உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 ஆற்றல்‌, நிலக்கரி

436 ஆற்றல், நிலக்கரி காரணமாகவும், 1960 ஆம் ஆண்டின் கடைசியில் திறன்முறையில் அமைந்த சராசரி ஆக்கம் ஒரே சீராக (1965 முதல் 1969 வரையுள்ள காலக்கட்டத்தில் 7% வீதம்) உயர்ந்தது. 1960 ஆம் ஆண்டின்போது, நிலத்தடிச்சுரங்கம் அகழ்வதையும், மேற்பரப்புச் சுரங்கம் அகழ்வதையும் சேர்த்துக் கருத்தில் கொள் ளும்போது, ஒரு நாளைக்கு ஒர் ஆளுக்கு 12.83 டன்கள் அளவுள்ள நிலக்கரி தோண்டிஎடுக்கப்பட் டது. இந்த அளவு 1965 ஆம் ஆண்டு 17.52 டன்க ளாக உயர்ந்தது. து மேலும் 1969 ஆம் ஆண்டு 19.90 டன்களாக உயர்ந்தது. பிறகு 1969ஆம் ஆண்டின் நிலக்கரிச் சுரங்கத்திற்கான உட ல்நலம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் காரணமாக நிலக் கரி எடுப்பதில் கட்டுப்பாடுகள் தோன்றி வெளியீடு அளவு ஓரளலிற்குக் குறையலாயிற்று (1970 ஆம் ஆண்டில் 18.84 டன்கள்). இச்சட்டம் இயற்றிய பின்னர், தனித்தனியான நிலக்கரிச் சுரங்கங்களின் வெளியீட்டு அளவு 15 முதல் 30% வரை குறையலா யிற்று. 1 பருமீட்டர் காற்றில் உட்கொள்ளத்தக்க தூசு, பெரும் அளவான 2 மில்லிகிராம்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்ற சட்டத்தின் தூசுக் கட்டுப் பாட்டு விதிகள் கூறுகின்றன. சுரங்கச் சுழற்சி, கூரைக்கட்டுப்பாடு, காற்றோட்டம், மற்றைய கட்டுப் பாட்டு விதிகள் ஆகியன வெளியீட்டுக் குறைவிற்குக் காரணமாய் அமைகின்றன. நிலத்தடியில் கூரையைத் தாங்குதல். நிலத்தடி நிலக் சரிச் சுரங்கத்தில் பாதுகாப்பான திறமையான சுரங்க வேலைக்கு மிக முக்கியமாக அமைவது மேனிலைக் கூரையைத் தாங்கும் அமைப்பாகும். தோண்டப் பட்ட திறந்த இடங்களினால் நிலைக்குலைவு உண் டாக்கும் அழுத்தச் சமநிலையின்மையினை இயன்ற வரையில் நிலைநிறுத்துவதற்கேற்ற கூரையைத் தாங் கும் அமைப்பைத் திட்டமிட வேண்டும். அவ்வாறி ருப்பினும் தற்காலிகத் தாங்கிகளைப் பயன்படுத்திச் சுரங்கத்தின் வெளிப்படாத திறன் வெளிப்பாட்டைத் தாமதப்படுத்துவது அடிக்கடி உகந்ததாக அமைகின் றது. நான்கு முதன்மையான இடிந்துவிழுதல் நிகழலாம். வகைகளில் கூரை அவற்றில் ஒன்று, கீழ்நோக்கி விழுதல் (சுரங்கக் கூரையிலிருந்து பாறை உடைந்து விழுதல்). இத் தகைய நிகழ்ச்சிகளின் கால இடைவெளிகளும், தக்கவாறு கண் எதிர் அவற்றின் அளவும் மிகவும் வேறுபட்டவை. மேலும் சில நேரங்களில் இது முன்கூட்டியே தெரிவிக்க பொறிஞர்கள் இயலாதது. காணித்து இயக்கிவரும் சுரங்கங்களில் கூரை இடிந்து கீழ் நோக்கி விழும் போது, கூரையிலேயே அமைந்த எதிர்பாராத கட்டமைப்புக் குறையின் காரணமாக அத்தகைய நிகழ்ச்சி நடந்தது எனக் கூறப்படுகின்றது. சிறிய கற்பலகைகள் தொடர்ந்து கழன்று விழுவதால், கீழ் பாராதவாறு நோக்கி விழும் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. மறு புறத்தில், இவ்வாறு கீழ்விழும்போது நன்கு கடின மான பாறைகளின் பெரும்பாளங்கள் கழன்றுவிழும். பெரும் அளவில் இக்கீழ்விழும் நிகழ்ச்சிகள் ஆயிரக் கணக்கான டன்கள் அளவில் இருக்கும். இது முதன் மையான கூரையிலிருந்து நிகழவும் கூடும். இரண்டாவதாக, நெரித்தல் என்ற நிகழ்வைக் கூறலாம். வலிமை போதிய அளவில் இல்லாதிருப்ப தால் சுரங்கத்தின் கூரையானது நெகிழ இடங் கொடுக்கும். இத்தகைய நெரிப்பின் அளவு2.5 செ.மீ. அளவிலிருந்து பல மீட்டர் வரையில் இருக்கும். மிகுந்த அளவில் நெரிப்பு தோன்றுவதனால் சுரங்கத் தின் உயரம் குறையும்போது சுரங்கத்தின் பல பகுதி களில் வேலை நின்று போய்விடும். மூன்றாவதாக, வெடிப்புகள் அல்லது வீசி எறித லைக் கூறலாம். நிலக்கரியிலோ பாறையிலோ தோன் றும் குறைபாடுகள் காரணமாகத் திடீர் வெடிப்பி னைப் போன்ற நிகழ்ச்சிகள் தோன்றும். இவ்வெடிப் புகள் வளைந்த கூரை அமைப்புகளிலோ தூண்க ளிலோ தோன்றும், இவை உயர் அழுத்தம் கூடியவை யாய் இருக்கும். நான்காவதாக, திட்டமிட்டுச் சரியவிடுதலைக் கூறலாம். நீண்ட சுவர்ச் சுரங்கத்தில் தூண்களை மீட் கும்போது சுரங்கம் அமைத்த பரப்பின் கூரை கீழே விழத் தூண்டுமாறு கட்டமைப்பது தவிர்க்க முடியா. ததாகின்றது. இத்தகைய அமைப்பு வேலை செய்யும் பகுதியிலமைந்த தாங்கிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கின்றது. இத்தகைய அமைப்பு இல்லாதபோது இத்தாங்கிகள் மிகுந்த சுமைக்கு உட்படுத்தப்பட்டு முறிவினைத் தோற்றுவிக்கும். நிலக்கரி அடுக்கின் ஒரு பகுதியாகத் தூண்கள் அமைகின்றன. இவை தாங்கு வதற்காகப் பயன்படுகின்றன. து பலதிறப்புகளைக் கொண்டசுரங்கம் அகழ்பெரும் பரப்புகளில் மேலமைந்த சுமையின் முழு எடையும் தூண்களால் தாங்கப்படுகின்றது. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் அறையும் தூணும் என்ற முறை பெரு வழக்கிலுள்ள சுரங்கம் அகழ் தொழில் நுட்பமாகும். இம்முறை திறம்பட வேலை செய்வதற்கேற்றது. இதன் குறைபாடுயாதெனில், குறிப்பிட்ட அளவுள்ள நிலக்கரி,சுரங்கத்திலேயே தங்கி விடுகின்றது. பொது வாக எங்கு கட்டுமானஞ் சார்ந்த சுமையேற்றம் தள்ளிக் கழிக்கக் கூடியதாய் உள்ளதோ அங்குத் தூணின் அழுத்தம் புவியீர்ப்பைச் சார்ந்திருக்கும். மேலும் அத்தகைய இடங்களில் இடைநிலை அழுத் தங்கள் இருப்பதில்லை. எப்படியிருப்பினும் நிலக்கரி வயலின் அளவீடுகள் மேற்கொண்டாலன்றி அழுத் தப் பகிர்வீட்டினை மிகச் சரியாகக் கணித்துக் கூறு தல் இயலாது. தூண்களுடன் வேறு விதமான கூரைத் தாங்கிகள் தேவையாக உள்ளன. நிலைத்த, தற்காலிகக் கூரைத்தாங்கி அமைப்பு களின் கட்டமைப்பில், மரம் ஒரு முக்கிய கூறாகும்.