உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 ஆற்றல்‌, நிலக்கரி

442 ஆற்றல், நிலக்கரி எரிபொருள் ஆற்றலால் இயங்கும் சாதனங்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கான தேவையைத் தீர்மானிக்கும் தாக குறிக்கோளையும் பல்லாண்டுளாகத் கொண்ட திரட்டப் உள்ளது. பட்ட சுரங்க விபத்துக்களைச் சார்ந்த புள்ளி விவரத் தொகுப்புகள் பரந்த அளவில் ஆய்வு செய் யப்பட்டன. எந்திரங்களை மேம்படுத்துவதற்கும் இயக்கும் முறைகளுக்குமான அறிவுத் தேவையுடன் கூடிய புதிய வேலைகளை அளப்பதற்கு முன்னரே நீண்டகாலப் பயிற்சியளித்தலின் முதன்மை நன்கு உணரப்பட்டது. நடைபெற்றுக்கொண்டிருக் கும் வேலையிலேயே, ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த வேலையினை ஓர் அனுபவம் மிக்க இயக்கு பவர் கற்றுக் கொடுத்தால் விபத்துகள் நிகழ்வது பெரிதும் குறைகின்றன எனக் கண்டறியப்பட்டது. பல்லாண்டுகட்கு முன்னரே பிரிட்டன் நாடு இத்துறை யில் முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது. நிலத்தடி யில் வேலைசெய்யும் ஆட்கள் யாவரும் தக்கவாறு பயிற்சிபெற வேண்டுமெனப் பிரிட்டன் நாட்டுச் சட்டம் கூறுகின்றது. தேசிய நிலக்கரிக் குழு 15 வயதிலேயே பள்ளியை விட்டு வந்தவர்களைப் பயன் படுத்தினாலும், நிலக்கரியைத் தோண்டி எடுக்கும் தொழிலில் 18 வயது முடியும் வரை யாரையும் வேலைக்கு அனுமதிப்பதில்லை. ஓர் இளைஞனை நிலத்தடியில் வேலை செய்ய அனுமதிப்பதற்கு முன்னர், வகுப்பறைப் பயிற்சியும், செயல்சார்ந்த அடிப்படைப் பயிற்சியும் குறைந்தது நூறுநாட்கள் வரையில் பெற வேண்டும் எனவும் குறைந்தது 20 நாட்கள் வரையில் தனிபட்டவர்களின் நெருங்கிய மேற்பார்வையில் அவன் தனது பயிற்சியைத் தொடர வேண்டும் எனவும் சட்டம் குறிப்பிடுகின்றது.இத்திட் டத்தின் கீழ் ஒரு பயிற்சியைப் பெறும் ஆளை ஒரு பயிற்றுவிக்கும் அதிகாரி அல்லது வேலை நுட்ப மறிந்த வேலையாள் மேற்பார்வை செய்ய வேண்டும். அதனுடன் கூடக்குறிப்பிட்ட நிலக்கரியை தோண்டி எடுக்கும் இயக்கத்தில் நிலத்தடிப்பயிற் சிக்காகப் பயிற்சி பெறுபவர் குறைந்தது 40 நாட்கள் வரையில் நெருக்கமான தனி ஒருவர் கண்காணிப்பின் கீழ இருக்க வேண்டும். ஆண்டுகளில், 1966 முதல் 1971 வரையிலான அமெரிக்க ஒன்றிய நாடுகளில், நிலத்தடிச்சுரங்கங் களில் இறந்தவர்களைப் பற்றிய ஆய்வு அட்டவணை 10 இல் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் முதன்மையான நிலக்கரிச் சுரங்க விபத்துகள் அட்டவணை 11இல் வழங்கப்பட் டுள்ளன. 1970 ஆம் ஆண்டின் தொழில் சார்ந்த பாது காப்பும் உடல் நலத்திற்குமான சட்டம் (occupational safety and health act 1970) அமெரிக்க ஒன்றிய நாடுகளில் தொழில் சார்ந்த பாதுகாப்பும் உடல் நலத்திற்குமான தேசியக் கழகத்தை (National Insti- tute for Occupational Safety and Heath) உருவாக் கியது. இக்கழகத்தின் குறிக்கோள்களாவன, நிலக் கரிச்சுரங்க வேலையாட்களுக்கு வரும் நியுமோகோனி யாசிஸ் (pneumoconiosis) என்ற நோய் வருவதற்குக் காரணமான இயக்கத்தைக் கண்டறிதல், தொடக்கக் காலத்திலேயே இந்நோய்க்கான அறிகுறியைக் காணும் முறைகளைத் தீர்மானித்தல் என்பனவா கும். கருப்பு நுரையீரல் (black lung) என்று அழைக்கப்படும் இந்நோயைப் பற்றி அப்பலேசியன் ஆய்வுக் கூடம் (மார்கன் டவுன், மேற்கு வர்ஜீனியா) ஆய்வுகள் நடத்தி வருகின்றது. நிலக்கரிச் சுரங்க வேலையாட்களைப் பரிசோதனைகளுக்கு உட்படுத்து வது கூட உடல் இவ்வாய்வுக் கூடத்தினரின் செயல்முறை யாகும். நிலக்கரிச் சுரங்க வேலையாட்களின் நல ஆராய்ச்சியில் மருத்துவத்துறையிலும் உடல் துறையிலும் பல திட்டங்களைக் கொண்டுள்ளனர். மேற்கூறப்பட்ட சட்டத்திலேயே, சுரங்க வேலை யாட்கள் மார்புப் பகுதியில் X-கதிர்ச் சோதனை செய்து கொள்வதற்கும் ஆய்விற்கும் பாதுகாப்பிற் கும் தேவையான மற்ற சோதனை களைவேலையாட் கள் செய்துகொள்வதற்கும் ஏற்ற வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட் டுள்ளது. பணியாட்களின் பரிசோதனைகளுக்கான செலவைப் பணியாட்கள் ஏற்கக்கூடாது. ய மேற்பரப்புச் சுரங்கம் அகழ்தல் (surface mining). மேற்பரப்புச்சுரங்கம் அகழ் முறையில் (இது பட்டை முறைச் சுரங்கம் அகழ்தல் எனவும் சில நேரங்களில் அழைக்கப்படுகின்றது.) அடர்த்தியான இருபடுகை களுக்கிடையேயுள்ள தளர்த்தியான நிலக்கரிப்படுகை யின் மேலமைந்த சுமையினை நீக்கம் செய்து அப்படு கையிலுள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்படுகிறது. மேற்பரப்புச் சுரங்க மிடலை இரண்டு பரந்த வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, உருவரை சார்ந்த நிலக்கரிச்சுரங்க மிடுதல் (contour mining), பரப்புச் சுரங்கமிடுதல் (arca mining) என்பனவாகும் பின்னதைக் கழுத்துப் பட்டை வடிவமான சுரங்கமிடுதல். (collarmining) என்றும் சில பகுதிகளில் அழைப்பர். இது மலைப்பகு திகளில் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகையமலைப் பகுதியின் இடத்தியல்பைச் (topography) சார்ந்து சுரங்கமிடும் பள்ளங்களின் வடிவமைப்பு (pit design ) அமைகின்றது. மிக உயரமாக அமைகிற இடங்களில் மீட்கத்தக்க நிலக்கரிவளங்கள் நிலக்கரி வெளித் தோன்றும் (coal out crops }பகுதிகளுக்கு அருகிலேயே குறுகிய பட்டையாக (narrow band) அமையும் போக்கு, காணப்படுகிறது. நிலக்கரியைத் தோண்டி எடுப்பதற்கான.பள்ளங்கள் நீண்டு குறுகிய பட்டை வடிவாய் அமையும்.இப்பள்ளங்கள் அம்மலை அல்லது குன்றைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட உருவரை கொண்டு இடைவெளிகளில் ஒன்றையடுத்து ஒன்று அமை கின்றன.