504 ஆற்றல், நிலவெப்ப
செறிவுற்ற நீராவி. 504 ஆற்றல், நிலவெப்ப செ 200- 190- 180- உயர்செறிவூட்டமுற்றகரைசல்கள் ஆவியாதல் ம்மோனியாவழியாக உறையவைத்தல் காகிதக் கூழ் வன் காகிதக்கூழ் பக்குவப்படுத்துதல் முறை 170 ஹைட்ரஜன் சல்பைட்டு சுனநீர் தயாரித்தல் ஈரணு நிலம் உலர்த்துதல் 1601 மீன் உலர்த்துதல் 150 பேயர் முறை அலுமினா மின்ஆக்க பண்ணைவிளைபொருள்களை உலர்த்தவும், 140-உணவுப் பொருள்களைத் தகர அடைப்புக் களில் அடைப்பதும். 130- ஈர்க்கரை தூய்மைப்படுத்தல் ஆவியாக்குதல் 120 வெப்ப நிலை இடைவெளி உப்புக் கரைசல் களைச் செறிவூட்டுதல், பன்மடங்கான ஆவியாக்கங்கள், வடித்துப் பகுத்தில் 110 இடைப்பட்ட வெப்ப நிலைகளின் வழியாக உறைய வைத்தல் 100 கடற்பாசிகள், புற்கள், காய்கறிகள், கரிமப் பொருட்கள் உலர்த்துவதற்கு 90 மீனை உறைவதைத் உலர்த்து வதற்குப் பனிக்கட்டி தடுப்பதற்கான 80- அறைகளை வெப்பப்படுத்துதல் 701 குறைந்த வெப்ப நிலையைப் பயன்படுத்தி உறையவைத்தல் செயல்கள் 60 செடிகொடிவீடுகளை வெப்பப்படுத்துதல் கால்நடைப் பராமரிப்பு 50 காளான் வளர்ப்பு 404 குளிர் நிலத்தை வெப்பமூட்டுதல் 30 நீச்சல் குளங்கள், உயிரினத் தரம் பிரித்தல், பனிக்கட்டி உறைவை தடுத்தல் நொதித்தல் 20 முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக மீன் பண்ணை படம் 13. நிலவெப்ப நீர் நீராவிப் பயன்பாடும் வெப்பநிலை இடைவெளியும் தற்போது இயக்கத்தில் இருந்து வரும் பெரிய தொழில் நிலையங்கள், நில வெப்ப ஆற்றல் பல் துறைச் சார்புடைய ஆற்றல் மூலம் என்பதைப் பெரி தும் நிறுவியுள்ளன. செயல்முறை வெப்பப்படுத்து தல் அறைகளை வெப்பப்படுத்துதல், மின் திறன் ஆக்கம் ஆகியவை அதே ஒட்டுமொத்தமான அமைப் பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதற்குப் பல எடுத்துக் காட்டுக்கள் உள்ளன. நில வெப்ப ஆற்றல் மூலங்களில் பேரளவு வேறு பாடுகள் அமைவதனால், ஒவ்வொரு மூலத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவ்வாற்றலின் பெரி தும் உகந்த பயன்பாட்டினைப் பெற இயலும். இதற்கான சில பொதுக் கருத்துகள் வருமாறு. மின் ஆக்கம் முதன்மைக் குறிக்கோளாக அமையும் போது, ஈர நீராவியைப் பயன்படுத்தும் நிலையங்களி லிருந்து கழிவு நீராவியைப் பயன்படுத்துவதற்கு மிகுந்த அளவு வாய்ப்புக்கள் உள்ளன. இத்தகைய இடங்களில் உயர் வெப்ப நிலைகளில் நில வெப்பத் தினை அறைகளை வெப்பப்படுத்துவதற்காகவும், புதிய நீர் ஆக்கத்திற்காகவும், மற்றும் சில தொழிற் சாலைகளிலும் பயன்படுத்தலாம். அறைகளை வெப்பப்படுத்துவது முதன்மை யான குறிக்கோளாக இருக்கும்போது, துணை மின் ஆக்கம் சில வகைகளில் இயல்வதாகும். பசுஞ் செடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடுகள், நிலத்தை வெப்பப்படுத்துதல், நீச்சல் குளங்களை வெப்பப் படுத்துதல், போன்ற பல துணைப் பயன்பாடுகள் உள்ளன. நில வெப்ப ஆற்றல் மூலத்தைச் சார்ந்து செயல்முறை வெப்பப் படுத்துதல் முதன்மையான குறிக்கோளாக அமையும்போது, தேவையான மின் ஆக்கம் இயல்வதாகும். மேலும் மற்ற வகைகளைப் போன்றே, துணை வெப்பப்படுத்தும் பயன்பாடு களுக்கான வாய்ப்புகள் மிகுந்த அளவில் வழக்க மாக அமைகின்றன. நில வெப்ப அமைப்புகளின் நில இயல் கடந்த சில ஆண்டுகளாக, நிலத்தின் சில நூறு கிலோ மீட்டர்களுக்கான புதியதொரு கருத்து உரு வாக்கப்பட்டுள்ளது. இக்கருத்தில் நிலக் கட்டமைப் பைச் சார்ந்த தட்டுப் படிமம் (plate tectonic model) இடம் பெறுகிறது. இத்தகைய கருத்தில், கடற்படுகை யுடன் (sea flor) நிலப் புறப்பரப்பு, பல உறுதியான தட்டுகளாகப் (rigid plates) பிரிக்கப்பட்டுள்ள தென் றும் இத்தட்டுகள் யாவும், ஒன்றையொன்று சார்ந்து நகர்கின்றனவென்றும் கொள்ளப்படுகின்றன. பெருங் கடல் சார்ந்த மேலோட்டினையோ, கண்டப் பகுதி யைச்சார்ந்த மேலோட்டினையோ (oceanic or con- tinental crust) இரண்டையுமோ நிலத்தின் புறப்பரப் பிலமைந்த பாறைப் பகுதி மண்டிலத்துடன் ஒன்று சேர்ந்து இத்தட்டுகள் அமைகின்றன. இத்தட்டுகள்