386 ஆற்றல், சூரிய
386 ஆற்றல், சூரிய ஊட்டு நீர் மீள் சூடேற்றி நுழை வெப்பம் நீராவி கொதிகலன் சுழலி சுழலித் தண்டு ஆற்றல் வெப்பவெளியேற்றம் செறிகலன் வடிநீர் எக்கி நிறந்தநிலைச் சூடேற்றி வடிநீர் படம் 17. மீள் ஆக்கம் செய்யும், மீள் வெப்ப மூட்டும் நீராவி இராங்கைன் சுழற்சியின் திட்டவிளக்க வரை படம். சார்ந்த பிரேட்டன் சுழற்சியினைப் பயன்படுத்துவது அண்மைக் கால வளர்ச்சியாகும். விமான வளிமச் சுழலிகளில், திறந்த வடிவான பிரேட்டன் சுழற்சி மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.திறமை யுடன் (efficiency) ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீராலி இராங்கைன் சுழற்சியுடன் திறந்த பிரேட்டன் சுழற்சி போட்டியிட முடியாது. ஆற்றல் ஆக்கப் பயன்பாட் சூரியச்சுடேற்றி சுழலி அமுக்கி லெப்ப மீட்பி P குளிர்விப் பான் L தண்டு முவிரிவாக்கம் சூரியச்
- சுடேற்றி
வெப்பமிட்பி, 111) குளிர்விப்பான் மீட் வெட்பநிலை என்டிரோபி அழுத்தம் வேலை குறைவடையும்போது 1சுழற்சியின் குறிக் கோள் வடிவான திறமை கார்னோத் திறமையை நெருங்குகின்றது. 2 சுழற்சியிலிருந்து வெப்பம் உட்செல்வதும், வெளியேறுவதும் சிறிதாகின்றது. 3 வெப்ப மீட்பியில் வெப்பமாற்றம் பெரிதாகின்றது. 4 சுழற்சியில் அழுத்த விகிதம் சுழியை நெருங்குகின்றது. படம் 18. இழப்பிலிருந்து மீட்சியை அடையும் பிரேட்டன் சுழற்சியின் வரைபடம் டில் 20 விழுக்காடு சுழற்சித் திறமைகளை (cycle efficiencies) எதிர்நோக்கலாம். எவ்லாறிருப்பினும் இழப்பிலிருந்து மீட்சியை அடையும்போதும் (recup- eration) பிரேட்டன் சுழற்சியில் உயர்திறமையை அடையலாம். இழப்பிலிருந்து மீட்சியை அடை வது மீள் ஆக்கம் (regeneration) என்றும் கூறப் படுகின்றது. இச் சுழற்சியினை விளக்கும் வரைபடம் படம் 18 இல் காட்டப்பட்டுள்ளது. இச் சுழற்சியில் வேலை செய்யும் நீர்மமாக மந்த வளிமமான (inert gas) ஹீலியம் பயன்படுத்தப்படுகின்றது. வேதிவினை களில் செயல்படாத வளிமக்கலவையான ஹீலியம் செனான் (helium xenon) கலவை ஆய்வு செய்யப்பட்டு, அக்கலவையைப் பயன்படுத்துவதி லுள்ள மிகுந்த நன்மைகள் எடுத்துக் கூறப்பட்டுள் ளன. இழப்பிலிருந்து மீட்சியை அடையும் பிரேட் டன் சுழற்சி (recuperated brayton cycle) குறிக்கோள் அளவில் கார்னோத்திறமையை (carnot efficiency) நெருங்குகின்றது. அமுக்கி (compressor) சுழலி (turbine) ஆகியவற்றின் வேலை குறையும்போது, வெப்பத்தை ஊட்டுவதற்கும் வெப்பத்தை ஒதுக்கு வதற்குமான சராசரி வெப்பநிலைகள் சுழற்சியின் வெப்பநிலை இடைவெளியை நெருங்குகின்றன. அமுக்கி, சுழலி ஆகியவற்றின் வேலை, சுழற்சி யின் அமுக்க விகிதம் சுழியை நெருங்கும் போதோ ஓர் அலகுத்திறன் ஆக்க அளவிற்கு நீர்மப் பொருண் மைப் பாய்வு முடிவிலியை (infinity) நெருங்கும் போதோ இந்த எல்லையை அடைகின்றது. இதி லிருந்து நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால். இழப்பிலிருந்து மீட்சியைப் பெறும் நடைமுறை சார்ந்த பிரேட்டன் சுழற்சிகள், குறைந்த அழுத்த விகிதங்களில் (low pressure ratios)இயங்கக் கூடியன என்பதும் ஆனால் இச்சுழற்சிகள் அழுத்த வீழ்ச்சிக்கு (pressure drop) மிக்க உணர்திறனைக் கொண்ட மாறுபாடுகளைக் காட்டக் கூடியவை என்பதும் ஆகும் சுழற்சியின் வெப்பநிலை இடைவெளி முழுவ தற்கும், ஹீலியத்தின் தன்வெப்பம் (specific heat) மாறாத நிலைத்தன்மையுடையதெனக் கருத்தில் கொள்ளும்போது இழப்பிலிருந்து மீட்சியைப் பெறும் பிரேட்டன் சுழற்சியின் திறமையைக் கீழ்க்காணு மாறு எடுத்துரைக்கலாம். Tpc j b To = 1 T, Ta + ATT Ta G 12 [ ( 1 ) ] + AT To T. இதில், Tpx என்பது அமுக்கியின் அமுக்க விகிதம் (1); என்பது அமுக்கியின் திறமை; AT. என்பது இழப்பிலிருந்து மீட்சியின் குறுக்கே உள்ள வெப்ப நிலை வேறுபாடு; படம் 18 இல் இது T4-T2 ஆகும். T. என்பது சுழற்சியின் வெப்பநிலையின் கீழ்வரம்பு