உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 451

லிருந்து தூய நிலக்கரி வெளியேற்றப்படுகின்றது. இதன் பின்னர், இந்நிலக்கரி, நான்கு இரட்டை அடுக்குகளைக் கொண்ட நிலக்கரியைக் கழுவும் அரி தட்டிகளைச் சென்றடைகின்றது. இந்நான்கு இரட்டை அடுக்குகளைக் கொண்ட அரிதட்டிகளில் இரண்டு அரிதட்டிகள் 3 மீ, 5 மீ அளவினையும் மற்றிரண்டும் 2மீ, 5.5 மீ அளவினையும் மேல் மைந்த அடுக்கு 3 செ.மீ அரிதட்டித் 3 துணியைக் கொண்டும் அடியிலமைந்த அடுக்கு 0.5 செ.மீ அரி தட்டித் துணியைக் கொண்டும் இருக்கும். 12.5 செ.மீ 1.25 செ.மீ அளவினைக் கொண்ட அரித்தெடுக்கப்பட்ட பின்னப் பொருள்கள், இரண்டு எண்ணிக்கையைக் கொண்ட 90 செ.மீ, 150 செ.மீ அளவுடைய நொறுக்கும் எந்திரங்களில் நொறுக்கப் பட்டு அவற்றின் அளவு 3.75 செ.மீ முதல் 0 செ.மீ அளவு வரை குறைககப்படுகின்றது. இதன் பின்னர் இப்பின்னப் பொருள்கள் 120 செ.மீ பட்டைக்குக் கொண்டு செல்லப்படும். இப்பட்டை நிலக்கரியினை 15000 டன் கொள்ளளவினைக் கொண்ட கழுவப் பட்ட நிலக்கரியைக் கொள்ளும் குழிக்குக் (25மீ விட்டமும் 65மீ உயரமும் உடையது) கொண்டு செல்கிறது. கழுவப்பட்ட நிலக்கரியினைக் கையாளும் அரி தட்டியிலிருந்து பெறப்பட்ட 0.5 செ.மீ முதல் 0 செ.மீ வரையிலுள்ள பின்னப் பொருள்கள் இரண்டு சிறிய நிலக்கரிப் பள்ளங்களுக்கு அனுப்பப்படு கின்றன. இங்கிருந்து இப்பின்னப் பொருள்கள் எட்டு 60 செ.மீ. அளவுடைய வகைப்படுத்தும் சுழற்காற்று அமைப்புகளுக்கு எக்கியின் மூலமாகச் செலுத்தப்படு கின்றன. இச்சுழற் காற்று அமைப்பின் கீழ்ப்புறப் பாய்வு 4 குறுக்குப் பாய்வினைக் கொண்ட அரிதட்டி களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் பின்னர் இவை, மில்லி மீட்டர் திறப்புக்களைக் கொண்ட 4 தனித்த அடுக்கினைக் கொண்ட உலர்த் தும் அரிதட்டிகளைச் சென்றடைகின்றன. இந்நான்கு அரிதட்டிகளில் மூன்று அரிதட்டிகள் 2மீ, 5.5மீ அள வினையும் ஒன்று 3மீ, 5.5மீ அளவினையும் கொண் டிருக்கும். உலர்த்தும் அரிதட்டியின் மீதமைந்த 0.8 செ.மீ மில்லி மீட்டர் அளவுள்ள பொருள்கள், பகிர்ந்து கொண்டு செல்லும் அமைப்புகளுக்குச் செலுத்தப்படு கின்றன. இப் பகிர்ந்து கொண்டுசெல்லும் அமைப்புகள், இப்பொருள்களை விரைவேகச் சுழற் சியினால் பிரிக்கும் எந்திரங்களுக்கு ஊட்டுகின்றன. விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் எந்திரங்களி லிருந்து வெளிவரும் பொருள், கழுவப்பட்ட நிலக் கரி கொள்ளும் குழியைச் சென்றடைகின்றது. சுழற்காற்று அமைப்பிலிருந்து ஒழுகிய திண்மப் பொருள்களின் பொங்கி வழிந்த பகுதியும், குறுக்குப் பாய்வினைக் கொண்ட அரிதட்டிகளில் அமைந்த அ. க. 3-29அ ஆற்றல், நிலக்கரி 451 அடிப்புறப் பாய்வும், சிறிய நிலக்கரியை உலர்த்தும் அரிதட்டிகளிலமைந்த அடிப்புறப் பாய்வும் கழிவுக் குளத்திற்கு எக்கி வழியாகக் கொண்டு செல்லப்படு கின்றன. தொடக்கத்தில், வீட்டை வெப்பப்படுத்துவதற் காகவும், கையினால் ஊட்டப்படும் உலைகளுக்கும் பரந்த அளவில் நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. நிலக்கரி நிலையத்தை இயக்குபவர் நிலக்கரியைச் சிக்கனப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டார். தற்கால நடைமுறையில், உயர் பண் பினைக் கொண்ட நிலக்கரித் தேவையின் காரண மாக, நிலக்கரியில் அடைப்பட்டிருந்த அயல் துகள் களை வெளியேற்றுவதற்கு நொறுக்கும் முறை கை யாளப்பட்டது. நிலக்கரியினை நொறுக்கிய பின்னர், கழுவும் சாதனத்தில், அந்நொறுக்கப்பட்ட நிலக் கரியைக் கழுவும்போது அயல்பொருள்கள் நீக்கப் பட்டு உயர் பண்பினைக் கொண்ட நிலக்கரி உண்டாக்கப்படுகின்றது. நொறுக்கும் கருவியின் தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஏனெனில் ஒரு நொறுக்கும் கருவியானது சீரான மேல் அள வினைக் கொண்ட நிலக்கரியினை உண்டாக்குவ தோடு, குறைந்த அளவில் நுண்ணிய இறுதிப் பொருள்களை உண்டாக்குவதாயும் இருக்கவேண்டும். குறிப்பிட்ட துகள் அளவு வரம்புகளில் நிலக் கரித் துகள்களை வகைப்படுத்தியமைத்தல் நிலக்கரி உருவாக்கும் நிலையத்தின் முக்கிய நன்மை பயக்கும் செயல்களில் ஒன்றாகும். நிலக்கரியை அரித்திடும் தட்டிகளில் செலுத்தி வெவ்வேறுபட்ட அளவுகளில் நிலக்கரி பிரிக்கப்படுகின்றது. இத்தகைய அரிக்கும் தட்டிகள் கீழ்க்கண்ட வகைகளில் அமையும். அவை, இணையான சட்டங்களைக்கொண்டு பல் வேறுபட்ட திறப்பு அளவுகளையும் உருவங்களையும் துளையிடப் பட்ட எஃகுத் தட்டுக்களைக் கொண்டு இருப்பளை, மேலும், சதுர அல்லது செல்லகத் திறப்புக்களைக் கொண்டு நெய்யப்பட்ட கம்பித்துணிகளைக் கொண்டு இருப்பவை, அரித்திடும் தட்டுக்கள் நிலையாகவோ நகரும் தன்மையுடனோ அமைபவை, அசைந்திடும் அல்லது அதிர்ந்திடும் அரிதட்டுக்கள் வெளிச் செல்லும் திறப்புக்களின் வழியாகத் துகள்கள் வெளியேறுவதற்கு உதவி செய்பவை, மிகக் குறை வான நுண்ணிய அளவுகளைக் கொண்ட கரித் துகள்கள், மைய விலகு விசையைப் பயன்படுத் தியும், காற்று அல்லது நீர்ப்பாய்வில் வேறுபட்ட படிவுறும் தன்மையினடிப்படையிலும் பிரிப்பவை ஆகும். நிலக் நிலக்கரியிலமைந்த எல்லாவிதமான அயற் பொருள்களின் ஒப்படர்த்திகள் நிலக்கரியின் ஒப் படர்த்தியைக்காட்டிலும் அதிகமாக இருப்பதால் நிலக்கரித்துகளின் அடர்த்தியே, அதன் தூய்மையைக் காட்டும் அளவீடாக அமைகின்றது. இந்த