உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌ தேக்கம்‌ 409

கொள்ள இயலாத வகையில் மாறக்கூடிய ஒன்றா கும். எனவே, இவற்றைக் கொண்டு வடிவமைக்கப் படும் நடைமுறை ஆற்றல் தேக்க அமைப்புகள் இக் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். ஏற்றித் தேக்கும் ஆற்றல் தேக்கம். மின்நிலையங் களின் திறனைப் பயன்படுத்தி இரவிலும், ஆற்றல் தேவையில்லாத நேரங்களிலும் எக்கி(pump)மூலமாக நீரை அதிகஉயரத்தில் உள்ள பெரிய தேக்கங்களுக்கு ஏற்றலாம். உச்சப் பயன்பாட்டுத் தேவையின் போது இந்நீர்த் தேக்கங்களிலிருந்து நீர்ச்சுழலிகள் வழி யாக நீர் கீழே வரும்போது திறனைத் திரும்பப் பெற லாம். எக்கியால் நீரை மேலேற்றத் தேவையான ஆற்றலில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே நீர்த்தேக்கத்திலிருந்து கீழிறங்கும் நீர் மூலம் திறனைத் திரும்பப் பெறமுடியும். இருந்தபோதிலும் உச்சத் தேவையை நிரப்ப எக்கியால் தேக்க முறை யின் மூலம் மின்னாக்க ஆகும் செலவு, பழைய நீராவிச் விட சுழலி, வளிமச்சுழலி மின்நிலையங்களை மிகவும் குறைவாக இருக்கும். ஏற்றித் தேக்கும் நீர்மின் நிலையம் பொருத்தமான இடவசதியுடன் உள்ள சில பகுதியில் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய தாகும். மேலும் மாறுபடும் நீர்நிலையும் இயற்கை யான சுற்றுப்புறச் சூழ்நிலையை வீணாக்கும் தன்மை யும் இத்தேக்க அமைப்பில் உள்ள குறைபாடுகளாகும். மின்கலங்கள். தற்போது பயன்பாட்டில் எந்தச் சிக்கனமான தேக்க முறைகளுக்கும் வேறுபாடுஇல்லை. மின்கலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வும் மலிவானதுமாகவும் இருப்பினும், அதன் மூலம் அதிக அளவு மின்சாரத்தைத் தேக்கிவைக்கப்பெருஞ் செலவாகும். இவை வேதி ஆற்றல் முறை மின்தேக்க அமைப்புகளாகும். ஒரு சுமையை மின்கலத்தோடு ஆற்றல் மின் ஆற்றலாக இணைப்பதால் வேதி மாற்றப்படுகிறது. ஆற்றலை நேரடியாகக் கொடுக் பொருள்களால் முதன்மை மின்கலங் கக்கூடிய கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. துணை அல்லது தேக்க மின் கலங்களுக்கு முதலில் மின்னேற்றம் ஊட்டவேண்டும். அதன் பிறகு அதன் பிறகு மின்னிறக்கமோ, மீண்டும் மின்னேற்றமோ தேவைக்கேற்றபடிப் பல முறை செய்து கொள்ளலாம். மின்கலம் இழக்கும் முதன்மை மின்கலம், ஒரு முதன்மை (மின்கல அடுக்கு) எலெக்ட்ரான்களை எதிர் மின்முனையையும் எலெக்ட்ரான்களை ஈட்டும் நேர்மின் முனையையும் அவை இரண்டுக்கும் இடையே ஒரு மின்பகு பொருளையும் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு உலோகங்களுக்கு நடுவில் மின் மின் கடத்தக் கூடிய கரைசல்அமைந்துள்ள கலம் மிகவும் எளிய வடிவமைப்புடைய மின்கல உலோக மின் மாகும். இரண்டு முனைகளிலும் இணைக்கப்பட்ட ஒரு கடத்தி வழியாக மின்னோட் டம் பாய்கிறது. மிகப் பரவலாக 1.5 வோல்ட் பசை பசை ஆறறல் தேக்கம் 409 மின்கலத்தில் துத்தநாகம் நேர் முனையாகவும், கரிக் கோல் எதிர்முனையாகவும், இரண்டு முனைகளுக்கும் இடையில் மாங்கனீசு-டை-ஆக்சைடு கலந்த கலவை யும் உள்ளன.1.5 வோல்ட் கார மின்கலத்தில் துத்த நாகம் நேர்முனையாகவும், மாங்கனீசு-டை-ஆக்சைடு எதிர் முனையாகவும் உள்ளன. 1.3 வோல்ட் பாதரச மின்கலத்தில் பாதரச ஆக்சைடு மற்றும் கிராபைட்டு எதிர்முனையாகவும் துத்தநாகமும், பாதரசமும் நேர்முனையாகவும் உள்ளன. ஈய அமில மின்கலம். தானியங்கிகளுக்கு மிகப் பொதுவாகப் பயன்படும் தேக்க மின்கலம் ஈய அமில மின்கலமாகும். இவ்வடிப்படை மின்கலம் நீர்த்த கந்தக அமிலத்தில் மூழ்கியுள்ள இரண்டு ஈயத் தகடுகளைப் பெற்றுள்ளது. நேர்மின்னோட்டம் கொண்டு மின்னேற்றம் செய்யும்போது எதிர்மின் தட்டு பஞ்சு போன்ற ஈயமாகவும் நேர்மின் தட்டு ஈயப் பெர் ஆக்சைடாகவும் மாறுகிறது. மின்கலம் மின்னிறக்கம் செய்யப்படும்போது இரண்டு தகடு களும் ஈயச் சல்பேட்டாக மாறுகின்றன. 12 வோல்ட் உடைய மகிழுந்து மின்கல அடுக்கில் ஒவ்வொன்றும் 2 வோல்ட் மின்னழுத்தம் கொண்டுள்ள ஆறு ஈய அமில மின்கலங்கள் தொடரிணைப்பில் ணைக்கப் பட்டுள்ளன. எடிசன் நிக்கல் காட்மியம் மின்கலம். 1.2 வோல்ட் எடிசன் மின்கலம், நிக்கல் பெராக்சைடை எதிர் முனையாகவும், தூளாக்கப்பட்ட இரும்பு நிறைந்த எஃகு குழாய்களை எதிர் மின் தட்டுகளாகவும், பொட் டாசியம் ஹைட்ராக்சைடு கரைசலை மின்பகு பொருளாகவும் கொண்டுள்ளது. 1.2 வோல்ட் நிக்கல் காட்மியம் மின்கலம் நிக்கல் ஹைட்ராக்சைடை எதிர்முனையாகவும் காட்மியம் ஹைட்ராக்சைடை பொட்டாசியம் நேர்முனையாகவும், ஹைட்ராக் சைடுக் கரைசலை மின்பகு பொருளாகவும் கொண் டுள்ளது. இம்மின்கலம் கரடுமுரடானது. இதை மீண்டும் பல முறை மின்னேற்றம் செய்யலாம். ஓர் அடைப்பிட்ட இவ்வகை மின்கலம் கைக் கணிப்பான் மின்னணுவியற் கருவிகள் ஆகியவற்றில் பயன்படு கிறது. வேறு வகைகள். பல்வேறு புதியவகை மின் கலங்களைச் செய்ய ஆய்வுகள் நிகழ்கின்றன. வழக் கத்திலுள்ள வகைகள் மிகவும் குறைந்த அளவு (அவற்றின் நிறை, பருமன், அல்லது செலவை ஒப் பிடும்போது) ஆற்றலைத் தேக்குவதுடன், குறைந்த ஆயுளும், தானியங்கியை இயக்கும் திறன் போன்ற பயன்பாடுகளுக்குப் பொருத்தமற்றதாகவும் உள்ளன. மிக உயர்ந்த வெப்பநிலைகளில் (பல நூறு பாகை செல்சியஸ்) வேலை செய்யும் இரண்டு தேக்க மின் கலங்கள் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. அவை சோடியக் கந்தக கந்தக மின்கலமும் லித்தியக் கந்தக மின் கலமுமாகும்.