உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, சூரிய 485

ஆற்றல், சூரிய 385 இடைப்பட்ட இடைவெளியில் சீசியம் ஆவி நகரு மாறும் அமைக்கப்பட்டுள்ளன. வெப்ப அயனிக் கருவிகளின் செயல்பாட்டு இயங்கும் வெப்ப நிலையின் (1200° செ, 1437 கெ) கீழ் வரம்பு சூரியஒளிநிலைக் கோபுர உச்சி சூரிய வெப்ப மூலங்களின் வெப்பநிலையின் பெரும நிலைக்கு அண்மையில் அமைகின்றது. எந்திரவகை வெப் பப் பொறிகளைக் (mechanical heat engines) காட்டிலும், வெப்ப அயனிக் கருவிகள் குறைந்த திறமை உடையவை (எடுத்துக்காட்டாக, 1200° செ (C) வெப்பநிலையில் 15% திறமை). எனவே மின் ஆக்கத்திற்காக, வெப்ப அயனிக் கருவிகள் பயன் படுத்தப்படுவதில்லை. எவ்வாறிருப்பினும், வழக்க மான ஓர் அமைப்புடன் (conventional system ) வெப்ப அயனி அமைப்பினை (thermionic system) அடுக்காகப் பயன்படுத்தல் (cascaded) இயலத்தக்க தான உயர் வெப்பநிலைச் சுழற்சியினை (high temperature cycle) நாம் விட்டுவிட இயலாது. வெப்ப வேதியியல் அமைப்புகள். (thermo chemical systems ). நீரினை வெப்ப முறையில் ஹைடிரஜனாக வும், ஆக்சிஜனாகவும் பிரிக்கும் திட்டங்களைப் பல ஆய்வாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். உயர் வெப்ப நிலைகளில் (அதாவது 4000 இலிருந்து 5000 கெ) நீரா னது ஹைடிரஜனாகவும், ஆக்சிஜனாகவும் பிரிகின் றது. இவ்வெப்ப நிலையை, சூரிய வெப்ப மூலங்களில் நடைமுறையில் பெற இயலுவதில்லை. நடைமுறைக்கு இயலத்தக்க வெப்பநிலை இடைவெளிகளிலும் (800 லிருந்து 1400 கெ.வரை ) அல்லது அதற்குக் கீழான வெப்ப நிலை இடைவெளிகளிலும், தொடர்ந்த வினைகளைப் பயன்படுத்தி நீரினைப் பிரிக்கும் பல எண்ணிக்கை வெப்ப வேதியியற் சுழற்சிகள் (thermo chemical cycles) பரிந்துரைக்கப்பட்டுள் ளன. வெப்ப வேதியியல் முறையில் நீரினைப் பிரிக் கும் ஒரு வேதியியற் பொருளின் விரும்பத்தக்க பண் புகள் நீரிலிருந்து ஹைடிரஜனை உண்டாக்கும் திற மையைச் சார்ந்தவையாகும். ஹைடிரஜன் எரிபொ ருள் என்னும் கட்டுரையில் ஹைடிரஜன் பொருளா தாரத்தின் நன்மைகளும் எல்லைகளும் விரித்துரைக் கப்பட்டுள்ளன. காந்தப் பாய்ம இயக்கவியல். (magneto hydro dyna - mics - MHD). 1960 ஆம் ஆண்டின் நடுவில் முதற்கொண்டு ஓரிகான் தேசிய ஆய்வுக் கூடத்தில் (Origan National Laboratory) நீர்ம உலோக கா.பா.இ.(MHD) அமைப்புக்களைக் கொண்டு ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்மத்தை மிசை வேகப்படுத்த இரண்டு நிலைப் பாய்வினை (two ph- ase flow) இந்த அமைப்புகள் பயன்படுத்துகின்றன. கா.பா.இ. செல்லும் வழியில் (MHD channel) வேக மாகச் செல்லும் நீர்ம உலோக வளிமக் கலவை நுழைந்து அதன் இயங்கு ஆற்றல் (kinetic energy) மின் ஆற்றலாக மாற்றப்படுகின்றது காண்க, அ. க, 3-25 மின் ஆற்றல் கா கலப்பி கலவை கலவை பா வளிமம் நீர்மம் வெப்பப்படுத்தி அமுக்கி வளிமம் ww மின்ஆக்கி பிரிப்பி பரவலாக்கி நீர்மம் நீர்மம் மீள்ஆக்கப் பரிமாற்றி சுழற்சியின் வெப்ப வெளியேற்றம் படம் 16. நீர்ம வளிமம் உலோகக் காந்தப்பாய்ம இயக்கத்தின் சுழற்சி வரைபடம் படம் 16). சுழற்சியின் உயர்ந்த வெப்பநிலையான 1500°F (815 C) இல் 40% அல்லது அதற்கும் மேலான திறமைகளைப் பெறலாம் எனக் கருத்தியல் ஆய்வுகளிலிருந்து தெரியவருகின்றது. பல்லாண்டுகளாக இராங்கைன் சுழற்சி (Rankine cycle). வெப்பமின் ஆக்கத்திற்காக (thermal electric power generation ) நீராவிச் சுழலிகளைப்(stcam turbines) பயன்படுத்தல் நீராவி இராங்கைன் சுழற்சி முச்கிய முறையாகப் இருந்து வந்தது. இராங்கைன் சுழற்சி பல்லாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு திறமை மிக்கதாய் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான சாதனம், நம்பத்தகுந்ததாயும் தயாராகக் கிடைக்கக் கூடியதாயும் உள்ளது.படம் 17 இல் காட்டப் பட்டுள்ள வகைமைச் சுழற்சியில் மிகை வெப்பப்படுத் தலும் மீள்வெப்பப்படுத்தலும் மீள் ஆக்கமும் பயன்படுத்தப்படுகின்றன. புதைபடிவு எரிபொருள் களைப் பயன்படுத்தும் நிலையங்களில் (fossil fueled plants) புகைபோக்கி வழியாகச் செல்லும் வளிமங்களுக்கும் (flue gas) உள்வழிச் செல்லும் காற் றுக்கும் (inlet air) இடையே வெப்பப் பரிமாற்றம் நிகழ்வதனால், கொதிகலன் திறமை உயருகின்றது. 40% திறமையைக் கொண்டு சுழற்சியின் பெரும் வெப்பநிலையான 800 கெ. இல் இதற்கான நீராவி இராங்கைன் அமைப்புகள் இயங்குகின்றன. சூரிய நிலையங்களில் பயன்படுத்துவதற்கேற்றவாறு சுழற்சியின் எல்லாப் பண்புகளும் பொருந்துகின்றன. இச் பிரேட்டன் சுழற்சி (Brayton cycle). சூரிய நிலை யங்களிலும் உயர் வெப்பநிலை வளிமக் குளிர்விப்பு அணுக்கரு உலைகளிலும், நீராவி இராங்கைன் சுழற் சிக்குப் (steam rankine cycle) பதிலாகச் செயல்முறை