உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, சூரிய 393

உணர் செலுத்தும் உணர் சட்டங்கள் (transmitting antenna) எப்பொழுதும் தொடர்ந்து, தரையி லுள்ள இந்நுண்ணலையைப் பெறும் நிலையத்தை எதிர்நோக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நுண்ணலையைச் செலுத்தும் சட்டங்களை (antenna) வளைய இணைப்புக்களின் மீது (gimbal joints) பொருத்த வேண்டியதாகின்றது. இருபெரும் வரிசையில் அமைந்த பகுதிகளை இணைக் கும் கட்டமைப்புச் சட்டத்தின் வழியாக நுண்ண லைக் கற்றையைச் செலுத்துவதற்கேற்றவாறு உலோ கமல்லாத பொருளால் இக்கட்டமைபுச் சட்டம் ஆக் கப்பட்டுள்ளது. மின்கல வரிசைகளுக்கான (cell arrays) செலவினையும் எடையினையும் குறைப்பதற் காக, சமதளக் கண்ணாடிகளை (plane mirrors) அமைத்து அவற்றின் மேல்படும் சூரிய ஒளிக்கற்றை செறிவூட்டப்படுகின்றது. மின்கலம் வெப்பம் அடைவ தனால் அதன் திறமை குறையாதிருக்குமாறு தடுப் பதற்குச் செறிவூட்ட விகிதம் (concentration ratio) 2 இன் அளவிற்கு அமையுமாறு கட்டுப்படுத் தப்படுகின்றது. இவ்வகையைச் சார்ந்த செறிவூட் டும் கண்ணாடிகள் (concentrating mirrors) உயர்ந்த எதிர்பலிக்கும் திறனைக் {reflectivity) கொண்டவை யாயும், முழுதும் தட்டையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாதவாறும் இருக்கலாம். இழுப்பு விசை யைக் கொண்ட அலுமினியம் கலந்த ஞெகிழி மென் படலம் (aluminized plastic film) இதற்குப் போ து மானதாகும். இத்தகைய அமைப்பின் வெற்றி சூரிய மின்கலத் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்தையும், கூடுதலான திறமையையும் (efficiency) பெரும் அள வில் உற்பத்தி செய்வதால் குறைந்த செலவினையும் வட்டணைச் சுழற்சிக்காகப் பொருள்கள் கொண்டு செல்வதற்காகும் குறைந்த செலவையும் சார்ந்து அமையும். இதற்கு மாறாக, ஆற்றல் மாற்றம் செய்யும் முறையில், வட்டணையில் சுழன்றுவரும் நிலையங் களுக்குப் பதிலாக, வெப்பப் பொறிகளைப் (thermal engines) பயன்படுத்துவது பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இதன் தத்துவம் யாதெனில், முகக் கூறினைக் கொண்ட எதிர்பலிக்கும் அமைப்பானது (faceted reflector) தான் பெற்ற சூரிய ஆற்றலை, சூரிய உட்கவரும் குழிக்குள் (cavity absorber) செறிவூட்டுகின்றது. வேலை செய்யும் நீர்மம் (working fluid) (வேதியியல் மாற்றத்தில் செயல்படாத வளிமம் அல்லது வளிமங்கள்) இந்தமின் ஆற்றல் ஆக்கியைச் (electric generator) சுழல வைக் கும் வெப்பப் பொறிக்குப் பரிமாற்றம் செய்கின்றது. கருங்கக்கூறின் இவ்வமைப்பு முன்னரே விவரிக்கப் பட்ட சூரியக் கோபுரத் திரட்டி அமைப்பில் கூறப் பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டே இயங் குகின்றது. ஆனால் இந்நிலையம் பூமியில் இருப்ப தற்குப் பதிலாக விண்வெளி வட்டணையில் சுழன்று வருகின்றது (காண்க, படம் 26). ஆற்றல், சூரிய 393 படம் 26. உட்குழிவில் சூரிய ஆற்றலை உட்கவரும் திறன் செயற்கைக்கோள் இத்துணைக் கோள் பிரேட்டன் எந்திரச் சுழற்சியைப் பயன்படுத்துகின்றது. வட்டணைச் சுழற்சியில் உண்டாக்கப்பட்ட மின் ஆற்றல் நிலக்கோளுக்குச் செலுத்துவதற்காக அதுநுண்ணலை ஆற்றலாக மாற்றம் கெய்யப்படுகின்றது. முன்னேற்றமடைந்த அணுக்கரு மின்நிலையங்கள் (nuclear power plants) சுற்றுப் புறச் சூழ்நிலை மாசு றுதல் காரணமாய்ப் பூமியின் மேல் அமைப்பதற்கு ஏற்புடையவையாய் இல்லாமல் இருப்பின் இந்நிலை யங்களை விண்வெளியில் பூமியும் துணைக்கோளும் ஒரே காலத்தில் இயங்கும் வட்டணையில் (geosynch- ronous orbit) எத்தகைய தடையுமின்றி இயக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மனிதர்களையும் பொருள்களையும் கொண்டு செல்லும் ஒரு துணை விண் வெளிக் கலத்தின் வழியாகப் பூமியிலிருந்து அந்நிலையத்திற்கு எடுத்துச் சென்று எரிபொருளூட் டம் செய்யலாம். wave நுண்ணலை முறை ஆற்றல் இட மாற்றம் (micro energy transfer). இத்தலைப்பினைப் பற்றி முதற்கண் டெஸ்லா (Tesla) என்பவரும், பின்னர் பிரௌன், கோபா (Brown and Gou- bau) என்பவர்களும் ஆராய்ந்தனர். வட்டணையில் சுழன்று வரும் ஒரு மின் நிலையத்தில், நிலையத்தின் மின்திறன், நுண்ணலைகளாக (microwave) இட மாற்றம் செய்யப்பட்டு நுண்ணலையைச் செலுத்தும3