ஆற்றல், சூரிய 383
மீட்டராகவும், அகலம் 54 மீட்டராகவும் அதன் குவிய அச்சு முதல் தளத்திற்கு மேலிருந்து 13 மீட்டர் தொலைவிலும் அமைகின்றன. தட்டை யான கண்ணாடிகளை எந்திரத்தால் வளைத்துச் சரிசெய்த 9500 கண்ணாடிகளைக் கொண்டதாய்ப் பரவளையம் அமைகிறது. குவிமையத்தில் குறைந்த விட்ட அளவினைக் கொண்ட சூரிய வடிவத்தை அது வழங்குகின்றது. இத்தகைய துல்லியமான சரிப் படுத்துதலை உருவாக்க இரண்டாண்டுகள் தேவைப் பட்டன. 1970 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முதல் நாள் இது நிறைவேற்றப்பட்டது. படம் 14 இல் பரவளையத்தையும் செறிவூட்டப்பட்ட சூரிய ஆற்றலைச் செலுத்தும் குவிக்கும் கட்டிடத்தையும் காணலாம். 2000 சதுர மீட்டர்கள் பரப்பில் படும் சூரிய ஆற்றலைப் பரவளைய எதிர்பலிப்பி (parabolic refle- ctor) 0.3 சதுர மீட்டர்களுக்கும் குறைவான பரப்பில் செறிவூட்டமடையச் செய்கின்றது. மொத்த வெப்ப ஆற்றலை 60% அளவு (600 கிலோ வாட்டுகள் அளவு) பரவளையத்தின் குவிதள மையத்தில் (centre of the fccal plane) 0.08 சதுர மீட்டருக்கும் குறை வான பரப்பில் செறிவூட்டமடையச் செய்கின்றது. வாட்டுகள் / சென்ட்டி மீட்டர் 1590 1760 BOR 400 . 2d 17 செ.மீ d - சூரிய படிமத்தில் விட்டம் சூரிய படிமம் 24 படம் 15. ஓடிலோ சூரிய உலையில் சூரிய ஆற்றலைக் காட்டும் குவிமையத் தொலைவு வரைபடம் குவிமையத்தில் (focal point) சூரிய வடிவ விட்ட அளவு 17 செ.மீ அளவாகும். இப்பகுதியில் 27%அளவு வெப்ப ஆற்றல் (270 கிலோ வாட்டுகள் அளவு) செறிவூட்டப்படுகின்றது. படம் 15 இல் வரைபடத் தில் குவியப் பரப்பில் (focal area) வெப்பத் தொடர் குறிப்புகள்,வாட்டுகள்! சதுர சென்டி மீட்டரில் வழங்கப்பட்டுள்ளன. குவியத் தளத்தில் (focal plane} உள்ள வெப்பத்தொடர்பினை வளைவுகள் d,d/2 ஆகியன காட்டுகின்றன. ஆற்றல், சூரிய 383 சூரிய ஆற்றல் எந்திரச் சுழற்சிகள். குறிக்கோள் வடிவில், சூரிய ஆற்றலாக மாற்றுவதற்கான வெப்ப எந்திரங்கள் கீழ்க்காணும் இயற்பண்புகளையுடைய வையாய் இருக்க வேண்டும். ஒரு கிலோவாட் ஆக்க அளவிற்கான குறைந்த செலவு, மிகக் குறைந்த பராமரிப்புடன் நீண்ட வாழ்நாளும் நம்பத் தகுந்த இயக்கமும் பாதுகாப்பான இயக்கமும் சுற்றுப் புறத்திற்கு ஏற்றதான இயக்கமும் சுழற்சியின் உச்ச வெப்ப நிலைகளில் 1000 கெ. வரையில் தாங்கக் கூடிய பண்புகளும் மேலும் காரனோ திறமை மதிப்பும் ஆகும். சூரிய வெப்ப ஆற்றலை இணைப்பதற்கான ஆற்றல் மிகுந்த அமைப்புகளாக லெப்ப எந்திரங்கள் பயன்படுகின்றன. அவையாவன், வெப்ப மின் (thermoelectric), வெப்ப அயனி (thermonic), வெப்பு வேதியியல் (thermochemical), காந்தப் பாய்ம இயக்கவியல் (magneto hydro dynamic), இராங்கைன் (Rankine) பிரேட்டன் (Brayton), சாதா ரண அல்லது இழப்பிலிருந்து மீள்வுறும் மற்றும் அடுக்குகளைக கொண்ட சுழற்சிகளுடனான எந்தி ரங்களாகும். மேற்கண்ட தேர்வு முறையைக் கருத் தில் கொண்டு சுழற்சித் தேர்வுகள் அட்டவணை 2 இல் விரித்துரைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு சுழற்சி மிகக் குறைந்த அல்லது ஏற்கத் தகாத மதிப்புக் களைக கொண்டுள்ளதோ, அது பரந்த அள விலான பயன்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. பிற்காலத் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், இத் தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறு தல் அடையலாம் என்பதை நாம் கவனத்தில் கொள் வது அவசியம். வெப்ப மின் கருவிகள் (thermo electric devices). வேறுபட்ட மின்கடத்திகளின் இணைப்பில்(dissimilar electrical conductors) தோன்றும் மின் அழுத் தத்தைக் கொண்ட சீபெக் விளைவினை (Seebeck effect) இக்கருவிகள் பயன்படுத்துகின்றன. பல விண் வெளி அமைப்புகளில் (space systems) கதிரியக்க ஓரகத் தனிம வெப்ப மின் ஆக்கிகளில் (radio isotope thermo electric generators) வெப்ப மின் மாற்றிகள் (thermo electric converters) பயன்படுத்தப்பட்டன. இந்த வெப்ப மின் மாற்றிகள், கதிரியக்க ஓரகத் தனிம எரிபொருள் மூலங்களினால் (radio isotope fuel sources) வெப்பப்படுத்தப்படுகின்றன, எவ்வாறிருப் பினும் இக்கருவிகள் திறமை குறைந்தவையாயுள் ளன. 1000 செ.சூரிய வெப்ப நிலைகளில், ஒரே காலத் திலான விண்வெளி வகையைச் சார்ந்த அமைப்பு கள் (space type systems) 6% அளவிலான திறமை யைக் கொண்டவையாயுள்ளன. 10% திறமையைக் கொண்ட திறமை மிக்க கருவிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. நம்பத்தக்கவாறு இருப்பதாலும் இயங்கும் பகுதிகள் இல்லாமையாலும் மிகவும்