ஆற்றல், நிலவெப்ப 505
நிலப்புறப் பகுதியிலமைந்த புறணியுடன் (mantle) மென்பூச்சுக்களைக் கொண்டு இணைக்கப்பட் டுள்ளன என்றும் கருதப்படுகின்றது. பெருங்கடல் சார்ந்த பாறைப் பகுதி மண்டிலம் 75 முதல் 100 கிலோமீட்டர் தடிப்பினையுடையதாயும் கண்டப் பகுதியைச் சார்ந்த பாறைப்பகுதி மண்டிலம் (con- tinental lithosphere) 150 கிலோ மீட்டர் தடிப்பினை யுடையதாயும் உள்ளன. நிலத்தின் புறப்பரப்பில் மைந்த பாறைப் பகுதி மண்டிலத்திற்கும் அடியி லுள்ள பகுதி பாறையடிமண்டிலம் (athenosphere) என்றழைக்கப்படுகிறது. மாறு பாறையடி மண்டிலம் எவற்றால் ஆக்கப் பட்டுள்ள தென்பதை இன்னும் கண்டறியவில்லை. ஆனால் நில நடுக்கக் குறிப்புகள் (seismic data) இப் பகுதியின் மேற்புறம் பகுதி அளவில் உள்ளதென்றும். இதனுடைய கீழ்ப் பகுதியில் பல அடர்த்தி பாடுகள் (density transitions) அமைந்த பகுதிகள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன. பெருங்கடல் சார்ந்த விளிம்புகளின் பட்டை நெடுகிலும் (along the belt of oceanic ridges) இத்தட்டுகள் யாவும் ஓர் ஆண் டிற்குச் சில சென்டி மீட்டர் வீதத்தில் விலகி நகர்ந்து, இடை டைவெளியை உண்டாக்கி வருகின்றன. புதிய புற ணியாகப் பாறைக் குழம்பு இந்த இடைவெளிகளை நிரப்புகின்றது. விளிம்புகளுக்கு அப்பால், தட்டுகள் செல்லும் திசையை நோக்கியே, இத்தட்டுகள் யாவும் குவிய வேண்டும். ஒரு தட்டு மற்றொன்றின் கீழே புதைவுறுகின்றது. இந்த எல்லைகளில் ஆழமான கடல் சார்ந்த பள்ளங்கள்(oceanic trenches)உருவாகின்றன. இந்தப் பள்ளங்களுக்கும் அடியில் எரிமலை வட்டவில் கள் (volcanic ares) உண்டாகின்றன. இவற்றுடன் இணைந்ததாய். மிகக் குறைந்த நிலநடுக்கம் முதல் மிக அதிகமான நில நடுக்கம் ஏற்படும் நிலை தோன் றுகின்றது. இத்தகைய எல்லையில் ஜப்பான், இந்தோ னேஷியா, காம்சட்கா (Kamchatcka) அலியூஷியன் முந்நீரகங்கள் (Aleutian peninsulas)தென் அமெரிக்கா வின் ஆண்டிஸ் மலைத்தொடர் ஆகியன அடங்கும். கண்டப் பகுதியின் மேலோட்டில் (continental crust ) மென்பூச்சினைக் கொண்ட இரு தகடுகள் குவியும் போது புற ஓடு அடர்த்தி குறைந்ததாய் புதைவுறா மல் அமைகின்றது. தள்ளுவிசைப் பெயர்ச்சிப் பிளவு களும் (thrust faulting). மடிப்புகளும் (folding) நிலமேலோடு தடிப்புறுவதும், இந்த இடைவெளி களைக் காட்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, இமய மலைத் தொடர்ப் பகுதிகளையும், ஆல்ப்ஸ் மலைத் தொடர்ப் பகுதிகளையும் கூறலாம். தட்டு பரவுதலோ, இடைவெளிகளில், புதைவுறுதலோ தோன்றாதபோது, இத் தட்டுகள் ஒன்றின் மீது ஒன் றாக நழுவி நகர்ந்து பெரிய முறிவுகள் தோன்று வதற்குக் காரணமாய் அமைகின்றன. இம் முறிவுகள் மாற்றுப் பெயர்ச்சிப் பிளவுகள் (transform faults) என்றழைக்கப்படுகின்றன. சான் ஆண்டிரியாஸ் ஆற்றல், நிலவெப்ப 505 பெயர்ச்சிப்பிளவு அமைப்பு (San Andreas fault sys- tem) இதற்கு முதன்மையான எடுத்துக்காட்டாகும். இப்பெயர்ச்சிப்பிளவு அமைப்பு கலிபோர்னியா வளை குடாவிலிருந்து ஓரிகான் கலிபோர்னியாக் கடற்கரைக் குத் தொலைவிலமைந்த கோர்டா விளிம்புவரை நுழை யும் கிழக்குப் பசுபிக் விளிம்பினை இணைக்கின்றது. இது அமெரிக்கத் தட்டிற்கும் பசுபிக் தட்டிற்கும் இடை. யில் அமைந்த எல்லையைக் காட்டும். தட்டுகளின் விரிவாக்கம் ஆழமான கடலில் அமையும் கடல் முகடுகளுக்குள் (ocean ridges) அடங்கும். செங்கட லும் (red sea) கலிபோர்னியா வளைகுடாப் பிளவு களும் (rifts) கடந்த சில மில்லியன் ஆண்டுகளுக் குள்ளேதான் உண்டாகியிருக்கக் கூடும். மேலும் ஆழமான கடலை இன்னும் இதனால் உருவாக்க முடியவில்லை. பெரும் கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு (the great east african rifts) வழக்கத்திற்கு மாறா னதாகும். இதில் இப்பிரிவு கண்டப் பகுதியைச் சார்ந்த பாறைப் பகுதி மண்டிலத்தினுள் தோன்று கின்றது. இந்நிலப் பிளவு தொடர்ந்து பரவும்போது, ஆப்பிரிக்கக் கண்டத்தை இறுதியாகப் பிளவுறச் செய்து புதிய கடல் படுகையினை (ocean loor) உண்டாக்கும். தட்டுகளின் இயக்கத்தைக் செயல்பட வைக்கும் இயக்க நுட்பம் புரிந்து கொள்ள இயல் வில்லை. ஆனால் இவ்வியங்கு நுட்பம் நிலப் புறணி யின் சுழல்வு இயக்கத்துடன் இணைந்ததாய்த் தோன் றுகின்றது. இயக்க அமைப்பு எத்தகையதாக இருந் தாலும், நிலத்தக வெப்பத்தினால் இதற்கான ஆற்றல் வழங்கப்படுகின்றது. பரவிடும் தட்டு எல்லை, குவிந்திடும் தட்டு எல் லைகளின் நெடுகிலும், பேரளவிலான நிலப்பரப் புக்குரிய வெப்பப் பாய்வு தோன்றுகின்றது.நிலப் புறப் புறணியிலிருந்து உருவாக்கப்பட்ட பாறைக் குழம்புகளிலிருந்து பெருத்த அளவில் வெப்ப மாற் றம் நில மேலோட்டிலமைந்த ஆழமற்ற நிலைகளுக் குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த வெப்ப மூலங்களிலிருந்துதான் நில வெப்ப அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. உலகின் உயர் தொகு வெப்ப அடக்கத்தைக் (enthalpy) கொண்ட வளம் வாய்ந்த நில வெப்ப வளாகங்கள் நில இயற் கூறின் இளமை எரிமலையமைந்த பட்டைக்குள்ளும் நிலத் தின் புறப் பரப்பிலமைந்த பாறைப் பகுதி மண்டிலத் தின் நகரும் தட்டுகளினால் உண்டாக்கப்படும் நில மேலோட்டின் மாறுபாடடைந்த பகுதிக்குள்ளும் காணப்படுகின்றன. யான அடிப்படை நில வெப்ப அமைப்புகள் அடிப்படை நில வெப்ப அமைப்புகள் நில மேலோட்டின் மேலமைந்த சில கிலோமீட்டர் தொலைவிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இதற் கான வெப்ப மூலம், இந்த ஆழத்திற்கும் கீழிருந்து தான் கிடைக்கின்றது. நில வெப்பப் பாய்மத்தில்