உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 453

குமிழிகளுடன் இணைந்து, மேலெழும்புகின்றன. பின்னர் அங்கு அவை செறிவூட்டமடைந்த பொருளாக நீக்கப்படுகின்றன. ஆனால் பளுவான கழிவுத் துகள்கள் அடியில் சென்று, நீர்ப்பாய்வினால் மிதக்கும் அறையின் வழியாக நீக்கப்படுகின்றன. மெதில் ஐசோ பூட்டைல் கார்பினால் போன்ற நுரைக்கச் செய்யும் பொருள் ஊட்டப் பொருளுடன் சேர்க்கப்படுகின்றது. எவ்வாறு சாம்பற் பொருள் விரும்பத்தகாத பொருளாக இருக்கிறதோ அவ்வாறே விற்பனை செய்யக் கூடிய நிலக்கரியில் அமைந்த நீரும் விரும்பத் தகாத மாசாக அமைகின்றது. நீர் அமைவதனால், நிலக்கரியைக் கையாளுவதும், கப்பலில் ஏற்றுவதும், பிரச்சினைகளாகின்றன. பளுவின் காரணமாய், கொண்டு செல்லும் செலவும் உயரும். மேலும் நிலக் கரியின் ஓர் அலகு எடைக்கான வெப்பப்படுத்தும் மதிப்பையும் குறைக்கும். நிலக்கரிப் பொருளின் புறப் பரப்பு அதிகமாக அதிகமாக, அதனை உலர்த்தும் பிரச்சினை அதிகமாகிறது. நிலக்கரித் துகளின் அள வினைச் சார்ந்து, பல முறைகள் பயன்படுத்தப்படு கின்றன.அதிர்வுறும் அரிதட்டி வகை சார்ந்த விரை வேகச் சுழற்சியைப் பயன்படுத்தும் எந்திரங்களைப் பயன்படுத்தலாம். மிகவும் நுண்ணிய பொருளை நீக்குவதற்கு (28 வலையும் அதற்கும் குறைவானதும்) ஒரு வடிகட்டும் முறை தேவையாகலாம். வட்டமான தட்டுவகை சார்ந்த வடிகட்டும் அமைப்புகளும், உருளைவகையான லடிகட்டும் அமைப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. வடிகட்டும் அமைப்புகள் தேவையாகும்போது படிவாக்கம் செய்த பின்னரே, வடிகட்டுதல் நடைபெறுகின்றது. படிவுறும் முறைக் குத் துணை புரிய, சிறு உருண்டைகளாகத் திரளச் செய்யும் வேதியியற் பொருள்கள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வெப்ப உலர்த்தும் முறை யின் வழியாக ஈர அளவு இறுதியாகக் குறைக்கப்படு கின்றது.நீர்மமாக்கப்பட்ட படுகையைக் கொண்ட நிலக்கரி உலர்த்தும் அமைப்புகளின் பயன்பாடு உயர்ந்து கொண்டே வருகின்றது. நிலக்கரியை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லுதல். 1917ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் ஏறக்குறைய 513 மில்லியன் டன் நிலக்கரி பல்வேறுபட்ட இடங்களுக்குக் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இருப்புப் பாதை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட நிலக்கரி யின் அளவு 271 மில்லியன் டன் ஆகும். (மொத்தத்தில் 53.) இருப்புப் பாதைநீர் வழிஇணைந்த அமைப் பின் வழியாக 153 மில்லியன் கூடுதல் டன் (30/) பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மொத்தமாக இருப்புப் பாதைகள் வழியாக 83/ அளவு நிலக்கரி அமெரிக்க ஒன்றிய நாடுகளில் ஓரிடத் திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. ஆற்றல், நிலக்கரி 453 அமெரிக்க நாட்டின் எல்லா இருப்புப் பாதை களும், நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கு நான்கு தனித்த வகைப் பணிகளைத் தருகின்றன. அவை யாவன, தனித்த வண்டியில் சுமை ஏற்றுதல், பல வண்டிகளில் சுமை ஏற்றுதல், வண்டித்தொடர் அள விற்குச் சுமை ஏற்றுதல், தொகுதி வண்டித் தொடர் அளவு சுமை ஏற்றுதல் என்பனவாகும். ஒவ்வொரு வகை சார்ந்த சுமை ஏற்றிச் செல்லும் பணியிலும், தன்னியல்பாய், அமைந்த இயங்கும் பண்புகள் உள்ளன. இதன் காரணமாக, தனித்தன்மை வாய்ந்த இயக்கச் செலவும், சுமையேற்றீச் செல்லும் கட்டண வீதமும் அமையும். முதலில் கூறம்பட்ட இரு முறை களும் நன்கு புரிந்துகொள்ளக் கூடியவாகும். வண்டித் தொடர் அளவு சுமையேற்றிச் செல்லும் முறையில், போதிய எண்ணிக்கை சுமையேற்றிய வண்டிகளைக் கொண்டதாய், ஒரு நாளில், ஓரிடத்திலிருந்து மற் றோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் வண்டியைக் கையாள வேண்டும். தேவையான வண்டிகளின் எண்ணிக்கை ஓர்இருப்பு வண்டிக்கும் மற்றோர் இருப்பு வண்டிக்கும் வேறுபடும். வண்டித் தொடர் அளவிற்குச் சுமையேற்றம் செய்து கொண்டு செல்லு தல் ஒழுங்காக, ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அமைவதில்லை. ஒரு வண்டித் தொடர் அளவிற்கு நிலக்கரியைக் கொண்டு செல்லும்போது, அவ் வண்டித் தொடர், ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒரு பொதுவாக அமையப் பெற்ற வண்டிகளில் பெறப் பட்ட வண்டிகளையே பயன் படுத்துகின்றது. ஒரு தொகுதி வண்டித் தொடரில் நிலக்கரியைச் சுமையேற்றிக் கொண்டு செல்லுதல் ஒருமித்த செய லைக் கொண்டதாய், 'ஓரிடத்திலிருந்து மற்றோர் குறிப்பிட்ட இடம் வரையில் திட்டமிடப்பட்ட அடிப்படையில் கொண்டு செல்வதாகும். இவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்கொண்டு செல்லும்போது இடையிலமைந்த இடங்களில் அவ் வண்டி நிற்காமலும், சுமையிறக்கம் ஏதும் செய்யா மலும் செல்கின்றது. தொகுதி வண்டித் தொடர் கள் தனித்தன்மை வாய்ந்த சுமையேற்றமும் சுமையிறக்கமும் செய்யும் சாதனங்களைக் கொண்டி ருக்கும். படம் 14 இல் யார்க்கேனியான் சுரங்கத்தில் (நியூ மெக்சிகோ) தொகுதி வண்டித் தொடரில் சுமையேற்றம் செய்வது காண்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த காலத்தில் மிகுந்த அளவிலான நிலக்கரி யைச் சுமையேற்றம் செய்வதற்கு, வேகச்சுமையேற் றம் செய்யும் முறை தேவையாகின்றது. இத்தகைய முறையில், நிலக்கரி கட்டற்று, இருப்புத் தொடர் வண்டியில் விழுவதாய் அமைய வேண்டும். வேகச் சுமையேற்றம் செய்யும் முறையின் அடிப்படை வகைகளாவன, சுமையேற்றும் சுரங்கப் பாதை யைக் கொண்ட நிலத்தடித் தேக்கம், சுமையேற்றும் கொள்கலத்தைக் கொண்ட குழித்தேக்கம் என்பன வாகும். படம் 14 இல் முதல் வகை காண்பிக்கப்பட்