உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 ஆற்றல்‌, நிலவெப்ப

484 ஆற்றல், நிலவெப்ப நிலக்கரி நிலக்கரி ஆக்கம் திண்மம் அல்லது நீர்மம் கரியாக்கம் அரி DOO COCdoeccancecocoo கோக் ஆக்கம் நீர்மத் தூய்மிப்பு உலோகவியல் கோக் உருண்டைகள் (effluent gases) ஒன்று திரட்டப்பட்டு, அம்முறை யில் மீண்டும் கொண்டுவரப்படுகின்றன. இவ் வாறாக இந்த இயக்கங்களின்போது, எளிதில் ஆவி யாகும் பொருள்களின் வெளியேற்றம் (voltatile matter delivery) குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. மேலும் சுற்றுப்புற வளிமண்டலம் மாசுறுவதில்லை. பொது அமைப்பின் வழியாக எல்லா இயக்கங்களி நீர்மஎரிபொருள் லிருந்தும் உண்டாகும் வளிம விளைபொருள்கள் செயல்முறைப்படுத்தப்பட்டு வேதியியல் ஊட்டப் பொருள்களும் குறைந்த கந்தகம் கொண்ட வளிம எரிபொருள்களும் மறுசுழற்சிக்கான ஹைடிரஜனும் வழங்கப்படுகின்றன. வேதித் தீவனம் வேதித் தீவனம் ஹடிரஜ வளிமம் னேற்றம் வளிமம் வளிமத் தூய்மிப்பு வளிம எரிபொருள் COCOM படம் 34. தூய கோக் செயல்முறையின் எளிய விளக்கப் படம் நீர்ம தும் தொகுதி வழியாகச் செயல்முறைப்படுத்தப்படு கின்றது. இத் தொகுதியில் நீர்மங்கள் செயல் முறைப் படுத்தப்பட்டு,குறைந்த கந்தகம் கொண்ட எரிபொருள்களாகவும் வேதியியல் ஊட்டப் பொருள் களாகவும் எண்ணெய் பகுதிப் பொருள்களாகவும் ஆக்கம் செய்யப்படுகின்றன. இவை, இம் முறையின் மற்ற பகுதிகளுக்கு மீள்சுழற்சிக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. மீள் சுழற்சிப் பின்ன எண்ணெய் ஒன்று ஹைடிரஜனேற்ற வினைக்குத் தேவையாகும் பொருளைக் கொண்டு செல்லும் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகின்றது. இரண்டாவது மீள்சுழற்சி எண்ணெய் கரியாக்கம் செய்யும் கருவிக்கு அனுப்பப் பட்டுப் பிட்ச் கோக்காக (நிலக்கீல் கோக்காக) மாற்றம் செய்யப்படுகின்றது. பிணைப்பிற்காகப் பயன்படும் மூன்றாவது மீள் சுழற்சி எண்ணெயுடன், நிலக்கீல் கோக்கும் கரிப்பொருள் கலவையும் கலக்கப் பட்டு, அக்கலவை கோக் உருவாக்கும் தொகுதியில் சிறு உருண்டைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இவ் வுருண்டைகள் பின்னர் சூட்டினால் கெட்டியாக்கப் பட்டு உலோகச் செயற்பாட்டிற்கான கோக்காக உருவாக்கப்படுகின்றன. இக்கோக்கில் வன்மையா னது, மரபுவழியில் கோக் ஆக்கம் செய்யும் முறை களில் உருவாக்கப்பட்ட ஊ ஊதுலை கோக்கின் பண் பிற்கு இணையானதாகும். இறுதியான கோக்கின் வழியாகக் கரிப்பொருள் ஆக்கத்திலிருந்து தோன்றும் கோக் உருவாக்கும் சுழற்சி மூடிய அமைப்பாகச் செயல்படுத்தப்பட்டு, அதிக வெளியாகும் வளிமங்கள் நூலோதி ஜெ.சு. 1. Considine, D.M., Handbook of Energy Techno- logy, McGraw-Hill Book Company, New York, 1976. 2. Averitt, P., Coal Resources of Unites States, U.S. Geological Survey Bulletin, 1275, U.S, Government Office, Washinton D.C., 1960. ஆற்றல், நிலவெப்ப நிலக்கோளத்தின் எரிமலைப் பகுதிகளிலும், நிலப் புறப்பகுதி மடியும்போது உருவாக்கப்பட்ட இளமை யான மலைப் பகுதிகளிலும் இயற்கையாகத் தோன் றக் கூடிய நீராவியிலிருந்தும் வெப்ப நீரிலிருந்தும் பெற்றுப் பயன்படுத்தக் கூடிய ஆற்றலே நிலவெப்ப energy) ஆற்றல் (geothermal ஆகும். வெப்ப நீரூற்றுகளும் (hot springs) நீராவித் துளைகளும் (steam vents) உயர் வெப்ப நிலையில் வளிமங்களை யும் ஆவிகளையும் வெளியிடும் எரிமலைப் பகுதியி லுள்ள துளைகளும் (fumaroles) பாறையுடன் அடி நிலநீருடன் தொடர்பு கொண்டு தடையற்ற பாய்வு இல்லாமற் போகும்போது வெப்பத்தின் காரணமாக நீராவி ஆக்கப்பட்டு நிலப்பரப்பின் மீது நீராவி யாகவும், வெப்ப நீர்த்தாரையாகவும் அடுத்தடுத்து வெளிப்படும் வெந்நீரூற்றுக்களாகவும் (geysers ) நிலவி வருகின்றன. புத்துயிரூழிக் காலத்தின் (cenozoic) பிற் பட்ட காலத்தில் எரிமலை இயக்கம் இருந்த நிலப்பகுதி களில் நிலவெப்ப ஆற்றலைப் பெறுவதற்கான பணி கள் முன்னேற்றமடைந்து வருகின்றன. உலக ஆற் றல் தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போது கிடைக் கக் கூடிய நிலவெப்ப ஆற்றல் உலகின் ஒரு சில பகுதிகளிலே மட்டும் அடங்கியுள்ளதைக் காணலாம். நடைமுறைப் பயன்பாட்டில் பெறத்தக்க நில வெப்ப ஆற்றலளவு குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த அளவு அடிக்கடி மிகைப்படுத்திக் கூறப்படு