உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 ஆற்றல்‌, நிலக்கரி

464 ஆற்றல், நிலக்கரி வகையைச் சார்ந்த 3710 முதல் 593° செ.வெப்பநிலை இடைவெளிக்குள், வளிமமாக்கியை விட்டு இயற்கை நிலஎண்ணெய் வளிமம் வெளியேறுகின்றது.இயற்கை நில எண்ணெய் வளிமம் தார், எண்ணெய், நாப்தா, பினால்கள் அம்மோனியா, சிறிதளவு நிலக்கரி சாம்பல், தூசு போன்ற கார்பன் ஆக்கப்பட்ட பொருள்களைக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை நில எண்ணெய், வளிமம் கழுவும் சாதனத்தின் வழி யாகச் செலுத்தப்படுகிறது. இங்கு இச்சாதனத்தில் சுழலும் வளிமமும் நீர்மமும் இயற்கை நில எண்ணெய் வளிமத்தைக் கழுவுகின்றது.. பின்னர் நீராவியுடன் வளிமம் செறிவூட்டப் பட்டிருக்கும் வெப்பநிலைக்குக் குளிர்விக்கப்படுகின்றன உயர்ந்த கொதிநிலையைக் கொண்ட தாரின் பகுதிகள் வடிக்கப்படும்போது கழுவப்பட்ட நீரில் தார் கலந்திருக்கும். டன் நிலக்கரியும் சாம்பல் தூசுகளும் கலந்திருக்கும். இத்தாரு நீராவியால் செறிவூட்டமடைந்த வளிமமானது கழிவு வெப்பக் கொதிகலனுக்குச் செலுத்தப்படு கின்றது. இங்கு கழிவுவெப்பம் 166 முதல் 182° செ. வெப்பநிலைக்குள் மீட்கப்படுகின்றது. இந்தக் கொதி கலனில் வடிக்கப்பட்ட வளிமம், நீர்மம் கழுவும் சாத னத்திற்குச் செலுத்தப்படுகிறது. தேவைக்கு அதிக மான வளிம நீர்மம், தார்-வளிமம்-நீர்மம் பிரிக்கும் அமைப்பின் வழியாகச் செலுத்தப்படுகின்றது. சிதைப் பதற்காகவும் வளிமமாக்கத்திற்காகவும் தார், தூசு சேர்ந்த கலவை வளிமமாக்கியை வந்தடைகின்றது. வளிமமாக்கியில் ஊட்டப்பட்ட 86% அளவு நிலக் கரி வளிமமாக்கப் படுகின்றது. மீதி 14% அளவு பெரும் பாலும் கார்பன் ஆகஇருக்கின்றது. இந்தக்கார்பனும் எரியும் பகுதியில் ஆக்சிஜனுடன் சேர்த்து எரிக்கப் படுகின்றது. இவ்வாறாகக்கார்பனுடைய உள்ளுறை வெப்பம் உணர்வெப்பமாக மாற்றப்படுகின்றது. இவ்வுணர்வெப்பமும் நிலக்கரிக்கு எதிராக அமையும் மேற்புறப்பாய்வில் செல்லும் வளிமமாக்கம் செய்யும் காரணிக்கு மாற்றப் படுகின்றது. இத்தகைய தொழில் நுட்பத்தின் வாயிலாக நிலக்கரியை முழு மையாக வளிமமாக்கம் செய்ய இயலும். சாம்பலில் 'தள்ளிக்கழிக்கத்தக்க அளவிலான எரியாத கார்பனே தங்குகின்றது. இம்முறையில், சாம்பலின் உணர்வெப் பம் பயன்படுத்தப்படுகின்றது. வினைகள் நடைபெறுவதற்குத் தேவையான வெப்பத்தை வழங்கும் முறை ஒரு முக்கிய கூறாக இதில் அமைகின்றது. இக்கூறு, அம் முறைக்கும் அதன் பொருளாதார முக்கியத்துவத்திற்கும் முடிவான விளை வினைக் கொண்டிருக்கும். வளிமமாக்கம் செய்தல் உயர்ந்த வெப்பத்தை உட்கவரும் முறையாகும். எனவே வெப்பத் தேவைகளைக் கீழ்கண்ட நான்குவழி களில் பெறலாம். அவை, ஆக்கிஜனுடன் பகுதி அ வில் எரிவித்து நேரடியாகப் பெறல், வெப்பம் வெளி விடும் வேதியியல் வினைகளை ஒன்று சேர்த்து வெப் பத்தை நேரடியாகப் பெறல், குழாய் வடிவ மாற்றிய மைக்கும் அமைப்புகள் அல்லது கோக் அடுப்பு முறை களைப் போன்ற முறைகளைப் பயன்படுத்தி மறை முகமாக வெப்பத்தைப் பெறல், மின் வெப்ப முறை வெப்பம் அல்லது அணுக்கரு வெப்பம் வழியாக மறைமுகமான வெப்பம் பெறல், வெப்பத்தைக் கொண்டு செல்பவை வழியாக நேரடியான வெப்பம் பெறல் என்பனவாகும். இவ்வெப்பம் வழங் குபவை தனியாக வெப்பப்படுத்தப் படுகின்றன. மறு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படும் சாம்பல் திண் மத் துகள்கள் உருகிய உப்புகள் பிற பொருட்கள் ஆகியன தேவையான வினைப்படும் வெப்பநிலையில் நீர்மமாகவே உள்ளன. எல்லா முறைகளும் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ளன அல்லது கருத்து வடி வான முறையில் காணப்படுகின்றன. லூர்கி அழுத்த வளிமமாக்கத்தில் ஆக்சிஜனுடன் பகுதியளவில் எரிதல் நிகழ்கின்றது. நீராவி- ஆக்சிஜன் கலவையுடன் வளிமம் ஆக்கப்படாத கார்பன் பகுதியளவில் எரிக்கப்படும்போது உயர் வெப்ப நிலையில் நீராவி கார்பன் டை ஆக்சைடு கலவையினைப் பெறலாம். இக்கலவை வளிமமாக்கக் காரணியாகப் பயன்படுகிறது. வளிமமாக்க இடையீட்டுப் பொருளின் நீராவி- ஆக்சிஜன் விகிதம் எரியும் பகுதியில் வெப்ப நிலை யைக் கட்டுப்படுத்துகின்றது. இவ்விகிதத்தைத் தக்கவாறு சரிசெய்து, எரிதலின்போது, சாம்பலை உருகாதிருக்கச் செய்யலாம்; வெப்பநிலையைத் தேவையான அளவிற்கு உயர்த்தி நிலக்கரியின் முழுமையான வளிமமாக்கத்தை உறுதியாக்கலாம். எரியும் பகுதியில் வளிமமாக்கத்திற்கான வினைகள் தொடங்குவதால் வளிம வெப்பநிலை பேரளவில் குறைகின்றது. மேலும் எரியும் பகுதி குறுகலாக உள்ளது.இப்பகுதியின் உயரம் நிலக்கரித் துகளின் விட்டத்தைப்போல் 5 இலிருந்து 10 மடங்கு வரை யில் இருப்பதன் பொருள் யாதெனில், இப்பகுதியில் நிலக்கரித்துக்கள் தங்கக் கூடிய கால அளவும் எரியும் பகுதியில் சாம்பல் தங்கும் அளவும் குறைவு என்ப தாகும். அளவு, இத் தங்கும் கால சாம்பல் உட்பொருளையும் வளிமமாக்கத் திறனையும் நிலக் கரித் துகளின் உருவ அளவையும் வினைப்படும் தன்மையையும் கரியினையும் சார்ந்ததாகும். தங்கும் கால அளவு பொதுவாக 3 முதல் 10 மணித் துளிகள் வரையிலாகும். உயர் வெப்பநிலைப்பகுதியில் சாம் பலின் குறைந்த தங்கும் கால அளவு போதுமான தாய் இல்லாததால் சாம்பல் வளிம வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப் படுவதில்லை. மிக்க வளிமக்கலவைக்கு நீராவி ஆக்சிஜன் விகிதம் விளைவினைக் கொண்டிருக்கும். வளிம் அளவு நிலக்கரியின் தரத்தைச் சார்ந்திருக்கும்.