உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 ஆற்றல்‌ தொழில்‌ நுட்பம்‌, ஹைடிரஜன்‌

410 ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் 1. 4. 2 3 + 5 LO 6 7 7 படம் 2. எரிபொருள் மின்கலம் 3. அயனிகள் எலெக்ட்ரான் 2. மின்பகு பொருள் எரிபொருள் நுழையும் வழி 5. ஆக்சிஜனேற்றி நுழையும் வெளியேறும் வழி வழி 6. ஆக்சிஜனேற்ற விளைபொருள் 7. நுண்துளை மின்முனை. புதிய அமைப்புகள். தொழில் நுட்ப வியலாகவும் பொருளாதாரவியலாகவும் வாய்ப்புள்ள நம்பகமான பல்வேறு புதிய ஆற்றல்தேக்க அமைப்புகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. அதிக ஆற்றல் திறனைப் பயன் படுத்திக் காற்றை நிலமட்டத்திற்குக் கீழுள்ள பெரிய பள்ளங்களில் அமுக்கி வைத்திருந்து உச்சத் தேவை யின்போது அவற்றை மேலெடுத்து வளிமச்சுழலி காந்தப் யில் பயன்படுத்துவது ஒரு வகையாகும். மிகைக்கடத்தல் காந்தங் புலங்களில், குறிப்பாக, களில், ஆற்றலைத் தேக்கும் பயன்பாடுகள் ஆராயப் பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் பயன்பாடுகளும், ஊர்திகளும் உடனடியாக மீண்டும் ஆற்றல் மீட்டக் கூடிய வேகமாக சுழலும் சமன்சக்கரங்களைப் பயன் படுத்தலாம். எரிபொருள் மின்கலம். எரிபொருள் மின்கலங்கள் வேதி ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்று கின்றன. அத்தகைய மின்கலம் ஒன்று பொட்டா உட்கூடா சியம் ஹைட்ராக்சைடு கரைசலிலுள்ள னதும், நுண் துளைகள் உள்ளதுமான் மின்முனை களுக்குள் அழுத்தியேற்றப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களைப் பயன்படுத்துகிறது. நேர் முனையில் ஹைட்ரஜன் அணுக்கள் மின்பகுபொரு ளில், அது எதிர் அயனிகளுடன் வினைபுரிந்து நீரைக் கொடுக்கிறது. அதேசமயத்தில் எதிர்முனையில் ஆக்சிஜன் அணுக்கள் நீருடன் வினைபுரிந்து நேர் அயனிகளைக் கொடுக்கின்றன. சூரிய ஆற்றல். சூரிய ஆற்றலை வெப்பவியலாக நீர், பாறைகள், உப்பு, ஆகியவை போன்ற பொருள் களைச் சூடாக்குவதன் மூலம் தேக்க இயலும். சூரிய ஆற்றலைக் கோடைக்காலம் முழுவதும் சூரியக் குளத்தில் கோடைக்குப் பின் பல மாதப் பயன்பாட் டுக்குத் தேக்கி வைக்கலாம். சூரியக் குளம் மிகவும் உப்பான நீரை அடிப்படுகையில் கொண்டிருப்பதன் மூலம் இயல்பான குளத்திலிருந்து வேறுபடுகிறது. அது வெப்பத்தை அடியிலேயே அடைத்து வைக்க முடிவதால் அடிநீர் ஏறக்குறைய கொதித்துக் கொண் டிருக்கிறது. ஏனெனில், உப்புச்செறிவுச் சரிமானம் வெப்பச் சுழற்சி ஓட்டத்தின் மூலம் வெப்பம் மேலே வருவதைத் தடுக்கிறது. ஹைட்ரஜன். ஹைட்ரஜன் பொருளாதாரம் என்ற கருத்துக்குத் தற்காலத்தே மிகவும் அதிகக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தஆற்றல் தேக்க முறை யில் நாடு முழுவதும் குழாய் மூலம் செலுத்தவோ, நீர்ம வடிவமாக்கி ஊர்திகளில் பயன்படுத்தவோ எரிபொருள் மின்கலங்கள் அல்லது நீராவி மின் நிலையங்கள் மூலமாக மின்சாரமாக மாற்றவோ இயலும். மின்னாற்பகுப்பு அல்லது வெப்பச்சிதைவு மூலமாக நீரிலிருந்து ஹைட்ர ஜனை உற்பத்தி செய்ய முடியும். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவ தற்காக ஹைட்ரஜனைச் சூரிய ஆற்றல், காற்று ஆற் றல் ஆகியன மூலமாகவும் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் சூரிய ஒளி மற்றும் காற்றின் பயன் பாட்டைச் சார்ந்துள்ள நுகர்வோரை விடுவிக்கலாம். எதிர்கால வாய்ப்புவளம். எதிர்கால ஆற்றல் வளம் எங்கு ஆற்றல் வளங்கள் உள்ளன அவற்றை எவ் வாறு பயன்படுத்தமுடியும் என்பவற்றைப் பொறுத் தது மட்டுமல்ல; என்றும் உயரும் தரத்துடன் எவ் வளவு திறமையாக அது தேக்கப்படுகிறது என்பதை யும் சார்ந்துள்ளது. ஆற்றல் பகிர்வு, ஆற்றல் தேவை கள் ஆகியவற்றைப் பற்றிய ஆராய்ச்சியைப் போன்று ஆற்றல் தேக்கம் பற்றிய ஆராய்ச்சியும் இன்றியமை யாததாகும். எஸ்.கிருஷ்ணப் பிரகாஷ் ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் புதைபடிவு எரிபொருள்கள் ( fossil fuels) குறையத் தொடங்கும்போது, செயற்கை வேதியியல் எரிபொரு ளாக ஹைடிரஜன் முக்கியமான பங்கினை ஏற்கும். பிற்காலத்திற்கு ஏற்ற கவர்ச்சியான ஆற்றல் வளங்கள் (சூரிய அணுக்கருப்பிணைப்பு போன்றவை) பொதுவாகப் பெரிய அளவினைக் கொண்டவாயும்