உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 ஆற்றல்‌, நிலக்கரி

446 ஆற்றல், நிலக்கரி பொருள்களைக் கொட்ட முடிகின்றது. மற்றொரு உருள்தடத்தின் மீது ஊர்ந்துசெல்லும் எந்திரக் கலப்பை நிலக்கரிப்படுகையின் மேலமைந்த சுமை யினைப் பரப்பும் பகுதியில் வேலை செய்து, அங்குள்ள வற்றைச் சீர்செய்து, பழைய உருவத்தை அப்பகுதிக்கு வழங்குவதற்கேற்றவாறு செயல்படுகிறது. கொண்டுசெல்லும் அதே இயக்கத்தில் நெடுந் தொலைவிலமைந்த நெடுஞ்சாலைகட்குச் சுமை யேற்றிச் செல்லும் வண்டிகளையும் நிலச்சமனிடும் எந்திரங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத் துவதுண்டு. இதனைச் செய்த பின்னர், நிலச்சமனிடும் எந்திரங்கள் எளிதாகச்சுமையேற்றக்கூடிய மேற்பரப் புப் பொருள்களை நீக்குகின்றன. அப்போதுசுமை யேற்றிச் செல்லும் வண்டிகள் அடியிலமைந்த பாறை களை வேறிடத்திற்குக் கொண்டு செல்கின்றன. அப்பலேசியன் பகுதியில் பள்ளத்தாக்கினை நிரப்பும் முறை புதியது. இதனுடன், சுமையேற்றும் வண்டியில் உள்ளது போலவே சுரங்கமிடுபவர், ஒரு பரவவிடும் சாதனத்தை வழக்கமாகப் பயன்படுத்து வார் (காண்க, படம் 8). பலகையின் நெடுகிலும் அமைந்த மேற்சுமையினைச் சுமையேற்றிச் செல்லும் வண்டிகள் ஏற்றிக்கொண்டு குறிப்பிடப்பட்ட பள்ளத்தையோ அல்லது பள்ளத்தாக்கையோ பக்க வாட்டிலிருந்து கொட்டி நிரப்பும். மேலமைந்த சுமையினைக் கொண்டு பள்ளத்தாக்கை நிரப்பும் வேலையில் எல்லா நிலச்சமனிடும் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளத்தாக்கை நிரப்பும் முறையுடன், போக்கு ஒன்றிணைக்கப்படு வரத்து முறையும் அடிக்கடி கின்றது. மலை மீது சமப்படுத்தும் முறை பரப்புப்பட்டை யிட்டுச் சுரங்கம் அகழ்தலைப் போன்றதேயாகும். இம்முறை மைய மேற்கு மாநிலங்களில் செயல்படுத் தப்படுகின்றது. படம் 9 இல் காட்டியவாறு அருகி லமைந்த பள்ளத்தாக்கினை நிரப்புவதற்காக மலை யுச்சியின் (mountain top) ஒரு பகுதி சமப்படுத்தப் பட்டு நிரப்பப்படுவதைக் காணலாம். இடத் தியல்பும் நிலக்கரிப் படுகைக் கட்டமைப்பும் பொருளா தாரக் கூறுகளும் தக்கவாறு அமைகின்ற இடங்களில் இம்முறை பயன்படுத்தப்படுகின்றது. போக்குவரத்து முறைகளுக்கும், பள்ளத்தாக்கை நிரப்பும் முறை களுக்கும் பயன்படுத்தப்படும் அதே தொழில் நுட்பங் களையும் சாதனங்களையும் மலை மீது சமப்படுத் தும் முறையும் பயன்படுத்துகின்றது. நிலக்கரியைச் சுமையேற்றிய பின்பு, மென்மையான பொருள்கள் உருண்டு செல்லும் தரை அமைப்பு உண்டாக்கப் பெறுகிறது. மீட்பிக்கப்பட்ட சமநிலம் பழைய உருவமைப்பைக் காட்டிலும் இப்போது ம மதிப்பு மிக்கதாகும். இவ்விடத்தை வீடு கட்டவும் அலுவலகக் படம் 9. மலை உச்சியைச் சமப்படுத்தும்போது, ஒரு பகுதி அள விலான மலையுச்சி மேட்டினை அருகிலமைந்த பள்ளத்தாக்கினை நிரப்பப் பயன்படுத்தி, சுரங்கப் பகுதியில் சமன் செய்தல் நிறை வேற்றப் படுகின்றது. இத்தகைய இயக்கத்தில் கிடைக்கும் பொருட் கள் உருண்டு செல்லக்கூடிய மென்மையான நிலப்பகுதி அல்லது தட்டையான நிலப்பகுதி நிலத்தின் மதிப்பை அதிகமாக்கச் செய்யும் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. மீட்பிக்கப்பட்ட கட்டிடம் கட்டவும், தொழிற்சாலை கட்டவும் ஆடு மாடுகளை மேய்க்கவும் பயன்படுத்தலாம். நிலக்கரிப் படுகை மீதமைந்த சுமையினைக் கையாளுதல் சுரங்கம் அகழ்பவர்கள் சுரங்கம் அகழும் வேலையைச் செய்வதற்குச் சில புதிய முறைகளைக் கையாளும்போது, ஏற்றிக்கொண்டு செல்லும் இயக்கங்களில் (load and carry operations ) சக்கரச் சுமையேற்றும் எந்திரங்களைப் பரந்த அளவில் பயன்படுத்துகின்றனர். இவர்கள் உருவரை சார்ந்த நிலக்கரிச் சுரங்கம் அகழும் முறையில் இதற்கு முன் னர் பயன்படுத்தாத இரு எந்திரங்களையும் பயன் படுத்துகின்றனர். அவையாவன. சக்கர எந்திரக் கலப்பை, நிலச்சமனிடும் எந்திரங்கள் நெடுந் தொலைவிலமைந்த சாலைகட்குச் சுமையேற்றிச் செல்லும்வண்டிகள் ஆகியன ஆகும். பலகூறுகளைச் சார்ந்து, சுரங்கம் அகழ்பவர், நிலக்கரிப்படுகை மீதமைந்த சுமையினைக் கொண்டுசெல்லச் சுமை யேற்றும் எந்திரங்களையும் நிலச்சமனிடும் எந்திரங் களையும் அல்லது சுமையேற்றிச்செல்லும் வண்டி களையும் பயன்படுத்துவர்.