ஆற்றல், நிலவெப்ப் 499
அமைப்பில் வெப்பநீர், வெப்பப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பின்னர்க் கழிநீர் அமைப் பிற்கு (sewage system) வெளியேற்றப்படுகின்றது. வெப்ப நீரின் 80 முதல் 90° செ.வரையிலான பகிர்ந் திடும் வெப்ப நிலை இடைவெளி விரும்பத்தக்கதாகும். இந்த நீர் பயன்படுத்தப்பட்ட பின்னர் 40° செ. வெப்ப நீர்ச் வெப்பநிலைக்குக் குளிர்கின்றது. சுமையின் (hot water load) ஒவ்வொரு நாளின் வேறுபட்ட தேவைகளைக் கவனத்தில் கொண்டு, அந் நிலைகளுக்கு உதவுவதற்கு ஏற்றவாறு பகிர்ந்திடும் அமைப்பிற்கான நீர் வழங்கும் முதன்மைக் குழாய்கள் தேக்கத் தொட்டிகளில் நீரை நிரப்பும் (படம் 11). பகிர்ந்திடும் அமைப்பில் தேவையான அழுத்தத்தை வழங்குவதற்கு நீருக்கு விசையை அளிக்கும் எக்கிகள் (booster pumps) வழக்கமாகத் தேவையாகின்றன. நகரத் தெருக்களில் நிலத்தடியில் பகிர்ந்திடும் வலை distribution net work) நிறுவப்பட்டுள்ளது. 7.62 செ.மீ. விட்டத்திற்கு மேற்பட்ட தெருக் குழாய் வழிகள் கற்காரை வழிகளில் (concrete channels ) பொருத்தப்பட்டுக் காற்றூட்டப்பட்ட கற்காரை யினாலோ. தாதுப் பொருள் இழைகளாலோ (உருகிய பாறையின் வழியாக நீராவித் தாரையைச் செலுத்தி உண்டாக்கப்பட்ட கனிமப் பொருள் இழைகள்) - காப்பிடப்பட்டுள்ளன. கற்காரையினா லான வடி நீர்க் குழாய்களுடன் (drain pipes) கற்காறை வழிகள் கடினமான உள்ளகத்தில் (hard- core) பதிக்கப்பட்டுள்ளன. இவ்வழிகளின் குறைந்த சரிவு (minimum inclination ) 5/. அளவில் வைக்கப் பட்டுள்ளது. தெருச் சந்திப்புகளில் கற்காரை அறை களில் இவ்வழிகள் ஒன்று சேரும். இவ்வறையில், கட் டுப்பாட்டிதழ்களும் இணைக்கும் மரையாணிகளும். குழாய் விரிவாக்க இணைப்புக்களும் (expansion joints) வைக்கப்பட்டுள்ளன. இவ்வறைகள் றோட்ட வசதியினைக் கொண்டு, தேங்கும் நீர் அடிப் புறமாக வடிப்பதற்கேற்றவாறும், அவ்வாறு இயலா மற் போகும்போது, எக்கியினைக் கொண்ட தேக்கப் பள்ளத்தையுடையவாயும் இருக்கும். சிறிய விட்ட அளவினைக் கொண்ட தெருக் குழாய் வழிகளையும் தெருக்குழாய் வழிகளிலிருந்து வீடுகளுக்கான குழாய் வழிகளையும் பாலியூரித்தேன் நுரைக்காப்பீட்டுப் பொருளால் காப்பீடு செய்யலாம். காற் உள்ளூர் தட்ப வெப்பநிலைக்கேற்றவாறு, ஒருங்கிணைந்த வெப்பமூட்டும் அமைப்பினை (dis- trict heating system) உருவாக்க வேண்டும். ஆண்டு முழுவதற்கும், ஒவ்வொரு நாளுக்குமான வெளிப்புற வெப்பநிலை வேறுபாடு இதன் முதன்மைச் சிறப் பியல்பாக அமைகின்றது. வீடுகளுக்கான ஒவ்வொரு வெப்பமூட்டும் அமைப்பும், மிகவும் குளிர்ச்சியான நாளில் வீட்டில் இருப்பதற்கேற்ற வசதியினை வழங் கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நிலை யைப் பெறுவதற்கு, எல்லா நேரங்களிலும் சிறிதள க. 3-32அ ஆற்றல், நிலவெப்ப 499 விலான கூடுதல் கொள்ளளவினைக் கொண்டதாய் வெப்ப மூட்டும் அமைப்பு அமைய வேண்டும். அத்தகைய அமைப்புகளில், நில வெப்பத் திறன் வழியாக அறைகளை வெப்பப்படுத்துவதற்கான (space h ating) இறுதியான செலவு, பெருமத் தேவை வெப்பப்படுத்தும் அளவிற்கு, அளவொத்த தாய் (proportional to the maximum capacity requ- ired) அமையும். எனவே ஆண்டுச் சுமைக் கூறினை annual load factor) உயர்த்துவதற்கு வேறுபட்ட அணுகு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. படுத்திய மொத்த ஆற்றலுக்கும் (total energy) அடிப் படை வடிவமைப்புத் திறன் அளவிற்கும்(basic design capacity) உள்ள விகிதம் ஆண்டின் சுமைக் கூறாக வரையறை செய்யப்படுகின்றது. பயன்படுத்தப்படும் சில முறைகளாவன, பயன் 1 ஓர் ஆண்டில் மிகவும் குளிர்ச்சியான நாளில் உள்ள வெளிப் புற வெப்ப நிலையைக் காட்டிலும் சிறிது அதிகமான வெளிப்புற வெப்ப நிலைக்கு அமைப்பு வடிவமைக்கப்படுகின்றது. இத்தகைய அமைப்பில் ஒவ்வோர் ஆண்டிலும் சில நாட்களில் மற்ற மூலங்களிலிருந்தும் கூடுதலாக வெப்பப்படுத்த வேண்டிய தேவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. 2. இத்தகைய அமைப்பில் மிகவும் குளிர்ச்சி யான காலங்களில் நீரின் வெப்ப நிலையை உயர்த்து வதற்கு, புதை படிவு எரிபொருள் வழியாகக்கூடுதல் வெப்பம் வழங்கும் ஒரு துணை அமைப்பு (fossil - fuel booster ) இருக்க வேண்டும். 3. இத்தகைய அமைப்பு உட்புற நில வெப்ப நிலத்தடித் தேக்கத்தினைக் தேக்கத்தினைக் (geothermal under ground reservoir) கொண்டு துளையிடப்பட்ட துளைகளில் ஆழ் கிணற்றிக்கான எக்கி நிறுவப்பட்டி ருக்கும். எக்கியின் வழியாக நீர் வெளியேற்றப்படு வதன் காரணமாக நீர்மட்ட அளவு குறைவதால். கூடுதலான ஆக்க அளவினை குறிப்பிட்ட காலத்திற்கே இந்த அமைப்பினால் வழங்க இயலும் பொதுவாக, மைய வெப்பமூட்டும் அமைப்புகள் (central heating systems ) வீடுகளுக்குப் பயன்படுத் தப் படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு, வெப்ப நீர் நேரடியாக வழங்கப்படுகிறது. இவ்வெப்ப நீரி னைப் பயன்படுத்திய பின்னர்க் கழிவுநீர்க் கால்வா யில் வெளியேற்றப்படுகிறது. குழாய் வடிமுனைகளில் வீட்டிற்கான வெப்பநீர் நேரடியாக வழங்கப்படு கின்றது. பாய்வினை உணரி (flow sensor) நீர்ப் பாய்வினைப் பதிவு செய்யும் கருவிக்கும் (register mechanism) இடையில் காந்த இணைப்பினைக் கொண்ட இறுதியாகப் பெற்ற நீரின் அளவைக் காட்டும் அளவைமானி (inferential water meters with magnetic coupling) அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது. காப்பு முத்திரையிடப்பட்ட பெருமப் பாய் வினைக் கட்டுப்படுத்தும் கருவிகள் (maximum flow