உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 483

F ஆகியவை கலந்திருக்கும். குழாய்வழிச் செலுத்தத் திற்கேற்ற வளிமமாக ஆக்க, இவ்வளிமம் தரைபி லமைந்த ஒரு நிலையத்தில் செயல்முறைப படுத் தப்படுகின்றது. ஊடுருவ இடந்தராத இடைய்கத் தில் ஊடுருவ இடந்தரும் இயல்புடைய முறிவுற்ற நிலக்கரிப் படுகையில் மேற்கொண்ட முறையைச் செயற்படுத்தும்போது, வினைப்படும் பொருள் களுடன் நிலக்கரி நன்கு கலந்து, வளிமமாக்கம் முழுமையாக நடைபெறும். இத்தகைய அமைப்பில் வளிமங்கள் தப்பிச் செல்வதில்லை. படுகையில் கரியாக்கமும் நிகழ்வதில்லை. மேலும் முறிவுற்ற எல்லா நிலக்கரியும் வளிமமாக படுகையில் உள்ள மாற்றம் செய்யப்படுகின்றது. 1 அமையும் தொழில் வினை ஊடுருவ இடந்தராத சுற்றுப்புறம் ஆழத்தில் அமையும்போது, வினைப்படும் பொருள்களும். வினைப்பொருள்களும் முறிவுற்ற பகுதியிலிருந்து தப் பிச் செல்வது குறைகின்றது. மேலும் இத்தகைய சூழ் நிலையில் உயர் அழுத்தத்தின் காரணமாக மீத்தேன் உருவாக்கம் இயல்வதாய் அமைகின்றது. மேலி ருந்து கீழ்வரையில் குத்துநிலை வளிமமாக்க அமைப்பினால் வெப்பச் சுழல்முறையில் நிலைப்பான் வினைப்படும் பகுதி உண்டாகின் ன்றது. இதனு டன் ஒப்பிடும்போது கசிவுமுறைத் நுட்பத்தில் பக்கம் நோக்கி யமைந்த பகுதியில் மறைமுகமான நிலையற்ற தன்மை உண் டாவதைக் காணலாம். தொடர்ந்த இயக்கத்தின் வழியாக ஒரு நாளைக்கு 250 மில்லியன் தரப்படுத்தப்பட்ட பருமன் அடி வளிமத்தை ஆக்கம் செய்ய, ஒவ்வோர் ஆண்டும், அத்தகைய பகுதியை உண்டாக்கி வளிமமாக்கம் செய்வது கட்டாயமா கின்றது. அலுமினியம் ஏற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டு, எரிபொருள் எண்ணெய் உள்ள வெடிபொருள் சிறப்பாக அமைகின்றது. 20 மீ இடைவெளித்தொலைவுகளிலமைந்த 60 செ.மீ. விட்ட முடைய துளைகளில் வெடிபொருளை நிரப்பி வெடிக்க வைக்கும்போது அது நிலக்கரிப் படுகையை நன்கு முறிவுறச் செய்யும். குழாய்வழி வளிமமாக்கத்திற்கான தரை நிலை யத்திற்கு, ஓர் ஆக்சிஜன் நிலையம், ஒரு நீர் நிலையம், ஒரு வளிமத்தைச் செயல்முறைப்படுத்தும் நிலையம் ஆகியன வேண்டும். தரையில் சிறிதளவு தொலைவில மைந்த நீர்ப் படுகைகளிலிருந்து எக்கியின் வழியாக நீர் மேலேற்றப்பட்டு ஒரு குளத்தில் தேக்கி வைக்கப் பட்டுப் பின்னர் நிலத்தடிக்கு எக்கிவழியாகச் செலுத் தப்படுகின்றது. தரையில் அமைந்த வளிமமாக்கிகளுக் குத் தேவையாகும் உயர்பண்புடைய நீரைப் போன்று நிலத்தடிப் படுகையில் வளிமமாக்கத்திற் குத் தேவையாகும் நீர் உயர் பண்புடையதாய் இருக்க வேண்டியதில்லை. மேலும் இதற்காக நீர்பற்றாக் குறை உள்ள இடங்களில் நல்ல தரைநீரைப் பெறு வதற்குப் போட்டியிடும் கட்டாயம் ஏற்படுவதில்லை. அ.க. 3-31அ ஆற்றல், நிலக்கரி 483 சிறிது உப்பான தரையிலிருந்து சிறிதளவு ஆழத் திலே அமைந்த நீரே போதுமானதாகும். இம்முறை யில் எதிர்பார்க்கப்படும் சுற்றுப்புற மாசுறும் பிரச் சினைகள் எதிர்பார்த்த அளவிற்கு அமைவதில்லை. அடிப்படை ஆய்வுகள் நம்பிக்கையூட்டுவனவாக அமைகின்றன. நான்கு முக்கியமான தொழில்நுட்பக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கேற்றவாறு ஆராய்ச் சியும் உருவாக்கத்திட்டமும் வடிவமைக்கப்பட்டுள் ளன. அவையாவன, தகுந்த இடங்கள் இருக்கின் றனவா, வளிமமாக்க முறையினைச் செயற்படுத்தும் பகுதியின் வழியாகப் போதிய ஊடுருவ இடம் தரும் இயல்புடையதாய் நிலக்கரிப் படுகையை முறி வுக்கு உள்ளாக்க முடியுமா, ஒரு வினைப்படும் பகு தியை உருவாக்கிக் கட்டுப்படுத்தமுடியுமா, இத்தகைய முறையை வணிக அளவில் செயற்படுத்த முடியுமா என்பனவாகும். உலோகச் செயல்முறைக்கான கோக் ஆக்கம் உலோகச் செயல்முறைக்கான கோக்கினை ஆக் கம் செய்ய மூன்று பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவையாவன, கோக் ஆக்கத்தின் காரணமாக வளிமண்டிலக் காற்று மாசுறுதல், உலோகச் செயற்பாடுகளுக்கான குறைந்த கந்தகம் நிலக்கரி வளங்கள் குறைதல், ஆற்றல் மூலங்கள் கிடைக்கப்பெ பறுவது குறைதல் ஆகியன வாகும். கொண்ட அமெரிக்க நாட்டின் நிலக்கரி ஆராய்ச்சிக்கான அலுவலகத்துடன் அமெரிக்க நாட்டின் எஃகுக் கழ கம் கோக் ஆக்கத்திற்காகக் கரியாக்கும் ஹைட்ரஜ னேற்ற முறையினை உருவாக்கிவருகின்றது. இம் முறைக்கான பதப்படுத்தாத நிலக்கரி நிலக்கரி தேவை யான அளவிற்கு நிலக்கரி உருவாக்கும் நிலையத்தில் உருவாக்கப்பட்ட பின்னர், இருபகுதிகளாகப் பிளக்கப்படுகின்றது. கரியாக்கத் தொகுதியின் வழி யாகப் பகுதி அளவு நிலக்கரி பதப்படுத்தப்படு கின்றது. இங்கு இத்தொகுதியில் நிலக்கரியில் எளி தில் ஆவியாகும் பொருள்கள் நீக்கப்பட்டுப் பின்னர், பகுதி அளவு கந்தக நீக்கம் செய்யப்பட்ட பின்னர், கரிப்பொருளாக்கப்படுகின்றது. இக்கரிப்பொருளே உலோகப் பொருள்களின் செயற்பாட்டிற்குத் தேவை யான கோக்கினை ஆக்கம் செய்வதற்கான அடிப் படைப் பொருளாக அமைகின்றது. ஒருமுறையில் பெறப்பட்டுக் கொண்டு செல்லும் எண்ணெயுடன், நிலக்கரியின் இரண்டாம் பகுதியைச்சேர்த்து நீர்மக் கலவை ஆக்கி ஹைட்ரஜனேற்றம் செய்து பெரும்பான்மையான நிலக்கரி நீர்மமாக்கப்பட்டு விடுகின்றது. இதன் எளிய பாய்வு வரை படம், படம் 34 இல் காட்டப்பட்டுள்ளது. கரியாக்கத்தின் வழியாகவும், ஹைட்ரஜனேற்றத் தின் வழியாகவும் பெறப்பட்ட நீர்ம விளைபொருள் கள் ஒன்று சேர்க்கப்பட்டு, மைய நீர்மச் செயற்படுத்