உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 ஆற்றல்‌, நிலக்கரி

468 ஆற்றல், நிலக்கரி முறையுடன் கூடப் பல நிலைகளில் உருவாக்க நிலை யிலமைந்த 20 இற்கும் மேற்பட்ட நிலக்கரி மாற் றம் செய்விக்கும் முறைகள் இருந்தன. ஒவ்வொரு முறையும் பொருளாதாரச்சுற்றுப்புறச் சூழல்சார்ந்த நன்மையையும் தீமையையும் தன்னகத்தே கொண்டி ருந்தது. உள்வரப்பெறும் நிலக்கரியின் தன்மையைச் சார்ந்து அதனை மாற்றம் செய்விக்கும் சில முறை கள் எளிமையாய் இருந்தன. மற்றும் சில முறை களில் உள்வரப் பெறும் நிலக்கரியின் தன்மைகள் குறுகிய வேறுபாட்டுக்குள் அமைய வேண்டியிருந்தன. சில முறைகள் உயர் பி.வெ.அ. வளிமத்தினை (குழாய் வழிக் கன வளிமப் பண்பு) ஆக்கம் செய்வதற் கென்று அமைந்தன. சில முறைகள் இணைந்த சுழற்சிக்கான திறன்நிலையங்களில் இயக்குவதற் கென்றே வடிவமைக்கப்பட்டன. மற்றும் சில முறை கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக் காகத்தாம் பி.வெ.அ வளிமத்தை ஆக்கம் செய்தன அல்லது வளிமத்தின் கீழ்ப்பாய்வில் அமைந்த முறை களில் வளிமத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தப் பட்டன. ஹைகேஸ் நிலக்கரி வளிமமாக்க முறை, 1944ஆம் ஆண்டில் வளிமத் தொழில் நுட்பக் கழகம் தொடங் கிய வளிமமாக்கம் செய்யும் ஆய்வுகளின் அடிப் படையில் இம்முறை அமைகின்றது. 1950 ஆம் ஆண் டின் நடுவில் குழாய் வழிச் செலுத்தத்திற்கான செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வளிமத்தை உரு வாக்கும் வளிமமாக்கம் செய்யும் இருமுறைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவையாவன, ஆக்சிஜனு டனும் நீராவியுடனும், தூளாக்கப்பட்ட நிலக்கரியை மிதக்கவிட்டு வளிமமாக்கம் செய்து, கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவை யினை (செயற்கை வாயு) ஆக்கம் செய்தல் இவ் வாறு பின்னர் மீத்தேனேற்றம் செய்யப்படுகிறது. நீர்மமாக்கப்பட்ட படுகையில் உயர்த்தப்பட்ட வெப்ப நிலையிலும் அழுத்தத்திலும், நிலக்கரியை நேரடியாக ஹைட்ரஜனேற்றம் செய்தல் என்பனவா கும். இவ்விரு கோட்பாடுகளிலும் உருவாக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டதாய் ஹைகோல்முறை அமைகின்றது. நீர்மவளிமமாக்கம் உலையில் உயர் வெப்ப நிலை யையும் 649 முதல் 927° செ. வரை உயர் அழுத்தத் தையும், (67kscm) பயன்படுத்தி உச்ச அளவில் மீத்தேனை நேரடியான ஆக்கம் செய்யத்தக்க தற்போ தைய முறை உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறைக் கானஊட்டப் பொருளாகக் கெட்டியாகும் பிட்டுமன் இயல்பு நிலக்கரிகளும் கெட்டியாகாத பழுப்பு நிலக் கரியும், துணைப்பிட்டுமன் இயல்பு நிலக்கரிகளும் பயன்படுத்தலாம். எண்ணெயுடன் நொறுக்கப்பட்ட நிலக்கரியைக் கலந்த நீர்மக் கலவை வளிமமாக்கம் செய்யும் கருவிக்கு ஊட்டப்படுகின்றது. இங்கு ஹைடிரஜன் நிரம்பிய சூழ்நிலையில், இறுதியான வளிமப்பொருள் தேவைக்காக மூன்றில் இரண்டு பங்கு மீத்தேன் ஆக்கம் செய்யப்படுகின்றது. நீர்ம வளிமமாக்கம் செய்யும் கருவியில் ஆக்கப்பட்ட வளி மம் தூய்மையாக்கப்பட்டு, வினையூக்க வைத்த மீத் தேனேற்றத்தினால் குழாய்வழியாகச் செலுத்தக் கூடிய தரத்திற்கு உயர்த்தப்படுகின்றது. நீர்ம வளிம மாக்கப்பட்ட கரிப்பொருள் ஹைட்ரஜன் ஆக்கத் திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நிலக்கரிக் கரிப்பொருளிலிருந்து, ஹைட்ரஜன் ஆக்கம் செய் விக்க மூன்று முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வரு கின்றன. அவையாவன, நீராவி ஆக்சிஜன் முறை, நீராவி இரும்பு முறை, மின் வெப் அமைப்புகள் என்பனவாகும். படம் 23 இல், ஹைட்ரஜன் நிறைந்த வளிமத்தை ஆக்கம் செய்ய நீராவி இரும்பு அமைப்பினைப் பயன் படுத்தும் ஹைகேஸ் முறை காட்டப்பட்டுள்ளது. லக்க எரிபொருள் வாயு ஹைடிரஜன் வாயுவாக்கி காற்று உயர், பி.வெ.அ. வாயு $1300 F முன்வெப்பப்படுத்தும்- செலவழிக்கப் அமைப்பு பட்டதயாரித்தவாயு 'ஹைடிரஜனும் 1000ps நீராவியும் குறைப்பி ஆக்கம் 1000 |இரும்பு} ஆக்சி வரணி 1500 F +030318 வாயு தூய்மையாக்கமும் மீத்தேனேற்றமும் செய்யப் பட்டவாயு எஞ்சிய கரிப்பொருள் 2000F ஆக்கி 1000 திராவி காற்று 3000°F இரும்பு ஆக்சைட்டு சாம்பல் படம் 23. ஹைட்ரஜன் மிக்க வளிமத்தை ஆக்கம் செய்ய நீராவி - இரும்பு அமைப்பைப் பயன்படுத்தும் ஹை-கேஸ் முறை ஹைகேஸ் முறை. அமெரிக்க ஒன்றிய நாட்டின் உள்நாட்டுத் துறையின் நிலக்கரி ஆராய்ச்சிக்கான அலுவலகத்தின் உதவியுடன், பிட்டுமன் இயல்பு நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனம் நிலக்கரியை மூலப் பொருளாகப் பயன்படுத்தி உயர் பி.வெ.அ. குழாய்வழிச் செலுத்தத்திற்கான வளிமத்தினைத் உள்ள