உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 ஆற்றல்‌, சூரிய

400 ஆற்றல், சூரிய எடுக்கும் அளவு, இவ்வாற்றலை மீள நிரப்பும் வீதத்தைத் தாண்டலாகாது என்றும் இந்த மீள நிரப்பும் அளவு கூட, நிலக்கோளப் பரப்பில் சூரிய ஒளிப்பெருக்கு (solar flux) அளவான 1010 மெகா வாட்டுகளைத் தாண்டக் கூடாது என்றும் கணக்கிட் டார். அவர் தரையிலிருந்து காற்று வெப்ப மடைந்து இயக்கத்தை உண்டாக்குவதால், நிலக் கோளப் பரப்பில் அமைந்த சூரிய ஆற்றல் பெருக்கு அளவின் கணக்கீடுகளைப் பயன்படுத்தினார். மேற் கண்ட அளவில் பத்தில் ஒரு பங்கு அளவான 108 மெகாவாட்டுகள்தாம் காற்றின் ஆற்றலாகக் கிடைக் கின்றதென வான் ஆர்க்ஸ் மதிப்பிட்டார். கிடைக் கும் நீர்மின்திறனைப் போன்று பத்துமடங்கு பெரிதாகக் காற்றின் ஆற்றல் கிடைக்கின்றதென வான் ஆர்க்ஸ் என்பவர் கண்டறிந்தார். பூமி முழு வதற்குமான நீர்மின் ஆற்றல் (water power poten- tial) அத்தகைய 500 நிலையங்களின் வெளியீட்டு அள விற்கு ஈடான தென்றும் 1948 ஆம் ஆண்டில் புட்னம் என்பவர் கணக்கிட்டார். இந்த அடிப்படையில் காணும்போது, நீர் மின்திறனைக் காட்டிலும் காற் றின் ஆற்றல் 20 மடங்கு அதிக ஆற்றலைக் கொண் டுள்ள தென்பதை அறியலாம். அமெரிக்க ஒன்றிய நாட்டுக் கண்டப்பகுதியிலும் அந்நாட்டின் கடற்கரை யைச் சார்ந்த கடல் நீரிலும் கிடைக்கும் ஆண்டின் சரா அரிக்காற்று ஆற்றலின் மதிப்பீடு படம் 33 இல் 500 யா 200 யர் Ind 2 150 150 குற உயர் தரமான எனப் ணம் யாதெனில் இந்த அளவீடுகள் விமான நிலை யத்திலோ அதற்கு அருகிலுள்ள இடத்திலோ அமைந்த வானிலை நிலையத்தில் எடுக்கப்பட்ட அளவீடுகளைச் சார்ந்திருப்பதேயாகும். உயர்ந்த அளவில் காற்று வீசுவதைத் தவிர்க்கும் இடங்களா கவே இந்நிலைய இடங்கள் அமைகின்றன. எடுத்துக் காட்டாக ஓரிகானில், போர்ட்லாந்திற்குக் கிழக்கே அமைந்த கொலம்பியா ஆற்றுப் பெருநீர்ச் சுழிக் குழிப்பகுதியில் காற்றின் ஆற்றல், ஆண்டொன் றுக்கு I சதுர மீட்டர் பரப்பிற்கு 100 வாட்டுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பெருநீர்ச்சுழிக் குழிப்பகுதியில் உள்ள காற்றின் உண் மையான அளவீடுகள், இந்தத் திறன் அளவினைக் காட்டிலும் பலமடங்கு அதிகம். படத்தில் காட்டப் பட்டுள்ளதைக் காட்டிலும், ஓரிகான் கடலோரப் பகுதியில் கடற்கரைவழிக் காற்றுகள் வலிமை வாய்ந் துள்ளன. காற்றின் மின்திறன் வெளியீடு காற்று வேகத்தின் மும்மடிக்கு நேர்விகிதத்திலிருப்பதால். தொடர்ந்து உச்சக் காற்றுகள் வீசும் பகுதிகளில் இந் நிலையங்களை அமைப்பது மிகவும் முக்கியமாகும். எடுத்துக்காட்டாக, 10 மீட்டர்/நொடி (22 மைல்கள் மணி) வேகத்தினைக் கொண்ட காற்றானது 5 மீட்டர்/நொடி (11 மைல் மணி) வேகத்தினைக் கொண்ட காற்றினால் ஆக்கப்படும் மின்திறனைப் போன்று 8 மடங்கு மின் திறனை உண்டாக்கும். அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் பிரான்சிலும் பிரிட்டன் நாட்டிலும் காற்றுத் திறனைப் பெறு வதற்கான தகுந்த இடங்கள் ஆராயப்பட்டன. கடு மையான நிலப்பகுதியில் எடுக்கப்படும் காற்றின் ท அளவீடுகளை மிக்க கவனமாக எடுக்க வேண்டும். தவறான காற்றுத் திறன் கணக்கீடுகளினால் காற்றுத் திறன் அமைப்புகள் இயங்காமலும் போய்விடுகின்றன. வாட்டுகள் சதுரிட்டர் கடல்மைல் 10n for 20 we மார், 20 காற்றின் வேகம் மீட்டர் நொடி 30 படம் 33. அமெரிக்க ஒன்றிய நாட்டில் கிடைக்கும் காற்று ஆற்றல் (ஆண்டு சராசரி) எல்லைக் கோடுகளிலுள்ள குறியீடுகள் வாட்டுகள்/சதுர மீட்டர் அளவினைக் குறிக்கும். கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மலைப்பாங்கான மேற்குப் பகுதிக்கான மதிப்பீடும் அப்பலேசியப் பகுதிக்குமான மதிப்பீடுகளும் உறுதியற்ற நிலையில் உள்ளன. இந்த உறுதியற்ற மதிப்பீடுகளின் கார 0 ஆண்டின் மணிகள் படம் 34. காற்றின் வேசு, கால வளைவு 8760