உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்‌ஃ.பிஸ்ட்டோம்‌ குடல்‌ புழுநோய்‌ 29

(newton) அளவு விசையை உண்டாக்கினால், பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓரலகுமின்னோட்டம் ஆகும். இது ஓர் ஆம்பியர் என்று வரையறுக்கப்பட் டுள்ளது. கூலும்பு (coulomb) அளவு மின்னூட்டம் (charge) கடத்தியின் வழியே ஒரு நொடி நேரத்துக்குப் பாய்ந்தால் அம் மின்னோட்டத்தின் அளவு ஆம்பியர் என்றும் வரையறுக்கலாம். (ஒரு மின் காந்த அலகு மின்னோட்டம், ஒரு மின்காந்த அலகு மின்னூட் டம் என்று அழைக்கப்படுகிறது). மின்காந்த அலகு மின்னூட்டம் நிலைமின் அலகு மின்னூட்டத்தை விட' மடங்கு அதிகமானது (1.மி. கா. அலகு மின் னூட்டம் = cx 1நி.மி. அலகு மின்னூட்டம். இங்கு c என்பது ஒளியின் வேகம்; அதன் மதிப்பு 3×10மீ. நொடி). நூலோதி பா. வெங்கடரமணி 1. ஆண்ட்ராடே, ஈ.என்.தா.சி., தமிழாக்கம் எஸ். சங்கரன் பௌதிக இயல். தமிழ்ப் பண்ணை, Gooi onour, 1966. க 2. தங்கராஜ், எம்.ஏ., மின்சாரம்-சக்தியின் சரிதை, தென்னிந்திய சயன்ஸ் கிளப், ஹிக்கின் பாதம்ஸ் (பி) லிமிடெட், சென்னை, 1966. 3. சவரிமுத்து, பா. இலகு பௌதிகம், ஹிக்கின் பாதம்ஸ் (பி) லிமிடெட், சென்னை, 1966. 4.ராவ், வி.வி.எல்., தமிழாக்கம், பொ. திருகூட சுந்தரம், எம்.ஏ.பி.எல், மின்சாரமும் அன்றாட வாழ்வும், வாணிப் கலை புத்தகாலயம், சென்னை, 1966. 5. கான்முகம்மது, எம்., மின்சாரம், மதுரைப் பதிப் பகம், மதுரை, 1964. ஆம்பிலிகோனைட்டு லித்தியத்தின் முக்கிய கனிமம் ஆம்பிலிகோனைட்டு (amblygonite). இதன் வேதியியல் உட்கூறு லித்தியம். சோடிய, அலுமினியப் பாஸ்ஃபேட்டு (Li, Na, Al(PO,) (F,OH) ) ஆகும். லித்தியத்திற்கும் சோடியத் திற்கும் இடையில் பரிமாற்றங்கள் நிகழ்தல் உண்டு. ஃபுளுரினுக்கும் (fluorine) ஹைடிராக்சைடுக்கும் (OH) இடையிலும் பரிமாற்றங்கள் நிகழ்தல் உண்டு. இவ் வகையான பரிமாற்றங்கள் ஆம்பிலிகோனைட்டு என்ற கனிமத் தொகுதியை (amblygonite mineral group) உருவாக்குகின்றன. இது முச்சரிவுத் தொகுதி யில் படிகமாகின்றது. படிகங்கள் குட்டையாகவும், பட்டக வடிவமாகவும், மஞ்சள், பச்சை, பழுப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. i11 என்ற பக்கத்தை இரட்டுறல் பக்கமாகக் கொண்டது. இதில் மூன்று வகைப் பிளவுகள் காணப் படுகின்றன. 011 பக்கத்தில் தெளிவான பிளவும், 110 பக்கத்தில் நல்ல பிளவும், 100 பக்கத்தில் ஒழுங் ஆம்ஃபிஸ்ட்டோம் குடல் புழுநோய் 29 கான பிளவும் காணப்படுகின்றன. இதன் கடினத் தன்மை 6. இதன் அடர்த்தி 3 முதல் 3.1 வரை மாறு படும். இதன் மீன்மைக்கெழு 7. இது அடர் கந்தக அமிலத்தில் கரையும். இதன் ஒளித்தளம் (optic plane) 011 என்ற பக்கத்திற்கு 12° கோணத்திலும், 110 பக் கத்திற்கு 76° கோணத்திலும் உள்ளது. மேலும் அது 01) பக்கத்துடன் 76° கோணமும் 110 பக்கத்துடன் இடைப்பட்ட குறுங்கோணமும் (acute angle) கொண்டதாய் அமைகிறது. இது ஒளியியலாக எதிர் மறைக் கனிமமாகும். தன் விரைவொளி அச்சுக்கும், மெதுவொளி அச் சிற்கும் இடையில் உள்ள ஒளியியல் அச்சுக்கோணம் (2 v, optic axial angle) 50° ஆகும். இதன் ஒளிவிரவ லில் (dispersion) சிவப்பொளி அச்சுகளின் கோணம் (y) நீல அச்சுகளின் கோணத்தை (v) விட அதிக மானதாக (Y> v) இருக்கின்றது. இதன் ஒளி வில் கல் எண் (refractive index) விரைவொளி அச்சுக்கு (y) 1.598 ஆகவும். மெதுவொளி அச்சுக்கு (a) 1.578 ஆகவும், இடையொளி அச்சுக்கு (B) 1.593 ஆகவும் உள்ளது. இதன் அடர்த்தி எண் குறையும் போது ஒளியியல் கோணம் (optic angle) மிகும். இது பொதுவாகப் பெக்மட்டைட்டுகளிலும் (pegmatite) அமில அனற் பாறை வகைகளிலும் டூர்மலின், லித் தியம் கனிமங்களுடன் அடிக்கடிக்காணப்படுகின்றது. உலகில் தென்மேற்கு ஆப்பிரிக்காவிலும், தெற்கு க்கோட்டாவில் (South Dakota) உள்ள கருப்பு மலைகளிலும் இவை வெட்டியெடுக்கப்படுகின்றன. அ.வே. உடையனப்பிள்ளை டா நூலோதி Winchell, A.N., Winchell, H., Elements of Optical Mineralogy, Fourth Edition, Wiley Eastern Private Limited, New Delhi, 1968. ஆம்ஃபிஸ்ட்டோம் குடல் புழுநோய் ஆம்ஃபிஸ்ட்டோம் ஒட்டுண்ணிகள் தட்டைப்புழு இனத்தைச் சேர்ந்தவையாகும். இவ்வொட்டுண்ணி கள் ஆடு,மாடுகளின் இரைப்பையின் முதல் அறை யான ரூமன் (rumen) எனும் பகுதியில் வாழ் கின்றன. ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்கள் காண்ப தற்கு மாதுளை முத்துக்களைப் போன்ற சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை உருண்டையான வடிவம் கொண்டு, முன்புறமும், பின் புறத்தின் அடிப்பாகத்திலும் உறிஞ்சிகள் (suckers) எனப்படும் பிடித்துக் கொள்ளும் சுருக்குத் தசை களைக் கொண்டுள்ளன. உறிஞ்சிகளின் உதவியால் ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்கள் ஆடு, மாடுகளின் கூம்பின்