ஆற்றல், சூரிய 401
வேகம். திறன் நிலவும் கால் வளைவுகள் velocity and power duration curves). கோல்டிங் (Golding) என்பவரும் ஸ்டோட்ஹார்டு (Stod Hard) (1942, 1952) என்பவரும் திறன்மிக்க காற்றின் ஆற் றல் கிடைக்கும் ஓர் இடத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த தகவலினைக் காற்றின் வேகம் எவ்வளவு நேரம் வரை நிலைத்து நிற்கின்றதென்பதைக் காட்டும் வளை விலிருந்து (velocity duration curve) பெறலாம் என்று தெரிவித்தனர். இது படம் 34இல் காட்டப்பட்டுள் ளது. கிடைநிலை அச்சில் (horisontal axis) ஓர் ஆண் டில் காற்று நிலவும் நேரம் எத்தனை மணி (8760) என்பதும் குத்துநிலை அச்சில் (vertical axis) காற்றின் வேகம் எவ்வளவு என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறாக இந்த வரைபடம், ஓர் ஆண்டில் குறிப் பிட்ட காற்று வேகத்தைத் தாண்டக் கூடிய மணி களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. திறன் நிலவும் கால அளவிற்கான வளைவு (power duration curve) இதைப் போன்றதேயாகும். ஏனெனில் ஆற்றல் காற்றின் வேகத்தின் மும் மடிக்கு நேர்விகிதத்தில் உள்ளது (காண்க, படம் 35). திறன்வெளியீடு குறிப்பிட்ட அளவினைத் தாண்டும் மணிகளின் எண்ணிக்கையினை ஆற்றல் நிலவும் அளவினைக் காட்டும் வளைவு குறிப்பிடுகின்றது. காற்றின் வேகத் தை மும்மடங்கு ஆக்கும்போது ஆற்றல் வெளியீட்டு அளவினைக் கண்டறியலாம். இக்குறிப்பிட்ட வளைவு ஓர் ஆண்டில் குறைந்த காற்றினைக் கொண்டு குறைந்த நேரத்தில், ஓர் இடத்தில் கண்டறிந்ததாகும். கால இடைவெளிge குறிப்பிடத் தக்க அளவு, திறனை ஆக்கம் செய்வதற்கான காற்று மிகவும் குறைவாக உள்ளது. g என்ற இடத் திற்குரிய காற்றின் வேகத்தில் (3 மீட்டர்/நொடி அல்லது 7 மைல் / மணி திறன் ஆக்கப்படு கின்றது. fc என்ற புள்ளி உள் நுழைவு வெட்டுப் VI திறன் (கிலோவாட்டுகள்) வேகத்தில் முழுவரை யளவுதி திறன் oh மடிப்புள்ளி இயாக்கம் திறன்நிலவும் காவளை ஆணடுத் திலும் ஆக்கம் உள் நுழைவு வெட்டுப்புள்ளி மடிப்பினால் தோன்றும் / திறன் இழப்பு 8760 ஆண்டின் மணிகள் படம் 35. காற்றின் திறன், கால வளைவு e ஆற்றல், சூரிய 401 புள்ளி (cut in point) என்றழைக்கப்படுகின்றது. காற்று வேகங்கள் அதிகமாகும்போது திறன் ஆக்கம் அதிகமாகின்றது. மற்றும் C .என்ற புள்ளியில் காற்று மின் ஆக்கி (aero generator) அதற்கான இயங்கக் கூடிய அளவில் இயங்குகின்றது. உயர் காற்றுவேகங் களில் முழுச் சுமை இயக்கத்திற்காக (full load operation) அலகுகளின் இடைவெளியை வேறுபடுத் தியோ, வேறு எந்த முறையிலோ திறன் ஆக்க அளவை நிலைநிறுத்தலாம். இதற்கும் மிகுதியான உயர்காற்று வேகமான b என்ற மடிப்புள்ளியில் furling point) காற்றின் வேகம் 27 மீட்டர்/நொடி யாக (60 மைல்/மணி) இருப்பதனால், நிலையத் திற்குத் தீங்கு நேராமலிருக்க அதனை மூட வேண்டி யது கட்டாயத் தேவையாகும். ஆற்றல் நிலவும் கால இடவெளிக்கான வளை வில் bcfgh என்ற படத்திலுள்ள கோடிட்ட பகுதி, அதே அளவீட்டில், காற்று ஆற்றலின் உண்மையான ஆண்டு வெளியீட்டு அளவினைக் காட்டுகின்றது. இப்படத்தில் adeo என்ற செல்வகம் முழு ஆற்றலில் ஆண்டு முழுதும் நிலையம் இயங் கினால் உண்டாகும் ஆக்க அளவினைக் காட்டு கின்றது.பரப்பு bcfgh இற்கும் பரப்பு adeo இற்கும் உள்ள விகிதம், ஆண்டின் நிலையச் சுமைக் கூறாகும் annual plant load factor). இதனை 8760 இனால் பெருக்கும்போது, அதன் தன் வெளியீடு (specific out put) கிலோ வாட்டு மணிகள் /ஆண்டு கிடைக்கின்றது. இவ்வாறாகத் தன்வெளியீடு(specific output) என்பது முழுச்சுமை இயக்கத்தில் (full load operation ) இயங்கிய மணிகளின் எண்ணிக்கையில் பெற்ற ஆற்றல் வெளியீட்டிற்குச் சமமாக இருப்பதைக் காட்டும். தக்க இட இயல்புகள். சவீனோ (1974) என்பவ ரால் தக்க இட இயல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழ்க்காணுமாறு சுருக்கிக் கூறலாம். காற்று வேகம் உயர்ந்த அளவில் ஆண்டு முழுதும் உள்ள ஓர் இடம் அமைய வேண்டும். காற்று எதிர்ப் படும் திசையில் 1.6 கி.மீ. அல்லது அதற்கும் அதிக மான தொலைவு இடைவெளியில், உயரமான கட்டி டங்களோ தடைகளோ இருக்கக் கூடாது. ஓர் ஏரியில் அமைந்த தீவிலோ அல்லது கடலில் அமைந்த தீவிலோ, தட்டையான நிலத்தின் மேலமைந்த, மென் மையான சரிவுகளைக் கொண்ட, வட்ட வளைவான மலையின் மென்மையான மேற்புற அமைப்பு நல்ல தொரு இடமாக அமைகின்றது. திறந்த சமவெளி அல்லது திறந்த கடற்கரை வழி தக்க இடமாகும். இரு மலைகளுக்கு இடையில் அமைந்த புனல் வடி வான இடத்தில் நுழையும் காற்று நல்ல பண்பினைக் கொண்டதாய் உள்ளது. இப்பண்புகள் சிலவற்றைப் படம் 36 இல் காணலாம். அ.க. 3-26