரப்பு வரை யில் ஒளியூட்டுவதற்காக ஒவ்வொரு சூரிய ஒளி நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ் வொரு சூரிய ஒளி நிலையும் இரண்டு வகையான ஒளிக்கட்டுப்பாட்டு அமைப்பினைக் (dual optical control system ) கொண்டு, இக்கட்டுப்பாட்டு அமைப் பினால், இரண்டு வகையான நீரியல் அமைப்பின் dual hydraulic system) வழியாக ஒவ்வொரு சூரிய ஒளி நிலைக்கும் தகுந்த இட அமைப்பினை வழங்குகின்றது. தேடுதல் அல்லது பின்தொடரும் முறையப் பயன்படுத்தி ஒவ்வொரு சூரிய ஒளி நிலை யும் இயங்கத் தக்கவாறு இந்த இரண்டு வகை அமைப்பு அனுமதிக்கின்றது. இந்த இரு வகைகளி லும், ஒளி வழியறிந்து செல்லும் அமைப்பானது (optical guidance system) நான்கு ஒளிமின் இரு முனையங்களைக் கொண்ட (photo diodes) ஒளிக் குழலினைப் (photo tube) பயன்படுத்திக் கிழக்கு மேற்கான மற்றும் மேலும் கீழுமான பக்கங்களில் சூரிய ஒளி நிலையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்து கின்றது. தேடுதல் முறையிலான இயக்கத்தின்போது ஒரு குட்டையான (10 சென்டி மீட்டர்) 40° ஏற்புக்கொள் ளும் கோணத்தைக் (acceptance angle) கொண்ட ஒளி மின் குழலினைப் பயன்படுத்தி வேக நீரியல் அமைப்பு (fast hydraulic system) இயங்க வைக்கப் படுகின்றது. இந்த நீரியல் அமைப்பானது இயங்கும் - இயங்காமை என்னும் இரு நிலை முறையில் (on-off mode) இயங்கிச் சூரியஒளிநிலையைப் பின்தொடரும் அமைப்பின் (track system) இயங்கு எல்லைக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. தேடுதல் முறை யில் 100 சென்டிமீட்டர் அளவிலான ஒளியின் குழ லினைப் பயன்படுத்தி மெதுவாக இயங்கும் நீரியல் அமைப்பினைக் (slower acting hydraulic system ) கட்டுப்படுத்துகின்றது. இந்நீரியல் அமைப்பா னது விகிதக் கட்டுப்பாட்டு முறையினைக் கொண்டு (proportional control mode) இயங்குகின்றது. 100 சென்ட்டிமீட்டர் குழலின் அடிப்பகுதியில் மைந்த சூரியனுடைய வடிவத்தின் அளவு. 25 செ.மீ விட்டத்தைக் கொண்டதாய் இருக்கும். சூரிய ஆற்றலைச் செறிவூட்டும் பரவளையத்தின் குவிமைய நீளம் 18 மீட்டராகவும் படம் உயரம் 40 14. பிரான்சு நாட்டு ஃபாந்து ரோமியோவில் நிறுவப்பட்டுள்ள சூரிய உலை சூரிய ஆற்றலைக் குவிக்கும் கட்டிடப் பெரும் பரவளையம் செறிவூட்டப்பட்டுச் சூரிய உலையின் மீது செலுத்துகின்றது.